Pages

Saturday 21 January 2012

சொப்பனத்தங்கம்

                 இந்த கதையின் தலைப்பு சொர்க்கதங்கம்; சொற்பத்தங்கம்;சொக்கத்தங்கம் ;சொப்பனத்தங்கம் என அனைத்தும் பொருந்தும்...
    
                  ஏலே காக்கி இந்த மரத்துக்கு பாத்தியே கட்டல.மருந்த தூவி உட்டுருக்க.கிழக்கால சாணம் வச்சுருக்கேன். அத போய் எடுத்துட்டு வா..

                  ச்சே செட்டியார் தோட்டத்துக்கு வந்தாலே இது தான் பிரச்சனை அலுத்துகொண்டான் காக்கி.. 
                 
                 ஆமா அப்புறம் 1  ஏக்கரா தென்னந்தோப்புக்கு இந்த அண்ணன் தம்பி ரவுசு தாங்க முடியாது. 

                 அண்ண குமரேசன் கெட்டிக்கார பைய. 1  ஏக்கராவுல 3   ஏக்கராவுக்கு உரிய தேங்காய் விளச்சல 40 நாள்ல பாத்துருவான்.ஆனாலும் தம்பி குமாருக்கு சரி பாதி பிரிச்சு கொடுத்துடுவான். அம்புட்டு பாசம் தம்பி மேல 

                அன்னிக்கு 

                 எப்பயும் போல சிரிச்சு பேசிக்கிட்டு இருந்த குமாரு பொசுக்குன்னு கீழ விழுந்துட்டான். பேச்சு மூச்சே இல்ல.குமரேசன் அலறி அடிச்சு ஊரையே கூட்டிட்டான்.. ஆஸ்பித்திரிக்கு கொண்டு போற வரைக்கும் புலம்பிகிட்டேதான் இருந்தான். 

                 செல்லாண்டி மாரியாத்தா என் தம்பிய காப்பாதுடீ. 

                 குமரசேன் பொஞ்சாதிக்குகூட இவஞ்செய்யுறது அதிகப்படியா   இருந்துச்சு. 

                  அய்யா என் தம்பிய காப்பாத்துங்க.. 

                  டாக்டர் பல்ஸ் பார்த்துவிட்டு தேறாது என்பது போல் பார்த்தார். ICU வில் ECG பார்த்துட்டு உங்க தம்பிக்கு HEART ATTACKனு சொல்லீட்டார். குமரேசனுக்கு நெஞ்சு அடைச்சுடுச்சு. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டான். 

                 நான் நம்ப மாட்டேன். என் தம்பிய கொன்னுபுட்டீன்களா . பாவிகளா. நாசமத்துபோக.  

                  சரி சார். பிரேத பரிசோதனை செய்யணும் கையெழுத்து போடுங்க. 

                  என் தம்பிய கொன்னது இல்லாம வெட்டவும் பாக்குறீங்களா. போடமாட்டேன். (அவன் கைநாட்டு என்பது மற்றொரு விசயம் ) 

                 ஊர்க்கார்களும் சண்டை போடவே. டாக்டருக பொணத்த எடுத்துட்டு போக விட்டுட்டாங்க...
                  
                 4  நாலு கழிச்சு தென்ன மரத்துக்கிட்ட உக்காந்து இருந்து கொண்டே தம்பிய நெனச்சு பார்த்தான். கண்ணுல தண்ணி வர்றப்ப மனசு சொல்லுச்சு நடிகண்டா நீ

        " பின்ன சும்மாவா அன்னிக்கு அவன்தான் முதல்ல பார்த்தான்அதுக்காக பாதி வேணும்னா கொடுப்பனா?? . தேங்காய்னா பரவால தங்கமுங்க அதுவும் ஒண்ணா ரெண்டா 22 தங்க காசு விடுவனா.மண்ணுல பொதஞ்சு இருந்துச்சு. 

        குமாரு ஒரு பிரச்சன்னையும் இல்ல. நமக்குள்ள எதுக்கு சண்ட ஒரு மாசம் உள்ளயே இருக்கட்டும். அடுத்த மாசம் தோட்டத்துக்கு மருந்து வைக்கணும். அது வரைக்கும் ரெண்டு பேரும் இத தொட வேண்டாம். குமார் என்னை முழுசா நம்பினான்..

      அப்புறம் தான் யோசிச்சேன். பேசாம விஷம் கொடுப்போம்.. ௦௦௦ ௦  ௦௦௦௦ ௦ 2 g  potassium எடுத்து தினமும் சோத்துல கலந்தா 30 நாள்ல லேசா ஆரம்பிக்குற மூச்சுத்திணறல் (asphyxia). அப்படியே நீர்வீக்கம்(edema) அதிகமாகும். கண்ணுக்கு போற நரம்புல (miotic pupil ) வீக்கம் அதிகமாகி; விஷம் உடலை அரிச்சு ரத்தம் சிவப்பு கலர்ல இருந்து கருப்பா மாற ஆரம்பிக்கும்.. பாசமா வளத்த தம்பி பங்கு கேட்டா பங்கு போட வேண்டியது தான். 

       எல்லாம் சரியா நடந்துச்சு. இந்த சனியம்புடுச்ச டாக்டரு பொசுக்குன்னு AUTOPSY (பிரேத பரிசோதனைனு ) சொல்லி குண்ட தூக்கி போட்டுட்டான்.விடுவனா அழுதல்ல தம்பிய கூட்டியாந்தேன்.
   
     நான்தான் கொன்னேன்னு இந்த விளக்கத்த சொன்னா என் பொஞ்சாதி கூட நம்பாது. பின்ன கைநாட்டு மட்டுமே போட தெரிஞ்ச ஒரு ஆளுக்கு இவ்ளோ அறிவான்னு என் பொண்டாட்டி புட்டுக்கிடும்..

  இன்னிக்கு சாந்திரம் தங்க வேட்டை "

  மனதிற்குள் சொல்லி எழுந்தான் குமரேசன்..

 கதை முற்றும் 


கிறுக்கு பைய இவன் செஞ்சதுக்கும் HEART அட்டக்குக்கும் என்ன சம்பந்தம்... குமாரு போய் சேர்ந்த காரியமே வேற. ஒரு நாலு சாயங்காலம் குமரேசன் பையன் விஜய் அந்த புதையல தோண்டிகிட்டு இருந்தான்.. 


 " டேய் என்னடா பண்ற " 


 "இல்ல சித்தப்பா பிரெண்டு ஒருத்தன் தங்க சாகுலேட்டு கொடுத்தான். மண்ணுல வச்சு எடுத்தா குட்டி போடும்னு சொன்னான். அது தான் பாக்குறேன்".

பாவம் இளகைய மனசு குமாரு பாதி செத்து போயிட்டான். அதையே நெனச்சு நெனச்சு உயிரும் போயிடுச்சு..



  

STORY INSPIRED FROM ஸ்ரீராம்'s சாபம் AND சுஜாதா's SHORT STORY 
MEDICAL TERMS FROM அலர்மேல்மங்கை..




11 comments:

  1. கதை நல்லாயிருக்குங்க. கடைசில முற்றும் வரைக்கும் ஊகிக்கமுடிந்ததா இருந்தது. அதுக்கும் அப்புறம் சொல்லியிருப்பது அருமை.

    அதிலும் தங்கபிஸ்கட் குட்டி போடுவது நல்ல கற்பனை :)))

    ReplyDelete
    Replies
    1. நன்றி. உங்கள் வட்ட கதை படித்த பிறகு தான் என் முதல் கதை எழுத ஆரம்பித்தேன். அதற்கும் ஒரு நன்றி

      Delete
  2. டைட்டில் நல்லாருக்கு ஐ திங்க் யூ மிஸ் த்

    இருங்க படிச்சுட்டு வர்றேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தற்போது தான் பார்த்தேன்

      Delete
    2. நேரம் இருக்கும் போது மற்ற கதையையும் படியுங்கள். கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன

      Delete
  3. நல்ல கதை.. கதை சொல்றது ஒரு கிராமத்தான் பாஷைல இருக்கு. அதனால முடிஞ்ச வரை ஆங்கில பதங்களை குறைக்க முயற்சி செய்ங்க..

    ReplyDelete
    Replies
    1. அது வந்து ஒரு சுஜாதா கதைல ரிக்ஷாகாரர் SPACE பத்தி கத சொல்றதா வரும் (தலைப்பு ஞாபகம் இல்லை). அத INSPIRE பண்ணி தான் எழுதினேன். கருத்துக்கு நன்றி. திருத்திகொள்கிறேன்

      Delete
  4. Kalaku da KG :) keep rockin wit your skills :) fan of yours :)

    ReplyDelete
    Replies
    1. thanks da. hope i entertain u more without disappointing.. thanks for the continuous support

      Delete
  5. Sooperb Karthi:) Very nice ending...!

    ReplyDelete
    Replies
    1. sri good to see u read all my stories. really much happy.

      Delete