Pages

Tuesday, 14 January 2014

திரைப்பட மேதைகள்

அனைத்து மக்களையும் சென்றக்கூடிய கலையாக இன்று வரையில் நீடித்து,ஏனையவற்றை பின் தள்ளி எஞ்சி நிற்பது சினிமா மட்டுமே.மக்களின் வாழ்க்கையில் அங்கமாகிட்ட ஒரு கலை தன் ஆரம்ப கால நிலையைவிட,தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தை தவிர, பிறவற்றில்,தன் தகுதியில் இருந்து கீழ் இறங்கிக்கொண்டே தான் செல்கிறது.கதை சொல்லும் பாணியில் மாற்றம் வந்து இருந்த காலம் போய்,இப்போதெல்லாம் கதையே சொல்லாமல் சினிமாக்கள் வெளிவருகின்றன.

Chaplin தன் பல படங்களில் பேசவில்லை.பேசும் சினிமாக்கள் எடுக்கப்பட்ட காலத்திலும்,ஒரு விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வசனங்கள் தேவை இல்லை என அவர் அதை ஒதுக்கியே வந்தார்.இருப்பினும் title cards மூலமாக அவ்வப்போது கதை சொல்லப்பட்டுகொண்டே இருக்கும்.Murnau மாதிரியான ஆட்கள் அத்தகைய title cardsஐ கூட குறைத்துக் கொண்டு  படம் எடுக்க முயன்றனர்.

இந்த புத்தகம் d.w.griffith, Stanley Kubrick, Alfred Hitchcock,William Wyler முதலான ஆங்கில இயக்குநர்களை பற்றி ஒன்றும் பேசாமல் விட்டுச்செல்கிறது.இதில்Stanley,Hitchcock பற்றியெல்லாம் இணையத்தில் ஏற்கனவே பலரும் எழுதிவிட்டது காரணமா என தெரியவில்லை.

விருது என்பது ஒரு படைப்பாளியை ஒன்றும் செய்வதில்லை.அவனுக்கு அவனின் எல்லா படைப்புகளுமே ஒன்றுதான்.பார்வையாளன் தான் விருது வாங்கியவற்றை சிறந்தது என எடுத்து கொள்கிறான்.இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுவுள்ள இயக்குநர்களின் அனைத்து படங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.ஒரு குழுவிற்கு மட்டுமே பிடித்து இருக்கும் ஒரு படம் சிறந்தது என சொல்லப்படுகிறது.சென்ற வருடம் அதிகம் சிலாகிப்பட்ட அல்ஃபோன்சோவின் க்ராவிட்டி படம் பல விருதுகளை கண்டிப்பாக குவிக்கும்.ஆனால் அவரின் பிற படங்கள் பற்றி யாரும் யொசிப்பதில்லை. சென்ற முறை ஆஸ்கர் விருது பெற்றது ஃபர்காடியின் Separation திரைப்படம்.இந்த முறை அவரது THE PAST திரைப்படம் ஆஸ்கரின் இறுதி பட்டியலில் கூட இல்லை.இது போன்று கடந்த நூறு ஆண்டுகளில் பல உதாரணங்கள் இருக்கிறது.


ஜெர்மனியின் மொர்னொவ்,லெனி;தன் 19 வயதில் இருந்து இன்று வரை படங்கள் எடுத்துக்கொண்டு இருக்கும் வெர்னெர்;டென்மார்க்கின் ட்ரெயர்; இயக்குநர்களின் இயக்குநராக போற்றப்படும் ஜப்பானின் கென்சி மிஜொகுச்சி, The Human Condition Triology, Harakiri முதலிய படங்களை எடுத்த மசாகி கோபயாசி ; ஃப்ரான்சின் ப்ரெஸ்ஸன் பற்றியெல்லாம் இதுவரையில் தமிழில் சினிமா பற்றிய எந்தவொரு புத்தகத்திலும் வந்ததாய் நான் படித்ததில்லை.



சினிமாவை ஒரு கலையாக நேசிப்பவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கலாம்.

முடிந்தால் இந்த 16 இயக்குநர்களின் அனைத்து படங்களையும் பாருங்கள்.(சில படங்கள் கிடைப்பதில்லை).இல்லையெனில் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சிறந்த படங்களை மட்டுமாவது பாருங்கள்.அதும் கடினமெனில் இவர்களின் பெயர்களையாவது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றேனும் பெருமை பீத்திக் கொள்ளவாவது உதவும்.

திரைப்பட மேதைகள் - எஸ்.ஆன்ந்த்
பதிப்பு-தமிழினி
விலை-450


Friday, 13 December 2013

MOST DISTURBING,DISGUSTING MOVIES

என்னை பொறுத்தவரையில் ஒரு படத்திற்கு வயது வரம்பு வைத்து சென்சார் செய்வது தேவையற்ற ஒன்று.அது பார்வையாளனை பொறுத்தது. ஜெயகாந்தன் சொன்னது போல் “ நிஜ வாழ்கைல நடக்காததையா சினிமாவுல காட்டிட போறான்”.இப்பதிவு பார்க்க முடியாத,உலக அளவில் தடை செய்யப்பட்ட சில கொடூர படங்களை பற்றியது. தவிர்த்துவிடுதல் உங்கள் நலம்.

ஹாரர் என சொல்லிக்கொண்டு JIISM,MURDER போன்ற படங்களை தான் இன்னமும் இந்திய திரை அரங்குகள் காட்டிக்கொண்டு இருக்கின்றன.அதை தாண்டி வந்தால் பெரிய ஊர்களில் மட்டும் வெளியாகும் EXORCISM,PARANORMAL ACTIVITY,INSIDUOUS,CONJURING,EVIL DEAD போன்றவை இடம் பெரும். இதையும் கடந்து சொல்ல வேண்டும் எனில் கல்லூரிகளில் மட்டும் அதிகம் கிடைக்கப்படும் SAW 7 பாகங்கள்,HOSTEL,WRONG TURN. இது போன்ற படங்களில் வரும் காட்சிகளை விட இப்பதிவில் வரும் படங்கள் இருக்கும். இவை வெறுமனே PORN சம்மந்தப்பட்ட படங்கள் இல்லை என்பதும் உண்மை.இந்த படங்களை பற்றி தனித்தனி பதிவுகள் போட ஆசை தான்.எப்படியும் எழுதி விடுவேன்..இவை அனைத்தும் நான் பார்த்த படங்கள் மட்டுமே. இதை விட வேறேதும் படத்தில் இருப்பின்,கண்டிப்பக குறிப்பிடவும்,



1. 2 Girls 1 Cup (2 min Video) 2 girls 1 cup
2. Inside (2007)-French
3. Antichrist (2009)
4. Cannibal Holocaust (1980)
5. Eaten Alive (1980)
6. August Underground triology
7. Audition (1999)
8. Ichi The Killer (2001)
9.  The Human Centipede I & II
10. Visitor Q (2001)
11. Martyrs (2008)
12. A Serbian Film (2010) SERBIAN FILM
13. Slaughtered Vomit Dolls (2006)
14. Hanger (2009)
15. ReGoregitated Sacrifice (2008)
16. Salo or 120 Days of Sodom (1975)
17. Guinea Pig : The Devil's Experiment. (1985)
18. Guinea Pig: Flower of Flesh and Blood (1985)
19. VAse De Noces (1975)
20. Crash (1996)
21. Slow Torture Puke Chamber (2008)
22. Moebius (2013)
23. Men behind the sun (1988) and sequels
24. Melancholie Der Angel  (2009)
25. Nekromantik  (1988)
26. Grotesque (2009) GROTESQUE
27. I spit On Your Grave (1978,2010,2013)
28. Slit Mouthed Woman (2007)
29. Begotten (1990)
30. The Green Elephant (1999)
31. Realm of Senses 


Saturday, 9 November 2013

சிறுமியின் சைக்கிள்

எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு ஆசை இருக்கத்தான் செய்கிறது.இந்த மனம் முதலில் ஒன்றின் மேல் ஆசை கொள்ளச் செய்து விடுகிறது.அது அடைக் கூடியதா என்பதை பற்றி நம்மை சிந்திக்க விடுவதே இல்லை.
அதை நம்மால் அடைய முடியாது என முடிவு செய்யும் ஓர் இரவை விட கொடுமையானது ஏதும் இல்லை.வாழ்க்கையின் ஓட்டத்தில் ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும். சிலவற்றை நாமே நிராகரித்து விடுகிறோம்,சில நம்மை நிராகறித்து விடுகிறது,சில ஆசைகள் அப்படியே தங்கி விடுவதும் உண்டு.நினைவுகளும்,ஆசைகளும் தான் இந்த அற்பமான வாழ்வை சற்றேனும் சுவாரஸ்யம் அடைய செய்கிறது.




நீங்கள் ஆசைப்படும் ஒரு பொருள் உங்கள் சமூகத்திற்கு எதிரானது எனில்,அதை பயன்படுத்துவது தவறு என சொன்னாலும்,மனம் ஒப்புக்கொள்ளாமல் பல பொருள்களை நாம் விரும்புவதுண்டு.சிறு வயதாய் இருக்கும் போது holy cross கழுத்தில் போட்டுக்கொள்ள எனக்கு ஆசை இருந்தது,இப்போது அதில் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட.

படத்தின் TAGLINE என அவை தான் வருகிறது.

WHEN THE RULES DON'T FIT,FIND THE COURAGE TO FOLLOW YOUR OWN


சவுதி அரேபியாவில் வசிக்கும் இச்சிறுமி(WADJDA) ஒரு சைக்கிள் வாங்க ஆசைப்படுகிறாள்.தன் தோழன் அப்துல்லா ஒரு சைக்கிள் வைத்து இருப்பதை தவிர பெரிய காரணம் ஏதுமில்லை.சிறிது சிறிதாக பணம் சேர்க்கிறாள்.அங்கு இருக்கும் ஓர் சைக்கிள் கடையில் அந்த சைக்கிள் தனக்கு ஆனது என சொல்லி வருகிறாள்.

அச்சிறுமி ஹிஜாப் அணியாமல் பள்ளியில் இருந்து வெளிவரும் போது கண்டிக்கப்படுகிறாள்.இரண்டு கட்டிடங்கள் தாண்டி மூன்று ஆண்கள் வேலை செய்யும்போது,இந்த பள்ளியில் இருக்கும் பெண்களை உள்ளே சென்று அமர சொல்கிறார்கள்.சிறுமியின் தாய்,ஒரு கடையில் வாங்கிய ஆடையை அணிந்து பார்க்கக்கூட மிகுந்த சிரமம் அடைவதாக காட்டப்படுகிறது. சவுதியில் இருக்கும் பெண்களின் நிலை காட்சிகளின் வாயிலாக நமக்கு சொல்லப்பட்டுக்கொண்டே வருகிறது.இரான் படங்களில் கொட்டிக்கிடக்கும் எதார்த்தம் சவுதி அரேபிய படமான இதிலும் தொடர்கிறது.




அப்பள்ளியில் குர்-ஆன் பற்றிய மனனப் போட்டி ஒன்று நடக்கிறது,பரிசு ஆயிரம் ரியால்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.தான் இதுவரை வைத்து இருந்த பணத்தை வைத்து குரான் பற்றிய ஒரு மென்பொருள் வாங்குகிறாள்.சமயங்களில் தோல்வி தராத வலியை வெற்றி தந்துவிடும்.அதுபோல் நடந்தேறி விடுகிறது.இவள் வென்றவுடன்,”இந்த பரிசுத்தொகை என்ன செய்ய போகிறாய்” என பள்ளித் தலைமை கேட்க . சிறுமி பெருமிதத்தோடு தன் ஆசை பற்றி சொல்ல,அதைக் கேட்டு தலைமை அதிர்ச்சி கொள்கிறது.இந்த பணத்தை அவள் சார்பாக இந்த பணத்தை பாலஸ்தீனத்தில் போரிடும் தோழர்களுக்காக கொடுக்க போவதாக சொல்கிறது .

மறுபக்கம் அவள் தந்தைக்கு அவள் பாட்டி இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறாள்.ஓர் ஆண் வாரிசு இல்லை என்பது காரணமாக சொல்லப்படுகிறது.அதை ஒரு சர்வ சாதாரணமாய் மகள் கடந்து செல்வது,ஆச்சர்யமும்,அதிர்ச்சியும் கொள்ளச் செய்கிறது.தன் கணவர் இனி தனக்கானவர் மட்டும் அல்ல என்கிற நிலையில்,அவள் ஆடை வாங்க வைத்து இருந்த பணத்தில் மகளுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்து விடுகிறாள்.



சவுதி அரேபியாவில் திரை அரங்குகள் இல்லாததால் இதை ஒரு ஜெர்மன் நிறுவனத்தோடு கூட்டாக தயாரித்தனர்.முழுக்க முழுக்க சவுதியில் எடுக்கப்பட்டு இருக்கும் முதல் படம் இதுவே.இந்த ஆண்டின் ஆஸ்கருக்கு சிறந்த வெளிநாட்டு படமாக சவுதி அரசு இப்படத்தை பரிந்துரைத்து இருக்கிறது.இது தான் சவுதி அரசாங்கம் ஆஸ்கருக்கு அனுப்பும் முதல் நுழைவு .தங்களுக்கு எதிராக எடுத்து இருக்கும் ஒரு படத்தை அவர்கள் அனுப்ப முயன்று இருப்பதே இப்படத்தின் ஆகச்சிறந்த வெற்றி.முதல் படி என்பது எப்போதுமே சற்று நீண்டதாகத்தான் இருக்கிறது.சவுதியின் முதல் பெண் இயக்குனரும் இவரே(Haifaa al-Mansour).சவுதியின் தலை நகரான ரியாத்தில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் இவர் ஒரு வண்டிக்குள் இருந்தவாறு Walkie Talkie பயன்படுத்தி தான் எடுத்து இருக்கிறாராம்.சவுதியில் பொது இடத்தில் ஆண்களோடு பெண்கள் சேர்ந்து பணிபுரியக்கூடாதாம்.


படத்தினை தரவிறக்கம் செய்ய

https://twitter.com/wmovieonline/status/392004102869118976