வைரமுத்து அவர்கட்கு ஒரு வேண்டுகோள்
உங்கள் பழைய பேட்டி ஒன்றை வலைதளங்களில் கண்டேன். அதாவது ரோஜா படத்தில் 'காதல் ரோஜாவே' பாடலை நீங்கள் எழுதிய போது பாலசுப்ரமணியம் பாடும் போது கண்மூடிப் பார்த்தால் என்பதற்கு பதிலாக கண்மூடி பார்த்தால் என்று பாடியதற்கு நீங்கள் 'ப்' கண்டிப்பாக பாட வேண்டும் என்று வற்புறுத்தியதாக கேள்விபட்டேன். மிகவும் அருமை. தற்போது உங்கள் பாடல்களை பாடும் ஹிந்தி பண்டிதர்களிடம் நீங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லையா??. இல்லை நாம் கருத்து கூறினால் நமக்கு கிடைக்கும் சில !!! வாய்ப்புகளும் பறிபோகும் என்று அச்சமா???
ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ரஹ்மானால் தான் என் தமிழ் உலக தரத்திற்கு கொண்டு செல்ல பட்டது என்று பெருமிதம் கொண்டீர். அவரால் தான் தமிழ் கொலை உற்றதையும் ஒப்புகொள்வீரா??.
உங்கள் பாடல்களை வாசிக்க மட்டுமே அல்லாமல் கேக்கவும் விளைகிறேன். நல்ல தமிழ் குரல்களில்.
இலக்கியத்தகுதி கொண்ட ஒருவருக்கு அகாதமி விருது கிடைத்திருந்தால் மட்டுமே அதிர்ச்சி அடையவேண்டும் போலும்.வைரமுத்துவிற்கெல்லாம் எதற்கு கொடுத்தார்கள் என்று இன்னமும் விளங்க வில்லை.கள்ளிக்காட்டு இதிகாசம் ஒரு mediocre படைப்பே
ReplyDelete