Pages

Tuesday 14 January 2014

திரைப்பட மேதைகள்

அனைத்து மக்களையும் சென்றக்கூடிய கலையாக இன்று வரையில் நீடித்து,ஏனையவற்றை பின் தள்ளி எஞ்சி நிற்பது சினிமா மட்டுமே.மக்களின் வாழ்க்கையில் அங்கமாகிட்ட ஒரு கலை தன் ஆரம்ப கால நிலையைவிட,தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தை தவிர, பிறவற்றில்,தன் தகுதியில் இருந்து கீழ் இறங்கிக்கொண்டே தான் செல்கிறது.கதை சொல்லும் பாணியில் மாற்றம் வந்து இருந்த காலம் போய்,இப்போதெல்லாம் கதையே சொல்லாமல் சினிமாக்கள் வெளிவருகின்றன.

Chaplin தன் பல படங்களில் பேசவில்லை.பேசும் சினிமாக்கள் எடுக்கப்பட்ட காலத்திலும்,ஒரு விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வசனங்கள் தேவை இல்லை என அவர் அதை ஒதுக்கியே வந்தார்.இருப்பினும் title cards மூலமாக அவ்வப்போது கதை சொல்லப்பட்டுகொண்டே இருக்கும்.Murnau மாதிரியான ஆட்கள் அத்தகைய title cardsஐ கூட குறைத்துக் கொண்டு  படம் எடுக்க முயன்றனர்.

இந்த புத்தகம் d.w.griffith, Stanley Kubrick, Alfred Hitchcock,William Wyler முதலான ஆங்கில இயக்குநர்களை பற்றி ஒன்றும் பேசாமல் விட்டுச்செல்கிறது.இதில்Stanley,Hitchcock பற்றியெல்லாம் இணையத்தில் ஏற்கனவே பலரும் எழுதிவிட்டது காரணமா என தெரியவில்லை.

விருது என்பது ஒரு படைப்பாளியை ஒன்றும் செய்வதில்லை.அவனுக்கு அவனின் எல்லா படைப்புகளுமே ஒன்றுதான்.பார்வையாளன் தான் விருது வாங்கியவற்றை சிறந்தது என எடுத்து கொள்கிறான்.இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுவுள்ள இயக்குநர்களின் அனைத்து படங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.ஒரு குழுவிற்கு மட்டுமே பிடித்து இருக்கும் ஒரு படம் சிறந்தது என சொல்லப்படுகிறது.சென்ற வருடம் அதிகம் சிலாகிப்பட்ட அல்ஃபோன்சோவின் க்ராவிட்டி படம் பல விருதுகளை கண்டிப்பாக குவிக்கும்.ஆனால் அவரின் பிற படங்கள் பற்றி யாரும் யொசிப்பதில்லை. சென்ற முறை ஆஸ்கர் விருது பெற்றது ஃபர்காடியின் Separation திரைப்படம்.இந்த முறை அவரது THE PAST திரைப்படம் ஆஸ்கரின் இறுதி பட்டியலில் கூட இல்லை.இது போன்று கடந்த நூறு ஆண்டுகளில் பல உதாரணங்கள் இருக்கிறது.


ஜெர்மனியின் மொர்னொவ்,லெனி;தன் 19 வயதில் இருந்து இன்று வரை படங்கள் எடுத்துக்கொண்டு இருக்கும் வெர்னெர்;டென்மார்க்கின் ட்ரெயர்; இயக்குநர்களின் இயக்குநராக போற்றப்படும் ஜப்பானின் கென்சி மிஜொகுச்சி, The Human Condition Triology, Harakiri முதலிய படங்களை எடுத்த மசாகி கோபயாசி ; ஃப்ரான்சின் ப்ரெஸ்ஸன் பற்றியெல்லாம் இதுவரையில் தமிழில் சினிமா பற்றிய எந்தவொரு புத்தகத்திலும் வந்ததாய் நான் படித்ததில்லை.



சினிமாவை ஒரு கலையாக நேசிப்பவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கலாம்.

முடிந்தால் இந்த 16 இயக்குநர்களின் அனைத்து படங்களையும் பாருங்கள்.(சில படங்கள் கிடைப்பதில்லை).இல்லையெனில் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சிறந்த படங்களை மட்டுமாவது பாருங்கள்.அதும் கடினமெனில் இவர்களின் பெயர்களையாவது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றேனும் பெருமை பீத்திக் கொள்ளவாவது உதவும்.

திரைப்பட மேதைகள் - எஸ்.ஆன்ந்த்
பதிப்பு-தமிழினி
விலை-450


1 comment:

  1. விமர்சனம் விரைவில் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது... நன்றி...

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete