நான் இப்போது விமர்சனம் செய்யும் படம் சிலருக்கு பழசாக இருக்கலாம் . இருந்தும் பார்க்காதவர்கழுகாக எழுதுகிறேன். 1950 களில் எப்படி இப்படி ஒரு களத்தை அகிரா குரோஷா தேர்வு செய்தார் என்பது புரியாத புதிர்,கதை மிகவும் எளிது ஒரு வரியில் சொல்வதற்கு கணவன் , மனைவி . ஒரு திருடன் மூவர் மட்டும் இருக்க. கணவன் கொலை செய்யபடுகிறான்
முதலாவதாக திருடன் நடந்தவற்றை கூறுகிறான் . பின்பு அந்த மனைவி தன் வழியில் கூறுகிறாள் . மற்றொரு விதத்தில் இறந்த உடலின் ஆவியாக பூசாரி ஒருவர் சொல்கிறார். மூன்று பேரும் வெவேறு விதமாய் சொல்ல ரசிகனின் மனநிலை எது உண்மை என்று யோசிப்பதற்குள். நடந்ததை தூரத்தில் இருந்து பார்த்தவன் உண்மை இதுதான் என்று கூறி முடிக்கிறான்.
நான்கு கோணத்தில் ஒரு கதையை சொல்லி முடித்து இருக்கிறார் இயக்குனர் . விருமாண்டி படத்தின் இரண்டு கோணத்தை புரியாமலே இன்னும் சிலர் இருக்க நான்கு கோணங்கள் என்பது எவ்வளவு கடினம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.