Pages

Showing posts with label FROM THE VAULT. Show all posts
Showing posts with label FROM THE VAULT. Show all posts

Monday, 23 January 2012

வைரமுத்துவிற்கு

வைரமுத்து அவர்கட்கு ஒரு வேண்டுகோள்

             உங்கள் வரிகளை விரும்புவதால் மட்டுமே எழுதுகிறேன் 

      
               உங்கள் பழைய பேட்டி ஒன்றை    வலைதளங்களில் கண்டேன். அதாவது ரோஜா படத்தில் 'காதல் ரோஜாவே' பாடலை நீங்கள் எழுதிய போது பாலசுப்ரமணியம் பாடும் போது கண்மூடிப் பார்த்தால் என்பதற்கு பதிலாக கண்மூடி பார்த்தால் என்று பாடியதற்கு நீங்கள் 'ப்' கண்டிப்பாக பாட வேண்டும் என்று வற்புறுத்தியதாக கேள்விபட்டேன். மிகவும் அருமை. தற்போது உங்கள் பாடல்களை  பாடும்  ஹிந்தி பண்டிதர்களிடம் நீங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லையா??. இல்லை நாம் கருத்து கூறினால் நமக்கு கிடைக்கும் சில !!! வாய்ப்புகளும் பறிபோகும் என்று அச்சமா???

                    ஒரு  திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ரஹ்மானால் தான் என் தமிழ் உலக தரத்திற்கு கொண்டு செல்ல பட்டது என்று பெருமிதம் கொண்டீர். அவரால் தான் தமிழ் கொலை உற்றதையும் ஒப்புகொள்வீரா??. 

                    உங்கள் பாடல்களை வாசிக்க மட்டுமே அல்லாமல் கேக்கவும் விளைகிறேன். நல்ல தமிழ் குரல்களில். 

மங்காத்தா டா



 எப்பயும் போல CLASSல ATTENDANCE போட்டுட்டு தான் கெளம்பினேன். கூட ஒரு FRIEND வர்ரேன்னு சொன்னதால அவனுக்கும் சேர்த்து TICKET போட வேண்டியது ஆயிருச்சு. திண்டுக்கல் ராஜேந்திர திரைஅரங்குல தான் படம். 300 ரூபா டிக்கெட்டு.. BOXல படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணிதான் டிக்கெட்டு எடுத்தேன்.. மேல போனா எல்லாமே COUPLES சீட்டு. நானும் அவனும் திரு திருனு முழிக்க.எல்லோரும் எங்களையே பார்க்க ஆரம்பிச்சுடாங்க. அங்க இருந்த ஒருத்தன் சொன்னான். வெங்கட் பிரபு  படம்னா கெளம்பி வந்தர்றாங்க.. 

         அப்புறம் தான் GOA ஞாபகம் வந்தது. வேறு வழியில்லாம ஒண்ணா உக்கர்ந்து பார்த்தோம். 

Friday, 1 July 2011

RASHOMON -(1950)REVIEW

       நான் இப்போது விமர்சனம் செய்யும் படம் சிலருக்கு பழசாக இருக்கலாம் . இருந்தும் பார்க்காதவர்கழுகாக எழுதுகிறேன். 1950 களில் எப்படி இப்படி ஒரு களத்தை அகிரா குரோஷா தேர்வு செய்தார் என்பது புரியாத  புதிர்,கதை மிகவும் எளிது ஒரு வரியில் சொல்வதற்கு கணவன் , மனைவி . ஒரு திருடன் மூவர் மட்டும் இருக்க. கணவன் கொலை செய்யபடுகிறான்
      முதலாவதாக திருடன் நடந்தவற்றை கூறுகிறான் . பின்பு அந்த மனைவி தன் வழியில் கூறுகிறாள் . மற்றொரு விதத்தில் இறந்த உடலின் ஆவியாக பூசாரி ஒருவர் சொல்கிறார். மூன்று பேரும் வெவேறு விதமாய் சொல்ல ரசிகனின் மனநிலை எது உண்மை என்று யோசிப்பதற்குள். நடந்ததை தூரத்தில் இருந்து பார்த்தவன் உண்மை இதுதான் என்று கூறி முடிக்கிறான்.
    நான்கு கோணத்தில் ஒரு கதையை சொல்லி முடித்து இருக்கிறார் இயக்குனர் . விருமாண்டி படத்தின் இரண்டு கோணத்தை புரியாமலே இன்னும் சிலர் இருக்க நான்கு கோணங்கள் என்பது எவ்வளவு கடினம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
    நான் மிகவும் பிரமித்து பார்த்த ஒரு படம் . வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்