Pages

Wednesday, 18 January 2012

நிஜம் அல்ல நிழல்

                                 இந்த கதை படிக்கும் போது  சிகப்பு ரோஜாக்கள்; DIAL M FOR MURDER பட காட்சிகள் ஞாபகம் வந்தால் ஆசிரியராகிய !!!!! நான் பொறுப்பல்ல
                               
                                 கணவன் நல்லவன்

                                 மனைவி கள்ளதொடர்பு

                                 கணவன் கொலை செய்ய திட்டமிடுகிறான்

                                 இது தாங்க  கதை...



                                 இனி கதைக்கு போவோம்


                                    திட்டம் தான் இந்தாண்டு திட்டம் அல்ல. ஆறு மாத திட்டம். கொலை செய்ய வேண்டும்.ஆம் அவள் தான். பணக்காரி.. பிணக்காரியாக்க வேண்டும்..
                                 என்னைக்கு வருவ (அதீத மரியாதை )


                                  3 DAYSLA வந்துருவேன் 
               
                                  எல்லாம் எடுத்துட்டு போறீங்கல்ல.(ஆம் உன்னை கொலை செய்யும் திட்டத்தையும் சேர்த்து )

                                  அடுத்த 3  நாட்களில் நடப்பது  


                                  கோபால் டெல்லி சென்று  விட்டான்   


                                  கிருத்திகா கார் விபத்தில் பலி.


                                  கோபால் சென்னை பயணம்.       


                                  கொலை முடிந்து விட்டது. கதையும் தான்.
                           
                                  அப்படின்னு வந்து பார்த்தா அவபாட்டுக்கு உக்காந்து இருக்கா. அந்த கார்த்திக் பயலும் பக்கத்துல உக்காந்துகிட்டு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்காங்க.. அடச்சீ இவளுக்கு ஏன் மரியாதை ..

                                 எங்கே சொதப்பீனோம்???

                               


                                  இனி யாரையும் நம்ப போறதில்லை.. நானே முடிவு கட்டுகிறேன் . யாருக்கு தெரிந்தாலும் பரவாயில்லை. நீங்கள் யாரும் என்னை போட்டுகொடுக்க மாட்டீர்கள்  என்று நம்புகிறேன்.

                                  அன்று இரவு எங்கள் படுக்கை அறையில் ச்சே அவர்கள் அறையில் பீரோவுக்கு பின்னால் ஒளிந்து இருந்தேன்.

                                 இருவரின் முகத்திலும் சிரிப்பு.கடைசியாக சிரித்து கொள்.

                                  யாரும் சந்தேகபடலையா.
                               
                                  ச்சே ச்சே

                                   என்ன சந்தேகம். ஒன்னும் புரியல.பீரோவுக்கு பக்கத்தில் ஒரு செய்தித்தாள். அதிர்ச்சியில் உறைந்தேன்..
                               
                                  பிரபல தொழில் அதிபர் கார் விபத்தில் பலி 


                                                கோபால் என்கிற 31 வயது தொழில் அதிபர் ஏர்போட்டிற்கு செல்லும் வழியில் எதிரே வந்த தனியார் பேருந்தில்  மோதி இறந்தார்.கார் டிரைவர், கோபால் இருவரும் சம்பவ இடத்திலேயே ப......லி....  


MORAL : EXECUTION IS IMPORTANT THAN PLANNING 

9 comments:

  1. Very nice... continue writing...

    ReplyDelete
  2. ஆக இது பேய்க்கதை அல்ல.ஒரு பேய் பேயான கதை.

    ReplyDelete
  3. romba nalla eruku....different thinking....keep it up

    ReplyDelete
  4. பேய்க்கதையா இது ? :))

    போன கதை மாதிரியே கொஞ்சம் வித்தியாசமாவும், அதே சமயம் முன்னமே சிந்திக்க முடியாததாகவும் இருக்கு. நல்லா இருக்குங்க :))

    ReplyDelete
  5. கதை புரியலை!

    ReplyDelete