Pages

Saturday, 28 September 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்-விமர்சனம்

மஞ்சல் புடவை ,டாஸ்மாக் பாடல்கள் இல்லாமல் மிஷ்கின் எடுத்து இருக்கும் இரண்டாவது படம்.ஒரு கதையில் ஹீரோ வில்லன் என்பது எல்லாம் இல்லை.கதையின் பயனத்திற்கு எற்ப அது மாறுபட்டு கொண்டே இருக்கும். The Treasure of sierra madre மாதிரியான படங்களில் இதை காணலாம். இந்த படத்திலும் ஓநாயின் குணமும்,ஆட்டுக்குட்டியின் குணமும் ஸ்ரீ,மிஷ்கின் இருவருக்கும் மாறி மாறி வருகிறது.

மிஷ்கின் ஆட்டுக்குட்டி ஆனதற்கான JUSTIFICATION இறுதி 10 நிமிடங்கலில் ஒரு கதை வடிவில் மிஷ்கின் சொல்கிறார்.அதை சொல்லாமல் இருந்து இருக்கலாம். ஸ்ரீ ஓநாய் ஆகும்பொதெல்லாம் ஒரு JUSTIFICATION தேடி கொள்கிறார்.எல்லோருமே ஒநாய் ஆகும் ஸ்ரீயை கன்வின்ஸ் செய்யும் காட்சி சிறந்த எடுத்துகாட்டு.

அஞ்சாதே,யுத்தம் செய்,ஓஆ என தொடர்ந்து போலீஸ் பக்கங்களை இந்திய சினிமாவில் இவ்வளவு நெருக்கமாய் யாரும் காட்டியதில்லை.

கமல் படங்களில் இயக்குனருக்கும்,மிஷ்கின் படங்களில் ஒளிப்பதிவாளருக்கும் பெரிதாய் வேலை இருப்பதில்லை.படம் முழுக்க இரவு நேர சோடியம் வேப்பர் கண்கள்.

மிஷ்கினுக்கு ஸ்ரீ ஆப்பரேசன் செய்வதற்கு அவன் ஆசிரியர் உதவுவதற்கு அவரின் சூழ்நிலை காட்டப்படுகிறது.அதன் முடிவை இரு புல்லின் நடுவில் பின்னப்பட்ட சிலந்தி வலை உருவகிக்கிறது.இப்படி படம் நெடுக பல காட்சிகள்,

கண் இல்லாதவர் துப்பாக்கியை தடவி பார்ப்பது,ஸ்ரீ கொடுக்கும் கவுண்ட்ற்கு மிஷ்கின் கொடுக்கும் கவுண்ட்,அச்சிறுமி சுவரின் ஓரமாய் ஒதுங்கிக் கொள்ளுவது,’அய்யா” என்பதை பல மாடுலேஷன்களில் சொல்லும் போலீஸ்,மயங்கி இருக்கும் நபரை தாங்கி பிடிக்கும் காட்சி போன்றவை சில.
கதாபாத்திங்களின் தேர்வில் மிஷ்கின் அதிகம் மெனெக்கெடுகிறார்.சி பி சி ஐ டி ஆக பதிவர் ஷாஜி.போலீசாக (மவுனகுரு படத்தில் ஹீரோவிடம் முதல் காட்சியில் அடி வாங்கும் பொலீஸ்),விஷ்னுவர்தன் படங்களில் வரும் ஆதி.இறுதி சண்டையில் அட்டகாசமாய் சண்டையிடும் (உன்னை போல் ஒருவன் படத்தில் வெடி மருந்து விற்று கணேஷ் வெங்கட் ராமிடம் அடி வாங்குபவர்).படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் ஒரு போலீஸாக நடித்து இருக்கிறார்.


கதை என்ன என்பதை சொல்லாமல் இறுதி வரை உட்கார வைக்கும் திரைக்கதை.என் அருகில் படம் பார்த்த நபர் எல்லாம் பல முறை ஷ்ப்பா என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

படம் நெடுக மிஷ்கின் டெம்ப்லேட் ஃப்ரேம்கள்.ஏனோ பல இயக்குனர்களின் டெம்ப்லேட் கதைகளை நாம் குறை சொல்வதே இல்லை.

சமீப காலங்களில் ராஜாவை சரியாய் பயன்படுத்தியது பாலா,கமலுக்கு அடுத்து மிஷ்கின் தான்.

Threshold guardian,fairy tale,compassion,grim reaper,somebody loves all,Walking through life என பல ட்ரேக்ஸ் செம்ம ரகம். HANS ZIMMER மாதிரியான இசை. ராஜா இனியாவது எண்ணிக்கைக்கு வாசிக்காமல் இது மாதிரி மட்டும் .....

இறுதி டைட்டில் credits இல் மிஷ்கின் ஓவ்வொரு கதாபாத்திரத்தையும் மிருகத்தோடு ஒப்பிட்டு இருப்பார்,ஆரண்ய காண்டம் படத்தில் ஒவ்வொருவரின் பெயரும் மிருகத்தோடு இருக்கும். சம்யங்களில் இது போன்றவை க்ளிக்காமல் போவது உண்டு.தான் செய்த்தை விளக்க முயற்சித்து இருக்கிறார்.

மிஷ்கின் இறுதியில் இவ்வாறாக ஒரு கதை சொல்வார்.

ஒரு காட்டுல ஒரு கரடிக்கூட்டம் வாழ்ந்து வந்துச்சு.அதுகளுக்கு ஆட்டுக்குட்டி மட்டும் தான் வேணும்.அதுக ஆடுகள மட்டும் தான் வாழ விடும்.அங்க தெரியாத்தனமா சில ஓநாய்கள் மாட்டிக்கிச்சு.கூறுகெட்ட கரடிகளுக்கு ஆட்டுக்குட்டி ருசி மட்டும் தான் தெரியும்.இங்க வாழனும்னா ஆட்டுக்குட்டி தான் இடனும் என்ற விதி ஓநாய்களூக்கு புலப்படல.இதுக இட்ட ஆட்டுக்குட்டி இதுகள மென்மேலும் புண்படுத்துச்சு.ஓநாய்கள் சீழ் ஒழுகி இறந்து போனாலும் அதுகளுக்கு தெரிந்தது என்னவோ ஒநாய் குட்டிகள் தான்.






3 comments:

  1. நல்ல விமர்சனம் :-) படம் விமர்சிப்பதற்கே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதற்கு you have done a goo job :-)

    amas32

    ReplyDelete
  2. படத்தை மில்லி மில்லியா ரசிச்சு எழுதியிருக்கீங்க நமக்கு இப்போ பார்க்கிற கொடுப்பினை இல்லை

    ReplyDelete
  3. இறுதியாக நீங்கள் கூறும் கதை அருமை இந்த கதை சினிமா மொழியை சரியாக பயன்படுத்த முயற்சி செய்து சரியான தியேட்டர்கள் அமையாமல் கணிசமான சினிமா ரசிகர்கள் கிடைக்காமல் மறுவாரமே தியேட்டர்களில் இருந்து அகற்றப்பட்ட தரமான திரைபடங்களுக்கும் அதன் இயக்குனர்களுக்கும் சமர்ப்பணம் :-(

    ReplyDelete