Pages

Showing posts with label கருத்துக்கள். Show all posts
Showing posts with label கருத்துக்கள். Show all posts

Saturday, 15 March 2014

தேவதாசும்,ஸ்வெங்கலியும்

ஓர் நாவல் எத்தகைய மாற்றத்தை வேண்டுமானாலும் ஒரு சமூகத்திலும் உண்டாக்கலாம்.ஒரு நாவலில் வரும் ஒரு கதாப்பாத்திரம் சில சமயங்களில் அழிவதேயில்லை.அந்த நாவலை படிக்காதவருக்கும் அதை பற்றிய ஒரு புரிதல் கண்டிப்பாக இருக்கும்.நம்மில் பலருக்கு சரத் சந்த்ர சத்தோபத்யாய் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. அது பற்றிய தேவையும் இல்லை. ஆனால் தேவதாஸ் பற்றி தெரியும் .

தேவதாஸ் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகப்போகிறது,அது ஒரு பெங்காளிய நாவல் ,தன் 17 ஆவது வயதில் அதை அவர் எழுதியுள்ளார் என்பது எல்லாம் நமக்கு தேவைப்படுவதில்லை. இருந்தும் தேவதாஸ் என்றவுடன் நமக்கு ஒரு கதாப்பாத்திரம் நம் கண் முன் விரிகிறது.தாடி வைத்தவனெல்லாம் இப்போது தேவதாஸ் என்கிற நிலை வந்துவிட்டது.இதுவரையில் 15 தடவைக்கு மேல் இதைத் தழுவி திரைப்படங்கள்  இந்திய மொழிகளில் வந்து இருக்கிறது.

இதே போல் ஆங்கிலத்தில் TRILBY என்று ஒரு நாவல் 1894 இல் எழுதப்பட்டது.நாவல் எழுதிய George Du Marier 1986 இறந்துவிட்டார்.கதையின் நாயகி பெயர் தான் Trilby. Trilby மீது Svengali காதல் கொள்கிறான். அவளோ little bille மீது காதல் கொள்கிறாள்.Little Bille அவள் காதலை ஏற்கிறான்.நம் காதல் நிராகரிப்பைவிட ரணமானது,ஏற்கப்பட்டை காதலை நாமே நிராகரிக்க நிர்ப்பந்தம் செய்யப்படுவது.

வருடங்கள் உருண்டோடுகின்றன.ஐரோப்பாவின் நகரங்களில் ஸ்வெங்கலியும்,ட்ரில்பியும் புகழ்பெற்ற பாடகர்கள் ஆகின்றனர்.ஸ்வெங்கலி overture conduct செய்ய ட்ரில்பி பாட துவங்குகிறாள்.ட்ரில்பியின் வசீகர குரலைக் கண்டு எல்லோரும் ஆச்சர்யமடைகின்றனர்.அவள் குரலில் இத்தகைய ஒரு மாற்றம் எப்படி நிகழ்ந்ததென லிட்டில் பில்லியால் நம்ப முடியவில்லை.அவளின் பழைய குரல் எப்படி இருக்கும் என இவர்களுக்கு தெரியும்

அவளின் லண்டன் கச்சேரிக்காக எல்லொரும் காத்துக்கிடக்கின்றனர்.அன்று ஸ்வெங்கலி conduct செய்யாமல் இருந்துவிடுகிறான்.ட்ரில்பியால் பாட இயவில்லை,அவள் முயற்சி செய்த போதும் 5 வருடங்களுக்கு முன் அவளிடம் இருந்த குரல் தான் வெளிப்பட்டது.ஸ்வெங்கலி இருதய செயலிழப்பால் இறந்து போகிறான்.

ட்ரில்பி பாடும் போதெல்லாம், ஸ்வெங்கலி ஒரு கருவியாக கூடவே இருந்து இருக்கிறான். உண்மையில் ஸ்வெங்கலி தான் எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தி இருக்கிறான்.கருவி தான் ட்ரில்பி. ஸ்வெங்கலி ஒரு ஹிப்னோஸிட்.ஸ்வெங்கலி இறந்தவுடன், கருவியால் தனித்து எதுவும் செய்ய முடியவில்லை.

1931 ஆம் ஆண்டு இந்த நாவலை தழுவி SVENGALI என்கிற பெயரில் ஒரு படம் வெளியாகிறது.ஸ்வெங்கலி என்பது அந்த நாவலில் வில்லன் போன்றதொரு கேரக்டர்.ஆனால் அந்த பெயர் தான் படத்திற்கு சூட்டப்படுகிறது.OXFORD அகராதியில் கூட நாவலில் வரும் ஸ்வெங்கலிக்கு மட்டும் தான் அர்த்தம் கொடுத்து இருக்கிறார்கள்.ஒருவரை ஒருவர் ஒரு தவறான காரியத்திற்காக ஹிப்னோடைஸ் செய்தால் அதற்கு ஸ்வெங்கலி எனப் பெயர்.பெரும்பாலும் ஒரு ஆண் , ஒரு பெண்ணை.இந்த நாவலின் நாயகன் பெயருக்கோ, இல்லை ட்ரில்பியின் பெயருக்கோ இப்படி எந்த விளக்கமும் இல்லை. இந்த வார்த்தையின் பயன்பாடே இந்த நாவலுக்கு பின் தான் வருகிறது.

இன்று வரையில் இந்த வார்த்தை , இங்கு தேவதாஸை போல் பயன்பாட்டில் இருக்கிறது.நாவல் இப்போது இல்லை, எழுதியவரும் அப்படியே. இருந்தும் அதில் வந்த ஒரு கதாப்பாத்திரம் இன்னமும் உயிர்ப்புடன் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.ஆங்கிலம் பேசும் அனைவருக்கும் ட்ரில்பி பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.இருந்தும் இன்னமும் நாம் இறந்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு வாழப் போகும் தேவதாஸர்களும் பற்றியும், ஸ்வெங்கலிகள் பற்றியும் தெரிந்து கொள்ள முயல்வோமாக.




Tuesday, 14 January 2014

திரைப்பட மேதைகள்

அனைத்து மக்களையும் சென்றக்கூடிய கலையாக இன்று வரையில் நீடித்து,ஏனையவற்றை பின் தள்ளி எஞ்சி நிற்பது சினிமா மட்டுமே.மக்களின் வாழ்க்கையில் அங்கமாகிட்ட ஒரு கலை தன் ஆரம்ப கால நிலையைவிட,தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தை தவிர, பிறவற்றில்,தன் தகுதியில் இருந்து கீழ் இறங்கிக்கொண்டே தான் செல்கிறது.கதை சொல்லும் பாணியில் மாற்றம் வந்து இருந்த காலம் போய்,இப்போதெல்லாம் கதையே சொல்லாமல் சினிமாக்கள் வெளிவருகின்றன.

Chaplin தன் பல படங்களில் பேசவில்லை.பேசும் சினிமாக்கள் எடுக்கப்பட்ட காலத்திலும்,ஒரு விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வசனங்கள் தேவை இல்லை என அவர் அதை ஒதுக்கியே வந்தார்.இருப்பினும் title cards மூலமாக அவ்வப்போது கதை சொல்லப்பட்டுகொண்டே இருக்கும்.Murnau மாதிரியான ஆட்கள் அத்தகைய title cardsஐ கூட குறைத்துக் கொண்டு  படம் எடுக்க முயன்றனர்.

இந்த புத்தகம் d.w.griffith, Stanley Kubrick, Alfred Hitchcock,William Wyler முதலான ஆங்கில இயக்குநர்களை பற்றி ஒன்றும் பேசாமல் விட்டுச்செல்கிறது.இதில்Stanley,Hitchcock பற்றியெல்லாம் இணையத்தில் ஏற்கனவே பலரும் எழுதிவிட்டது காரணமா என தெரியவில்லை.

விருது என்பது ஒரு படைப்பாளியை ஒன்றும் செய்வதில்லை.அவனுக்கு அவனின் எல்லா படைப்புகளுமே ஒன்றுதான்.பார்வையாளன் தான் விருது வாங்கியவற்றை சிறந்தது என எடுத்து கொள்கிறான்.இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுவுள்ள இயக்குநர்களின் அனைத்து படங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.ஒரு குழுவிற்கு மட்டுமே பிடித்து இருக்கும் ஒரு படம் சிறந்தது என சொல்லப்படுகிறது.சென்ற வருடம் அதிகம் சிலாகிப்பட்ட அல்ஃபோன்சோவின் க்ராவிட்டி படம் பல விருதுகளை கண்டிப்பாக குவிக்கும்.ஆனால் அவரின் பிற படங்கள் பற்றி யாரும் யொசிப்பதில்லை. சென்ற முறை ஆஸ்கர் விருது பெற்றது ஃபர்காடியின் Separation திரைப்படம்.இந்த முறை அவரது THE PAST திரைப்படம் ஆஸ்கரின் இறுதி பட்டியலில் கூட இல்லை.இது போன்று கடந்த நூறு ஆண்டுகளில் பல உதாரணங்கள் இருக்கிறது.


ஜெர்மனியின் மொர்னொவ்,லெனி;தன் 19 வயதில் இருந்து இன்று வரை படங்கள் எடுத்துக்கொண்டு இருக்கும் வெர்னெர்;டென்மார்க்கின் ட்ரெயர்; இயக்குநர்களின் இயக்குநராக போற்றப்படும் ஜப்பானின் கென்சி மிஜொகுச்சி, The Human Condition Triology, Harakiri முதலிய படங்களை எடுத்த மசாகி கோபயாசி ; ஃப்ரான்சின் ப்ரெஸ்ஸன் பற்றியெல்லாம் இதுவரையில் தமிழில் சினிமா பற்றிய எந்தவொரு புத்தகத்திலும் வந்ததாய் நான் படித்ததில்லை.



சினிமாவை ஒரு கலையாக நேசிப்பவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கலாம்.

முடிந்தால் இந்த 16 இயக்குநர்களின் அனைத்து படங்களையும் பாருங்கள்.(சில படங்கள் கிடைப்பதில்லை).இல்லையெனில் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சிறந்த படங்களை மட்டுமாவது பாருங்கள்.அதும் கடினமெனில் இவர்களின் பெயர்களையாவது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றேனும் பெருமை பீத்திக் கொள்ளவாவது உதவும்.

திரைப்பட மேதைகள் - எஸ்.ஆன்ந்த்
பதிப்பு-தமிழினி
விலை-450


Monday, 30 January 2012

நாகரீக முரண்

                                                    நாகரீகம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு என்ன பதில் சொன்னாலும் பொருந்தும்.சிந்து சமவெளியில் தொடங்கி இன்றளவும் தொடர்கிறது.இன்று நான் சொல்லும் பதில் நாளை தவறாகிவிடும்.. அது ஒரு மாற்றத்தின் கட்டாயத்தில் உள்ளது. தவறெனக்கொள்ளபடுவது சரியாவதும். சரி எனக்கொண்டது தவறாவதும் வாடிக்கை ஆகிவிட்டது..1950 களில் கடுக்கன் போடும் ஆண்கள் மத்தியில் போடாதவர்கள் குற்றவாளிகள் போல் பார்க்கபட்டனர்.  இன்றும் அதே நிலைமை. என்ன ஒரு சிறு மாற்றம் கடுக்கன் STUD  ஆகி உள்ளது. 

                   ஒரு குவளை அளவு அரிசியில் இருக்கும் அதே சத்துக்கள் தான் கோதுமையிலும் ஓட்சிலும் இருப்பதாக கேள்வி. 'உன் மண்ணில் விளையாத ஒரு உணவு பொருள் உன் உடம்பிற்கு ஒவ்வாது " என ராஜாஜி சொன்னதாக கேள்வி. மூன்று பதார்தத்திலும் நாம் சாப்பிடும் அளவு தான் வேறுபட போகிறதே ஒழிய வேறில்லை. ஏனோ நாம் பிறரின் பொருட்கள் மீது கொண்டிருக்கும் மோகம் குறைந்தபாடில்லை.. 

                ரவிக்கை இல்லாமல் இருந்த காலம் மறைந்து பின்னர் ரவிக்கைகளின் அளவு குறைந்து. தற்போது மீண்டும் அது இல்லாமல் அணிவது  கவர்ச்சி;நவநாகரீகம் என கொள்ளப்படுகிறது .. 

                நாம் சாப்பிடும் உணவு. சாப்பிடும் பொருள் என அனைத்தும் கால சக்கரத்தின் கீழ் சுழன்று  கொண்டே இருக்கிறது.. நம் கை விரலை விட கரண்டியும்; முட்கரண்டியும் சுத்தமானவை தான் என்பதில் எனக்கு  உடன்பாடில்லை. சுத்தம் இல்லை எனிலும் கூட பிறர் என் விரல்களை பயன்படுத்தி இருக்கபோவதில்லை .சர்வ பள்ளி  ராதாகிருட்டிணன் ஒரு முறை இங்கிலாந்து சென்ற போது சர்ச்சில் அவர்கள் விரல்களில் உணவு உண்ணும் ராதாகிருட்டிணனை கேலி செய்து இருக்கிறார். "எங்கள் ஊரில் கழுதை கூட கரண்டியில் தான் சாப்பிடும்" அதற்கு ராதாகிருட்டிணனின் பதில் அவரை ப்ளார் என அறைய வைத்தது. "நான் மனிதனாக இருக்க ஆசை". இந்த துணிவு நம்மில் எத்துனை பேருக்கு இன்று இருக்கிறது???
              
             நாகரீகம் என்பது தற்போது மாறுதலுக்கு உட்பட்டது என்பது களைந்து எதை செய்ய வேண்டுமோ அதற்கு முரணாக செய்ய வேண்டும் என கருத்தில் கொள்ளப்படுவது நம்மிடம் உள்ள இழிவு மனப்பான்மையையும்; பேதை தனத்தையுமே காட்டுவதாக இருக்கிறது. 

            நாகரீகத்தின் படி; தமிழ் சமுதாய நெறிகளின் படி வேட்டி;கோவணம்  கட்டுங்கள் என யாரும் சொல்வதில்லை. ஆடை நம் தேகத்தை மறைக்க உதவாமல் நம் அறிவை மறைக்க முயலும் போது அதை கழற்றுவது தவறில்லை.

               நாகரீகம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுவதே அன்றி பிறர் செய்வதை பிரதி எடுப்பது அல்ல.    நாம் நாமாக இருப்போம்.. 


                 இந்த் கட்டுரை katturai .COM இல் வெளியாகி உள்ளது
http://www.katturai.com/?p=1737