Pages

Saturday, 15 March 2014

தேவதாசும்,ஸ்வெங்கலியும்

ஓர் நாவல் எத்தகைய மாற்றத்தை வேண்டுமானாலும் ஒரு சமூகத்திலும் உண்டாக்கலாம்.ஒரு நாவலில் வரும் ஒரு கதாப்பாத்திரம் சில சமயங்களில் அழிவதேயில்லை.அந்த நாவலை படிக்காதவருக்கும் அதை பற்றிய ஒரு புரிதல் கண்டிப்பாக இருக்கும்.நம்மில் பலருக்கு சரத் சந்த்ர சத்தோபத்யாய் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. அது பற்றிய தேவையும் இல்லை. ஆனால் தேவதாஸ் பற்றி தெரியும் .

தேவதாஸ் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகப்போகிறது,அது ஒரு பெங்காளிய நாவல் ,தன் 17 ஆவது வயதில் அதை அவர் எழுதியுள்ளார் என்பது எல்லாம் நமக்கு தேவைப்படுவதில்லை. இருந்தும் தேவதாஸ் என்றவுடன் நமக்கு ஒரு கதாப்பாத்திரம் நம் கண் முன் விரிகிறது.தாடி வைத்தவனெல்லாம் இப்போது தேவதாஸ் என்கிற நிலை வந்துவிட்டது.இதுவரையில் 15 தடவைக்கு மேல் இதைத் தழுவி திரைப்படங்கள்  இந்திய மொழிகளில் வந்து இருக்கிறது.

இதே போல் ஆங்கிலத்தில் TRILBY என்று ஒரு நாவல் 1894 இல் எழுதப்பட்டது.நாவல் எழுதிய George Du Marier 1986 இறந்துவிட்டார்.கதையின் நாயகி பெயர் தான் Trilby. Trilby மீது Svengali காதல் கொள்கிறான். அவளோ little bille மீது காதல் கொள்கிறாள்.Little Bille அவள் காதலை ஏற்கிறான்.நம் காதல் நிராகரிப்பைவிட ரணமானது,ஏற்கப்பட்டை காதலை நாமே நிராகரிக்க நிர்ப்பந்தம் செய்யப்படுவது.

வருடங்கள் உருண்டோடுகின்றன.ஐரோப்பாவின் நகரங்களில் ஸ்வெங்கலியும்,ட்ரில்பியும் புகழ்பெற்ற பாடகர்கள் ஆகின்றனர்.ஸ்வெங்கலி overture conduct செய்ய ட்ரில்பி பாட துவங்குகிறாள்.ட்ரில்பியின் வசீகர குரலைக் கண்டு எல்லோரும் ஆச்சர்யமடைகின்றனர்.அவள் குரலில் இத்தகைய ஒரு மாற்றம் எப்படி நிகழ்ந்ததென லிட்டில் பில்லியால் நம்ப முடியவில்லை.அவளின் பழைய குரல் எப்படி இருக்கும் என இவர்களுக்கு தெரியும்

அவளின் லண்டன் கச்சேரிக்காக எல்லொரும் காத்துக்கிடக்கின்றனர்.அன்று ஸ்வெங்கலி conduct செய்யாமல் இருந்துவிடுகிறான்.ட்ரில்பியால் பாட இயவில்லை,அவள் முயற்சி செய்த போதும் 5 வருடங்களுக்கு முன் அவளிடம் இருந்த குரல் தான் வெளிப்பட்டது.ஸ்வெங்கலி இருதய செயலிழப்பால் இறந்து போகிறான்.

ட்ரில்பி பாடும் போதெல்லாம், ஸ்வெங்கலி ஒரு கருவியாக கூடவே இருந்து இருக்கிறான். உண்மையில் ஸ்வெங்கலி தான் எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தி இருக்கிறான்.கருவி தான் ட்ரில்பி. ஸ்வெங்கலி ஒரு ஹிப்னோஸிட்.ஸ்வெங்கலி இறந்தவுடன், கருவியால் தனித்து எதுவும் செய்ய முடியவில்லை.

1931 ஆம் ஆண்டு இந்த நாவலை தழுவி SVENGALI என்கிற பெயரில் ஒரு படம் வெளியாகிறது.ஸ்வெங்கலி என்பது அந்த நாவலில் வில்லன் போன்றதொரு கேரக்டர்.ஆனால் அந்த பெயர் தான் படத்திற்கு சூட்டப்படுகிறது.OXFORD அகராதியில் கூட நாவலில் வரும் ஸ்வெங்கலிக்கு மட்டும் தான் அர்த்தம் கொடுத்து இருக்கிறார்கள்.ஒருவரை ஒருவர் ஒரு தவறான காரியத்திற்காக ஹிப்னோடைஸ் செய்தால் அதற்கு ஸ்வெங்கலி எனப் பெயர்.பெரும்பாலும் ஒரு ஆண் , ஒரு பெண்ணை.இந்த நாவலின் நாயகன் பெயருக்கோ, இல்லை ட்ரில்பியின் பெயருக்கோ இப்படி எந்த விளக்கமும் இல்லை. இந்த வார்த்தையின் பயன்பாடே இந்த நாவலுக்கு பின் தான் வருகிறது.

இன்று வரையில் இந்த வார்த்தை , இங்கு தேவதாஸை போல் பயன்பாட்டில் இருக்கிறது.நாவல் இப்போது இல்லை, எழுதியவரும் அப்படியே. இருந்தும் அதில் வந்த ஒரு கதாப்பாத்திரம் இன்னமும் உயிர்ப்புடன் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.ஆங்கிலம் பேசும் அனைவருக்கும் ட்ரில்பி பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.இருந்தும் இன்னமும் நாம் இறந்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு வாழப் போகும் தேவதாஸர்களும் பற்றியும், ஸ்வெங்கலிகள் பற்றியும் தெரிந்து கொள்ள முயல்வோமாக.




2 comments:

  1. சூப்பரா எழுதியிருக்கீங்க! பாராட்டுக்கள்!

    amas32

    ReplyDelete
  2. அருமை அருமை . நல்லதோர் ஆய்வு நல்லதோர் தகவல். உங்க தலை நிறைய அடர்த்தியான முடி இருப்பது போல, உங்கள் மூளையும் அடர்த்திதான் :)

    ReplyDelete