Pages

Friday, 9 March 2012

மனிதம்

சைரோன் ஒலி அணைக்கப் பட்டிருந்தது. அப்போதும் நல்ல கூட்டம் குழுமி இருந்தது. காமிராக்களின் வெளிச்ச சிதறல்கள். வழக்கமான கேள்விகள். அதை விட வழக்கமான பதில்கள். வெள்ளை அங்கியில் ரத்த பொத்தல்கள். நான்கு பிணங்கள் ஆம்புலன்சில் இருந்து இறக்கப் பட்டு தரையில் கிடத்தப்பட்டன.

"தீவிரவாதிகளுக்கும் எங்களுக்குமான மோதலில் சட்டம் ஜெயித்திருக்கிறது" என்றார் துணைக் கமிஷனர்.
                                      _________________________________

நேரம்: அதிகாலை நான்கு மணி
சாமான்ய மக்கள் அசந்து உறங்கும் நேரம்
குற்றங்களுக்கு ஏற்றது.

பாரக்பூரின் பரபரப்பான சாலை அமானுஷ்யதில் உறைந்திருந்தது. தோட்டாக்கள் நிரப்பப்பட்டன. ட்ரிக்கர் சரிபார்க்கப்பட்டது. காக்கிகள் காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்சாரியில். அவர்களுக்காக மரணம் காத்திருந்தது. இருட்டின் அமைதியில் ஒரு 'விஷுக்'. உடலில் ரத்த ஊற்றுகள் பெருக்கெடுத்தன. தார் சாலை எங்கும் குருதி வழிந்தோடியது. 

ரமேஷ் சந்த், it's your turn என்றார் அவ்உயர் அதிகாரி.

சந்தின் தோள்பட்டையில் புல்லட் இறங்கியது.

                                  ____________________________________

மத்திய பிரதேசத்தின் இருண்ட காடுகள்.

செருப்பு மாலைக்குள் முதல் அமைச்சர் வணக்கம் சொல்லி கொண்டிருந்தார். சமாதானம் செய்ய வந்த அதிகாரி ஒருவர் பழத்தால் தாக்கப்பட்டார்.

உங்க நல்லதுக்கு தான ரோடு போட்ருக்கோம். ஸ்கூலு கட்டி கொடுத்தோம்

அதெல்லாம் எங்களுக்கா பண்ணுனீங்க..உங்க வெளிநாட்டு மொதலாளிகளுக்காக தான போட்டீங்க...காது குத்தாதீங்க.

வாக்குவாதம் முற்றியது. சென்சார் செய்யப் படவேண்டிய வார்த்தைகள்  காற்றில் பறந்தன.

எச்சரிக்கை விடப்பட்டது. கூட்டம் கொந்தளித்தது.

தினசரிகளுக்கு நாளைய தலைப்பு செய்தி கிடைத்தது. பழங்குடிகள் சுடப்பட்டார்கள்.

                                  _________________________________

சார்..மாட்டிக்கிட்டா..?

மாட்ட மாட்டோம். இப்ப கூட நாலு பேர வங்கி கொள்ளையர்கள்னு சுட்டாங்க. மாட்டுனான்களா? ஒரு பிரதமர் கொல்லப்பட்டதா மூணு பேர புடிச்சு வச்சு இருக்கனுங்க? அது உண்மையா? 

இருந்தாலும்...

தைரியமா பண்ணலாம்..உங்களுக்கு தான் இன்னிக்கு காயம்.

சார்??


3 comments:

  1. ரொம்ப சுருக்கமா இருக்கு.. ஆனா செம ஸ்பீடு

    ReplyDelete
  2. தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. :((

    ReplyDelete
  3. @thiru ஆம் ஆனால் இது போன்ற சம்பவங்கள் பீகாரிலும் ; சட்டீச்கரிலும் நடந்து உள்ளது . மேலும் நான் ஆச்சியாளர்களை தான் குறை கூறுகிறேன் . போலீசை அல்ல

    ReplyDelete