இந்த கதை ஒரு பாண்டஸி கதை. ஆதலால் மூளையை மூலையில் வைக்கவும்..
ஹீரோ பேரு (யோசிக்கல). ஒரு சின்ன வியாதி. தெளிவாக படித்து கொள்ளவும், இவரு எந்த பொண்ணுகிட்ட propose பண்ணுறாரோ ; அந்த பொண்ணு அடுத்து யாரு பார்த்து இவர லவ் பண்ணலாம்னு தோணுதோ அவரு கூட செட் ஆகிரும். இதனால் இவருக்கு என்ன நடக்க போகிறது என்பது தாங்க கதை
ஏன் எனக்கு மட்டும் இப்படி?. இன்னிக்கு நேத்துனா பரவால. ஆனா யார பார்த்தாலுமே இப்படி தாங்க நடக்குது. எனக்கு சோகமா படுறது எல்லா பொண்ணுகளுக்கும் வசதியா போச்சு. எங்கிட்ட வந்து propose பண்ணுங்க ப்ளீஸ்னு வரிசைல நிக்குதுக. இதுல எவ்ளோ செலவானாலும் பரவாலைன்னு வசனம் வேற. என்ன கொடும சார்..
ஜாலியா ஆரம்பிச்சது இப்ப எரிச்சலா இருக்கு.ஒரு MATRIMONIAL மாதிரி USE பண்றாங்க..
I LOVE YOU
I LOVE YOU
I LOV U
I LUV UUUU
I LOVE YOU
I LOV U
I LUV UUUU
இந்த ஊரே வேண்டாம்டா சாமி.இங்க யாருக்கும் என்ன பத்தி தெரியாது. என் உடன் பிறவா பக்கி கார்த்திக் சொல்லாத வரை..
FOR THE FIRST TIME எனக்கும் தோணுது. ராதாமோகன் சொன்ன மணியும் அடிக்கல.. விஷ்ணுவர்தன் சொன்ன மாதிரி ராஜா சார் பாட்டும் கேக்கல. ஒரே நிசப்தம்..
YA I AM GOING TO PROPOSE FOR THE FIRST TIME FROM MY HEART
அப்படின்னு PROPOSE பண்ண போனா மண்டைல அலராம் அடிக்குது. அய்யகோ ???
என்ன பண்ணலாம்.
சாக போற படு கேவலமா இருக்கற ஒரு பொண்ணுகிட்ட லவ்வ சொல்லுவோம். ரொம்ப கேவலமா எங்க தேடுறது??. அட கார்த்தி எதுக்கு இருக்கான். தேடுனு சொன்னா தேட போறான்.
சத்தியமா சொல்றேன் இவ்ளோ கேவலமா ஒருத்தவங்கள பார்க்க முடியாது. பொன்னம்பலத்துக்கு பொம்பள வேஷம் போட்ட மாதிரி இருந்தாங்க.சரி ட்ரை பண்ணி பார்போம்.
சொல்லிட்டேன். சொல்லி தொலைச்சேன். நம்பாமல் மண்டைய சொரிந்து கொண்டே போயிருச்சு..
ஒரு வாரம் தீவிர செக்கிங்.
தப்பிச்சுட்டேன்.
இனி எல்லாம் சுபம்னு போய் சொல்லிட்டேன்.சும்மா மூணு வார்த்த ஒரு கப் COFFEE
காதலில் நானும் வென்றுவிட்டேன்.
திடீர்னு சனியன் வந்தான்.
பேப்பர் பார்த்தியாடா??
இல்ல. ஏன் இந்திய ஜெயச்சுருச்சா!!
போடா லூசு பயலே நம்ம TEST பண்ணின அல்பாயுசு கெழவிய எவனோ கல்யாணம் பண்ணிடானாம்....
அடுத்து என்ன பண்ணலாம்
அவள் யாரையும் பார்க்க கூடாது. பார்த்தாலும் நினைக்க கூடாது.
இது வரைக்கும் கதை சொன்ன ஹீரோ இனி என்ன பண்ணலாம்னு யோசிக்க போயிட்டாரு..
இந்த கார்த்திக் பய அந்த பொண்ணுகிட்ட சொல்லீட்டான்
இனி கதைய நம்ம பார்போம்..
அந்த பொண்ணுக்கு தெரியாம
ஹீரோ மார்பிங் பண்ணிக்கறாரு. இவர பொறுத்த வரைக்கும் அந்த பொண்ணு அவ கண்ணுல பார்க்க போற ரெண்டாவது பையனும் இவரே (என்ன ஒரு புத்திசாலித்தனம் )
அவ இன்னும் கொஞ்சம் யோசிச்சு. EYE BALL TRANSPLANTATION பண்ணிக்குது . அவள பொறுத்த வரைக்கும். அவள் கண்கள் பார்க்கும் முதல் இரண்டாவது இரண்டும் ஹீரோ தான். (இதுக ரெண்டும் லவ் பண்ணா உருப்படுமா )
மார்பிங் முகத்த இவ லவ் பண்ண ஆரம்பிக்கிறா.
காதல் !! கதை ஒரு வழியா முடியுது..
நோட்டு1: அந்த புது கண்களுக்கு ஹீரோ முதல் ஆள். கதை முடியல
நோட்டு 2: கதை பிடிக்கலேன்னா நானும் மூளையை கலட்டி வச்சுட்டதா முடிவுகட்டிகொள்ளவும்
TITLE FROM ஷேக்ஸ்பியர்
EYE TRANSPLANTION IDEA FROM MINORITY REPORTS
சிறுகதை எழுதுவது எப்படி?
ReplyDeletehttp://www.jeyamohan.in/?p=169
இப்படி ஒரு ,பேன்ட்ஸி கதையை ,பண்ணினதுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete