Pages

Tuesday, 6 March 2012

புகார்

பாட்டி எப்போதும் போல் நாயின் வேகத்துக்கு பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.. அந்த நாயைப்பற்றி சொல்ல வேண்டும் . ஏதோ ஹட்ச் டாக் என பெயர் சொல்லி 2000 ரூபாய்க்கு வாங்கி வந்தாள் சுகந்தி.
அந்த பாட்டியை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி இருந்தனர் கணேஷ் ;சுகந்தி தம்பதிகள்..


சுகந்தியின் மகள் கோமதியோ ஹட்ச் நாயோடு தான் விழிப்பு; தூக்கம் எல்லாம் ; பள்ளிவிட்டு வந்தவுடன் நாயை பார்த்தால் தான் இவளுக்கு எல்லாமே.


இப்படி இருக்கையில் ....

பாட்டி எப்போதும் போல் நாயின் வேகத்துக்கு பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.. 

திடீரென்று அந்த நாய் தன் சங்கிலியை விட்டு விலகி சென்றது. பாட்டி செய்வதறியாமல் திகைக்க ; நாய் அவளது பார்வையில் தென்படவில்லை.

வீட்டிற்குள் கேட்க போகும் அர்ச்சனைகள் தன் காதில் இப்போதே விழத்  தொடங்கின.


உள்ளே நுழைந்ததும் :



  • அந்த நாய் மதிப்பு எவ்ளோன்னு தெரியுமா??
  • கோமதி கேட்டா என்ன சொல்றது ??
  • திங்குற அளவுக்கு புத்தி இருக்கா ??
  • உங்களுக்கு செலவு பண்றத விட இந்த நாய்க்கு அதிகமா செலவு பண்ணி இருக்கோம் 


எதுவும் பேச வேண்டாம் முதல்ல வெளிய போங்க

பாட்டி கண்ணீரோடு வெளியே  செல்ல...

சில நாட்கள் கழித்து

அய்யா !!

என்ன சொல்லு

எங்கம்மாவ பார்க்கணும்

ஓ அது நீ தானா??? சுகந்தி சற்றே கோபத்துடன் .


நீ வாங்குன காசுக்கு பாதி கூட உங்கம்மா வேலை செய்யல .யார்கிட்டயும் சொல்லாம அன்னிக்கு வீட்டைவிட்டு போய்ட்டாங்க. 


என்னமா சொல்றீங்க??

கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம் ; உங்கம்மாவோட ஒரு போட்டோ இருந்துச்சு அத வச்சு தேட சொல்லி இருக்கோம்

ரொம்ப நன்றிகம்மா

சரி சரி என்னிக்கு மிச்ச காச திருப்பி தர போற ..

என்னமா சொல்றீங்க..

உங்கம்மா போயாச்சு அந்த வேலைக்கு வேற ஒரு ஆளையும் வச்சாச்சு. உன்கிட்ட கொடுத்த காசுக்கு உங்கம்மா வேலை செய்யலையே...


அம்மா 


சரி சரி போய்த்தொல ....

எங்கம்மா கிடச்சா மட்டும் சொல்லுங்க

புகார் பண்ணி இருக்கோம் . நீ ஒரு மாசம் கழிச்சு வா

சில நாட்கள் கழித்து

நாங்க போலீஸ் ஸ்டேசன்ல இருந்து பேசுறோம் .. கொஞ்ச நாளைக்கு முன்னாடி   புகார் கொடுத்தது நீங்க தானா ??

சுகந்தி மகிழ்ச்சியோடு

"ஆமா சார் நாய் கெடச்சுருச்சுங்களா?? "

 


   நான் தினமும் கல்லூரிக்கு செல்லும் போது ஒரு பாட்டி நாய் ஒன்றை கூட்டிக்கொண்டு நாய்க்காக வாக்கிங் வருவார். விசாரிக்கையில் இவர் அந்த வீட்டில்  வேலை செய்கிறார் என்பதை அறிந்தேன். இருவரும் வருவதை பார்க்கையில் இந்த நாய்க்கு தான் பாட்டி காவலோ என எண்ண தோன்றும் . அவருக்காக இந்த கதை எழுதினேன்.

7 comments:

  1. inum konjam cleara solu pa

    ReplyDelete
  2. நன்றி. இப்போது மீண்டும் இதே கதையை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.. விரிவாக

    ReplyDelete
  3. நல்லா இருக்கு....கன்னம், புகார் , இந்த ரெண்டுக்கும் ஏதோ தொடர்பு இருக்குற மாதிரியே இருக்கே....கன்னத்தில் முத்தம் கொடுத்ததால் புகாரோ....? ஹி ஹி வாழ்த்துக்கள்....ரெண்டுமே சூப்பரு....

    ReplyDelete
  4. ரொம்ப நிஜம் - சில வீட்ல இப்படி தான் நடக்குது - மனுஷங்களுக்கு மதிப்பு இல்ல - நாய், கார், கம்ப்யூடர், இதெல்லாம் தான் ரொம்ப முக்கியம் - மனுஷங்க இல்ல ... நல்ல கற்பனை ....

    ReplyDelete
  5. எங்க வீட்ல கூட பக் நாய் இருக்கு - அதனாலயும் இந்த கதை பிடிச்சிருக்கு - பேரு சீஸர் - ரொம்ப அன்பான நாய் அது - எனக்கு தான் பயம் : )) @sweetsudha1

    ReplyDelete
  6. நன்றி @sweetsudha மேடம் . சிலருக்கு இக்கதை புரியவில்லையாம் ஆதலால் மீண்டும் எழுதுகிறேன் . நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு

    ReplyDelete
  7. Lucky Wyniki | Online slot machine game by luckyyseven
    Lucky Wyniki has got the Lucky Wyniki クイーンカジノ slot machine game by Luckyyseven casino! Here you ラッキーニッキー can play all 퍼스트카지노 of its games, including free spins,

    ReplyDelete