Pages

Monday, 19 March 2012

வலி

அன்று இரவு வண்டியில் வரும் போது ; இருவர் என்னை வேண்டும் என்றே இடித்தனர். வெளிச்சமின்மை காரணமாக அவர்கள் யார் என அறியவில்லை. ஆனால் அதற்கு காரணம் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு என்று மட்டும் ஊர்ஜிதம்   செய்துகொண்டேன்.பெரிதாக ஏதும் அடி இல்லை எனினும் உள்காயங்கள் சில. தோள்பட்டையும்; முதுகும்  ஏதோ செய்தது.

எழும்போது அப்படி ஒரு வலி . எழ முடியவில்லை. லீவு சொல்லி விடவேண்டும் என்று கூட யோசித்தேன். நான் கோழை அவர்கள் செய்யும் செயல்களை கண்டு அஞ்சிவிட்டேன் என்று எடுத்துக்கொள்ளக்கூடும். ஆகையால் சென்றேன்..


உள்ளே நுழைந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் என் இடத்தில் உட்கார்ந்து  கொண்டேன்.


தேநீர் இடைவேளையில் , அவர்கள் யாரும் ஒன்றும் நடக்காதது போன்று ஒரு முகபாவனை வைத்து கொண்டனர். எனக்கு எரிச்சலாய் இருந்தது. விடுப்பு எடுத்து கெளம்பிவிட்டேன்.


அன்று மாலை .

சென்றிருந்த மருத்துவமனையில் ஆள் யாரும் இன்றி செவிலியர் மட்டும் வெளியே உக்கார்ந்து இருந்தார்.

மேடம், டாக்டர் எப்ப வருவாங்க ??

உள்ள வாங்க ..

எனக்கு சற்று அசௌகரியமாக பட்டது. நான் தவறாக எண்ணிவிட்டேன். அந்த செவிலியர் தான் மருத்துவர்.


சாரிங்க

ஹ்ம்ம் பரவால  சொல்லுங்க.

மேடம் முதுகு ; தோள்ப்பட்டை எல்லாம் ரொம்ப வலிக்குது .

சரி ஒரு XRAY எடுத்துடுங்க. அப்புறம் தான் கிளியரா சொல்ல முடியும் ..

400 ரூபாய் என் பர்சில் இருந்து திருடப்பட்டது.

மேடம் ரிப்போர்ட் ..


சார் பெருசா ஒன்னும் பிரச்சனை இருக்கறதா தெரியல. ஆனா நீங்க கேர்புல்லா இருக்கணும். தண்டுவடத்துல சிறிசா வீங்கி இருக்கு. அதுனால கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்குங்க..


ஒரு வாரம் கழித்து


எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அமைதியான சூழ்நிலயில் எல்லாவற்றையும் அசை போட்டேன்

என்னை அடிக்க சொல்லி ஆள் அனுப்பியவர்கள் ஒன்றும் தெரியாதது போல் நடித்தது.முதுகும் ,தோள்ப்பட்டையும் வலித்தது. 400 ரூபாய் திருடப்பட்டது. அந்த செவிலியரும்!!! முதுகில் பிரச்சனை என சொன்னது ..

கனவில் அடி வாங்கினாலும் உண்மையிலேயே முதுகு பிரச்சனை வருமோ ??

5 comments:

  1. ஹா ஹா! எனக்கும் அடிக்கடி பல்லெல்லாம் நற நறன்னு கடிச்சி ஓடஞ்சி போகிறாப்புல கனவு வரும். எனக்கும் பயம் எப்போதாவது பல் உடையுமோ என்று!? :)

    ReplyDelete
  2. //அவர்கள் யாரும் ஒன்றும் நடக்காதது போன்று ஒரு முகபாவனை வைத்து கொண்டனர்//
    மன ஓட்டத்தின் குருட்டு நம்பிக்கை.

    சூப்பரு... நல்ல ட்விஸ்ட்பா..

    ReplyDelete