Pages

Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Saturday, 9 November 2013

அப்பா

எனக்கு கனவுகள் மீது எப்போதும்  ஒரு அதீத பிரியம் உண்டு.சில சமயங்களில் நான் தேடும் பொருளை யோசித்துக்கொண்டே தூங்குவது உண்டு,கனவில் அது எங்கு இருக்கிறது என்பதை அவ்வப்போது நான் பார்த்து இருக்கிறேன்.கனவுகள் சில சமயம் அப்படியே நடந்தும் உள்ளது.கனவுகள் தான் சில சமயங்களில் மனிதனை வாழ வைக்கிறது.சமயங்களில் ஒரு செயலை செய்ய தூண்டவும் செய்கிறது.ஒருவனை வீழ்ச்சி பாதையிலும் அது அவ்வபோது கொண்டு சென்று விடுவதுண்டு.ஒவ்வொரு கனவிலும் என்றோ எழுந்த ஒரு ஆசை புதைந்து இருக்கும்.சின்ன சின்ன ஆசைகளும்,சொற்ப கனவுகளும் தான் இந்த வாழ்க்கை.

இன்று காலை கண்ட கனவை மதியம் 12 மணி ஆகியும் இன்னும் மறக்க முடியவில்லை.படியில் உக்கார்ந்து கொண்டு ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள் " படித்துக்கொண்டு இருக்கிறேன்.அப்பா அதை பார்த்து விடுகிறார்.அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அசோகமித்ரனின் 18வது அட்சக்கோடு  என் தந்தையின் கைகளால் கிழிக்கப்பட்டது என்பது இப்போதும் நினைவு இருக்கிறது.

"நீயெல்லாம் எங்க உருப்பட போற" என்று அவரது கீர்த்தனை உச்சஸ்தாயியில் ஒலிக்கிறது .நான் அதை மனப்பாடம் செய்துவிட்ட போதிலும் எப்போதும் போல் என் முன் ஒப்பித்துக் கொண்டு இருக்கிறார் .நல்ல வேலையாக அசோகமித்ரனுக்கு  நிகழ்ந்தது ஜெயகாந்தனுக்கு நிகழவில்லை.காட்சிகள் மங்கத் தொடங்கின.

சட்டென விழித்துக்கொண்டேன்.காலங்கள் பல சென்று விட்டன."நான் உருப்பட்டு விட்டேன்,பார்த்தீரா ??" என எக்காளமிடும் அளவுக்கு சாதிக்கவில்லை என்றாலும்,ஏதோ  உருப்பட்டு இருக்கிறேன்.அவர் என் மீது அதிக நம்பிக்கை வைத்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.என் மகனை நான் பெரிதாய் கண்டித்து இல்லை.எனக்கும் சேர்த்து என் மனைவி அந்த வேலையை செவ்வனே செய்து விடுகிறாள்.அவன் புத்தகம் வாசித்து நான் பார்த்ததே இல்லை.பொறியியல் படிப்பு  படித்து கொண்டு இருக்கிறான்.இவன் வயதில் நான் சுமார் 100 புத்தகங்கள் படித்து இருந்தேன்.அதை என் அப்பாவுக்கு தெரியாமல் பரண் மேல் ஒளித்து வைத்து இருந்தேன்.இப்போது நான் இருக்கும் வீட்டு பரணை நான் எட்டி பார்த்ததே இல்லை.அது என் மகனுக்கான இடம்.என்னுடைய எல்லா புத்தகங்களும்  என் அப்பாவின் கைகளுக்கு கிட்டும் போது எனக்கு திருமணம் நடந்து இருந்தது.மகன் பிறந்த போது அவனுக்கு "தாத்தா "என்றெல்லாம் யாரும் கிடையாது.அவ்வப்போது புகைப்படத்தில் பார்த்து இருக்கிறான் அவ்வளவே.

இப்போது  அவன் வீடு திரும்பும் சமயம்.
திடீரென்று ஒரு யோசனை.ஏன் இப்படி செய்கிறேன் என தெரியாது??

ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள் "புத்தகத்தை தேட மட்டும் 1 மணி நேரம் பிடித்தது.பழைய வீட்டுக்கு சென்றேன்.

இப்போதெல்லாம் வீடு பூட்டித்தான் கிடக்கிறது.சிறுவயது ஞாபகம் என்னை பீடிக்கத் தொடங்கியது.அப்போதெல்லாம் அந்த குட்டி சுவரை எளிதில் தாண்டி விடுவேன்.சுவரின் மீது கை ஊன்றி எம்பி உக்கார்ந்து பின்பு ஒருவழியாய் உள்ளே குதித்தேன்.அப்பாவும் அம்மாவும் இங்கு தான் கடைசி வரை இருந்தனர்.இந்த  வீட்டை விற்க ஏனோ மனம் வந்ததே இல்லை.மூன்றாம் படி சற்றே விண்டு இருந்தது.அதுவும் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறது போலும்.முன்பு அமர்ந்த அதே இடத்தில் சென்று அமர்ந்தேன்.வீட்டை கூட்டி பல வாரங்கள்  ஆகிவிட்டது போலும்.அதை பற்றி எல்லாம் அங்கு உக்கார்ந்த பின்தான் யோசிக்க தொடங்கினேன்.கடிகார முள் பின்னோக்கி சுழல தொடங்கியது.வருடங்கள் நொடிகளாய் விரைந்து கொண்டு இருந்தன.சிறு வயதில் எதற்கு என்றே தெரியாமல் அக்காளிடம் சண்டை இட்டது,வீட்டை விட்டு வந்தது எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வந்தது.சில கேள்விகளுக்கு காலங்களும் பதில் சொல்வதில்லை.அதை சிரிப்புகளால் கடந்து சென்றேன்.நம் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை அது அலட்சியமாக திருப்பிவிட்டு சென்றுவிடும்.

என் எல்லா கனவுகளும் பலித்தது இல்லை.இது பலிக்கக்கூடாதா என்று ஏக்கத்தோடு இரவு வரை அங்கேயே உக்கார்ந்து இருந்தேன்.

இரவு வீடு வந்து சேர மணி 10 ஆகிவிட்டது.யாரிடமும் எதுவும் பேசவில்லை.முதல் முறையாக மனம் அயர்ந்து இருந்தது.43 ஆண்டுகளின் வாழ்க்கையை ஒரே மாலை பொழுதில் இந்த மனம் தன்னால் இயன்ற வரை எனக்கு மறு ஒளிபரப்பு செய்து காட்டியது.

மறுநாள் 

காலையில் அலுவலகம் செல்லும்போது வங்கி செல்ல வேண்டி இருந்தது,படிவத்தில் தேதியை நிரப்பும் போது தான் நினைவிற்கு வந்தது.நேற்று அப்பாவின் நினைவு நாள்.

Monday, 18 February 2013

பீட்சா தின்ற கதை

எட்டாயிர ரூபாய் மாத வருமானத்தில் ஒரு பெரு நகரத்தில் மூன்று பேர் கொண்ட குடும்பம் வாழ்வதென்பது சபிக்கப்பட்ட நிதர்சனம். தலைவலித்தால் கூட ஒரு காப்பி குடிக்க யோசிக்க வேண்டும். வாரமொரு முறை என்றிருந்த சினிமா இப்பொழுது எப்போதோ ஏதோ ஒரு மாதத்தில் என்றாகிவிட்டது எனது பொருளாதார  வளர்ச்சி. சந்தையில் இன்ன இன்ன பொருட்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை டிவியில் விளம்பரங்கள் பார்த்து பெருமூச்செறிவதோடு சரி. ஆனால் என் பத்து வயது மகனுக்கு அதெல்லாம் புரியாதே. விளம்பரங்கள் பிரத்யேகமாக குழந்தைகளுக்காகவே தயாராகின்றன போலும். சாக்லேட்டிலிருந்து துணிகள் தங்க வைர விளம்பரங்கள் வரை அவை சிறுவர் சிறுமியரை குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. நாம் உற்பத்தி செய்த ஒன்றின் மூலம் அவர்களின்
விற்பனையை பெருக்கும் உத்தியை கண்டுபிடித்தவனை மலைஉச்சியில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும். கீழே பாதாளம் தெரிகிறதா என கேட்க வேண்டும். 

அதென்னவோ என் மகனுக்கு சாக்லேட் கலர்பென்சில் துணி விளம்பரங்களில் ஆர்வம் ஏற்படவில்லை. Just Rs.99 என்று அறைகூவும் பீட்சா விளம்பரத்தை பார்த்தால் போதும். அமர்ந்திருப்பவன் இரண்டடி அந்தரத்தில் எகிறி குதிப்பான். "ப்பா இதாம்ப்பா நான் சொல்வேனில்ல இதாம்பா" என்பான். சமையலறையில் இட்லி வேகவைத்துக் கொண்டிருக்கும் அவன் அம்மாவை இழுத்துக் கொண்டு வருவான். அதற்குள் அடுத்த அறைகூவல் தொடங்கியிருக்கும். நீண்ட நாட்களாக பீட்சா  வாங்கித்தர சொல்லி அடம்பிடிக்கிறான். ஒரு வேளைக்கு ஒருவனுக்கு நூறு ரூபாய் என்பது என் சிறிய பட்ஜெட்டில் துண்டல்ல ஒரு பெரிய ஜமுக்காளமே விரிப்பது.

நாளை இவனுக்கு பிறந்தநாள். இந்த முறையாவது இவனது இந்த சின்ன ஆசையை நிறைவேற்ற வேண்டுமென விரும்பினேன்.அந்த வட்ட வடிவை முக்கோணங்களாக வெட்டி யுவ யுவதிகள் சுவைக்கிறார்கள். விளம்பரங்களில் பார்த்ததுதான். பின்பு வாழ்வே ஜென்ம சாபல்யம் அடைந்தது போல அவர்ளது முகங்களில் அத்தனை மகிழ்ச்சி. அப்படி குதூகலிக்க என்னதான் அதிலிருக்கிறது? ஒரே ஒரு பீட்சா வாங்கிக் கொள்ளலாம். நிச்சயமாக ஒரு முழு பீட்சாவை இவனால் உண்ண முடியாது. நூறு ரூபாய். பஸ்ஸில் போக வர முப்பது ரூபாயாவது வேண்டும். நூற்றைம்பது ரூபாய் கொண்டு போனால் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையே உற்சாகத்தை
கொடுத்தது. 

காலையில் சீக்கிரமே எழுந்து இருந்ததிலேயே புதிதாக தெரிந்த உடைகளை அயர்ன் செய்து குளித்துவிட்டு முந்தாநாள் போட்ட சட்டையையே மீண்டும் அணிந்து கொண்டேன். பயலும் உற்சாகமாக இருந்தான். மனைவி கூட வழக்கத்திற்கு மாறான மகிழ்ச்சியோடு இருப்பதாகப் பட்டது. அன்று சீக்கிரமே ஆபிஸ் கிளம்பிவிட்டேன். மாலையும் சீக்கிரம் வீடு திரும்பி உடை மாற்றி பயலை பீட்சா கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். "புது டிரஸ் ஸ்கூலுக்கு போட்டு போக வேண்டாம்.அப்பா சாயந்திரம் வந்து ஒன்ன வெளிய கூட்டிட்டு போறப்ப போட்டுக்கலாம் என்ன?" என்றேன். தலையாட்டினான். சமத்துப்பயல். இன்று நிச்சயமாக ஆகாசத்தில் பறக்கப் போகிறான். திட்டம் போட்டிருந்த நேரத்திற்கு முன்பாகவே  வீடு வந்து முகம் மட்டும் கழுவிக் கொள்ளலாம் என யோசித்து பின்பு அந்த எண்ணத்தை ஒத்திப்போட்டு குளித்து மனைவியிடம் ரகசியமாக கிசுகிசுத்து விட்டு கிளம்பினேன். பேருந்தில் மகனிடம் பீட்சா சாப்பிடப் போறோம் என்றபோது கண்களை அத்தனை பெரிதாக்கி ஆச்சரியப்பட்டதை பார்க்கும் போதே எனக்குப் பெருமையாக இருந்தது. 

"நிஜமாவாப்பா நிஜமாவா எனப் பத்து முறையாவது கேட்டிருப்பான்.
அன்றைக்கு வாழ்க்கையில்  முதல் முறையாக பீட்சா சாப்பிடுவது என முடிவு செய்து அதற்கென்றே பிரத்யேகமான கடைக்குள் நுழைந்து தயங்கி அமர்ந்தோம். சைவத்திலிருந்தே ஆரம்பிப்பதென ஆர்டர் எடுக்கவந்த பெண்மணியிடம் VEG PIZZA என்றேன். பதினைந்து நிமிடங்கள் கடந்தும் வாழ்வை உன்னதமாக்கும் பீட்சா வராததால் என்ன செய்வதென்றறியாமல் அந்தப் பெண்மணியை நான் அடிக்கடி திரும்பிப் பார்ப்பதை அவரும் கவனித்துக்கொண்டிருந்தார்.  எட்டாவது முறை பார்த்தபோது  'இன்னும்
அஞ்சு நிமிஷம் சார்' என்றார். நான் அசட்டுத் தனமாக சிரித்துவைத்தேன். பிசியாக இருப்பதாக காட்டிக் கொள்ள அலைபேசியை நோண்ட ஆரம்பித்தேன். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பீட்சா அந்த நிறுவனத்தின் பெயர் தாங்கிய அட்டைப்பெட்டியில் பேக் செய்யப்பட்டு என் முன் வைக்கப்பட்டது.அருகே சாஷேக்களில் சாஸும் நான் இன்னதென்று அறியாத இன்னபிற சமாச்சாரங்களும். 

உடனேயே உண்ணப்போகும் எனக்கெதுக்கு பேக் செய்து தருகிறார்கள் எனக் குழம்பிக்கொண்டே கொஞ்சநேரம் அதை எப்படி எங்கிருந்து பிரிப்பது என அறியாது தடுமாறி வெறித்துப் பார்த்து, பை பாஸ் சர்ஜரி செய்யும் போலி டாக்டர் போல தாறுமாறாக அட்டையை நான் கிழிக்க ஆரம்பிக்க, அந்தப் பெண் நிதானமாக என்னருகே நடந்து வந்து ஏதோ புதிய நகைக்கடை ஷோ ரூமை திறந்து  வைத்த மார்க்கெட் இழக்காத நடிகையை போல அட்டையை லாவகமாக நீக்கி பெருமிதம் பொங்க என்னைப் பார்த்தார். மகன் என்னை பரிதாபமாக பார்த்தான்.நான் பீட்சாவைப் பார்த்தேன்.நான்கு துண்டுகளில் ஒன்றை அவனுக்கு அளித்துவிட்டு நானும் ஒன்றை எடுத்து கடித்தேன். வழுவழுவென்று நான் கடித்த பகுதியுடன் நூல் போல ஒட்டிக் கொண்டு பெரிய துண்டும் நீட்டிக் கொண்டிருந்தது.கையின் உதவியுடன் அப்பகுதியை கத்தரிக்கலாம் என்றால் இந்தப் பெண் வேறு பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

'ஏங்க நான் வெஜ் தான கேட்டேன்.சீஸ் பீட்சா கொடுத்திருக்கீங்க' என்றேன். அவர் அற்பப் பதரே என்பதுபோல பார்த்து, 'இங்க வெஜ்னாலே சீஸ் பீட்சாதாங்க ' என்றார். ஒரு வழியாக பற்களாலேயே அந்த அபாயத்தை கடந்து நிம்மதிப் பெருமூச்சிடுகையில், 'இந்த சாஸ் மேல ஊத்திக்கங்க.அப்பத்தான் நல்லா இருக்கும்' என்றார். 'ஆமாப்பா  நல்லா இல்ல' என்ற மகனை முறைத்துவிட்டு  சாஸ் ஊற்றிக்கொண்டேன். அதற்குள் அவர் மற்ற சாஷேக்களை சுட்டிக் காட்டி இதையும் பிரிங்க' என்றார். 'இல்லீங்க.அது பிடிக்காது(?)' என்றேன். 'அப்படியா?'. அந்த 'அப்படியா'வில் பலத்த சந்தேகமும் அவநம்பிக்கையும் தெறித்து என் மேல் விழுந்து என்னை சுட்டது. 

மகனின் தட்டைப்  பார்த்தேன்.பாதி கூட சாப்பிட்டிருக்க வில்லை.மீதமிருந்த இரண்டு பகுதிகளையும் முகத்தை அஷ்டகோணலாக்கி உண்டு முடித்தேன். கை கழுவலாமா என யோசித்து பின் நாப்கினால் என கையயையும் அவன் வாயையும் துடைத்துவிட்டேன்.

'இப்பதான் மொத தடவ பீட்சா சாப்பிடுறீங்களா?

'ஆமா'

பில் வந்தது.  பில்லைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்பதை உச்சரிக்கையில் ஏற்படும் துல்லியமான அதிர்ச்சி. வீட்டிலிருந்து இங்கு வருவதற்ரு இருவருக்கும் சேர்த்து பதினான்கு ரூபாய். பீட்சா நூற்றிபத்து ரூபாய் + வாட் வரி என ஏதோவொரு எழவு சமாசாரத்தை போட்டு அதற்கு தனியாக பதினேழு ரூபாய்.ஆக மொத்தம் ஒரு பீட்சா நூற்றி இருபத்தியேழு ரூபாய். ஒன்பது ரூபாய் மிச்சமிருந்தது. அந்தப் பெண் என்னையே பார்த்துக்கொண்டிருக்க ஐந்து ரூபாய் சில்லரையை எறிந்து விட்டு மகனை இழுத்துக்கொண்டு ஏமாற்றமடைந்த உஷ்ணத்தோடு கடையை விட்டு வெளியேறினேன்.நான்கு ரூபாய்க்கு எந்த பேருந்திலும் ஏற்றமாட்டான்.பத்து வயது ஆன ஒரு சிறுவனை கையில் பிடித்துக்கொண்டு பத்து கிலோமீட்டர் நடக்க வேண்டும்  என்றெண்ணும் போதே துக்கம் பொங்கி கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரு பேருந்து எங்களை கடந்தது. 

"அப்பா இந்த பஸ் நம்ம வீட்டுக்குப் போவுமா?" என்றான். 

"பேசாம வாடா  சனியனே" என்றேன்.

Thursday, 21 June 2012

சாட்சி

இரவு மணி இரண்டு இருக்கும்.

கார்த்திக் சற்றும் பயமில்லாமல் அந்த ஊரின் புனிதமேரி நினைவாலயத்தின் உள்ளே சென்றுகொண்டு இருந்தான்.அவன் அலைபேசியின் வெளிச்ச உதவியோடு கல்லறைகளை கடந்துகொண்டு இருந்தான்.தான் தேடிவந்ததை கண்டது போல் ஒருநிமிடம் ஒரு கல்லறையை வெறித்துப் பார்த்தான்.

                                                           கரோலின் பெர்னாண்டஸ் 
                                          தோற்றம் 22.06.1986 மறைவு 26.12.2010 .

அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தவன்  சட்டென அங்கிருந்த ஒரு கோடாலியை எடுத்து கல்லறையை உடைக்கத் தொடங்கினான்.

உள்ளே அவளின் சருகு போன்றதொரு கூடு  தான் இருந்தது.மூக்கின் துவாரம் வழியாக ஒரு புழு ஊர்ந்து கொண்டு இருந்தது.
அவனது முகம் வியர்த்துவிட்டது.சட்டென அந்த உடலை எடுத்து தன் முகத்தின் அருகே கொண்டுவந்தான்.தன் மொபைலில் ஒரு புகைப்படம் எடுப்பதற்குள் எங்கிருந்தோ வந்த கூட்டம் அவனை சுற்றிவளைத்துவிட்டது.

காவல்நிலையம்.....

..................
சற்று சோர்வடைந்த குரலுடன் கார்த்திக் பேச ஆரம்பித்தான்.

நானும் கரோலினும் லவர்ஸ் சார்.
.............................
............................
அவன் கதையைக்கேட்டு எல்லோரும் சோகமுகத்தோடு இருந்தனர்.

ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டு இருக்கும் பொழுது வேறொரு கார் நேரெதிரே வர ;இவன் தன் காரை திருப்பமுயன்று அது ஒரு மரத்தின் மீது மோதி அவள் இறந்துவிட்டதாகவும் கூறினான்.

இறந்தாலும் காதலி காதலிதானே. அவள் பினமானாலும் ,சில வருடத்தில் மக்கிவிட்டாலும் இவன் காதல் போயத்துவிடுமா என்ன?.

இவனது முகவரியைக்குறித்துக்கொண்டு  காவல்துறையினர்  இவனைவிடுவித்தனர்.

காரில் தன் நண்பனோடு பயணிக்கத்தொடங்கினான்.

டேய் என்ன சொல்லிடா தப்பிச்ச . கார் ஓட்டிக்கொண்டே பதில் எதிர்பார்த்து இருந்தான் ஜெரோம்.

பதிலெல்லாம் இருக்கட்டும்.பெட் வச்ச 5000 ரூபாயை எடு. என்னமோ ஜீசஸ் , பிசாசுனெல்லாம் பயம் காட்டின.எப்புடி.

கண்டிப்பா காச தர்றேன்.என்னடா சொன்ன?.

லைட்டா மன்மதன் அம்பு கதைய உல்டாபண்ணி சொன்னேன். எல்லோரும் நம்பீட்டாங்க.

சரி அந்த பொண்ணு.

கரோளின்க்ரா பேரயே அங்க தான் பார்த்தேன். அட போட பொணம் என்ன வந்து சாட்சியா சொல்ல போகுது.

இருவரும் சிரித்தனர்.

மறுநாள் காலை ...

காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உடல் நசுங்கி பலி.

இது விபத்து அல்ல கரோலின் தான் இவர்களை கொன்றாள் என்று இந்த இரு பிணமும் சாட்சியா சொல்ல போகிறார்கள்

நோட்டு:புள்ளி மட்டும் வைத்து இருக்கும் இடங்களில் நீங்களாகவே
ஒரு காதல் கதையை முடிவு செய்துகொள்ளவும்

Wednesday, 2 May 2012

கைதியின் டைரி

பெங்களூருவின் பாரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் வருக வருகவென நிரபராதிகளையும்  அன்போடு தன் பக்கம் இழுத்தவண்ணம் இருந்தது. இந்த பத்திரிகை நிருபர் இங்கு வருவது இருபத்தி ஆறாவது முறை.தினமும்  தண்டிக்கப்பட்ட  ஒவ்வொருவரும் தான் ஏன் சிறைக்கு வந்தனர் என்பதைப்பற்றி சொல்ல வேண்டுமாம்.

இந்த நாள் என்னுடையது.

இங்கு நான் அடைக்கப்பட்டு இருப்பதற்குரிய காரணம் என்னவெனில்;

சும்மா பேச்சு வழக்கில சொல்லுங்க.நான் எழுதிக்கறேன்.

சரி அப்புறம் உங்க இஷ்டம்.
நான் என்ன பத்தி சொல்றதுக்கு முன்னாடி என் பக்கத்து ரூம்ல இருக்குற அபுஜ்மரியா பத்தி சொல்லணும்.

நீங்க உங்கள பத்தி மட்டும் பேசலாம்.அவரென்ன ஊமையா??

ஊமை இல்லை.ஆனால் ஊமை ஆக்கப்பட்டவர்.

சட்டீஸ்கர் மாநிலத்துல ஒரு கிராமத்து  மக்களுக்காக போராடியவர். அந்த மாநிலம் இந்த மனுசன மதிச்சு விருதெல்லாம் கொடுத்துச்சாம். இதுதாங்க நடந்தது.

அங்க இருக்குற ஒரு பழங்குடி அனாத  பெண்ணை மூணு பெரிய இடத்து நாய்க கற்பழிக்கறாங்க. நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேசனுக்கு போன அந்த பொண்ணுக்கு அங்கயும் வெறியாட்டம் தான் நடந்து இருக்கு.விஷயம் இந்த அபுஜ்மரியாவுக்கு போக அவர் எவ்வளவோ போராடினாராம்.

கடைசியா இவரையும்,அந்த பொண்ணையும்  மாவோயிஸ்ட் தீவிரவாதின்னு  முத்திர குத்தி இங்க அடைச்சுவச்சுருக்காங்க.

எந்த மாநிலம் இவருக்கு அவார்ட் கொடுத்துச்சோ அதே மாநிலம் இவர தீவிரவாதின்னு சொல்லுது.நான் இங்க வந்து ரெண்டு மாசம் ஆவுது.இதுவரைக்கும் ஒரு வார்த்தை பேசல.

சில சமயம் மனுஷன் செத்துட்டார்ன்னு நினைக்குறப்ப கண்ணுல லேசா கண்ணீர் வரும்.

சரி சரி டைம் ஆகுது உங்கள பத்தி சொல்லுங்க.

அந்த பெரிய மனுசனோட பாக்குறப்ப நான் பண்ணினது எல்லாம் தப்பு தான். என் வக்கீலுக்கு இது வரைக்கும் ரெண்டு லச்ச ரூபா செலவு அழுது இருப்பேன். பன்னிபய வெளிய எடுக்க முடியாதுன்னு கைவிருச்சுட்டான்.தப்பு பண்ணினது ஏதோ  உண்மைதாங்க.யாருதாங்க தப்பு பண்ணல.ஏன் ஜட்ஜ் தப்பே பண்ணி இருக்க மாட்டனாக்கும்.சொல்லுங்க

தப்பு பண்ணீட்டு வெட்டிவசனம் பேசாதே. தப்பு பண்றப்ப யோசிச்சுருக்கணும்.

அதேதாங்க.ரெண்டு லச்ச ரூபா செலவு பண்ணி உண்மையெல்லாம் சொல்லி படிச்ச வக்கீலாலையே ஒன்னும் புடுங்க முடியல. உன்கிட்ட சொல்லி நீ என்னத்த புடுங்க போற.பேப்பர கிழிச்சு போட்டுட்டு கெளம்பற வழியப்பாரு..

Thursday, 12 April 2012

ஆண்டிடோட் (ANTIDOTE)

அவள் எனக்கு நன்கு பரிச்சயமானவள் தான், கல்லூரி நாட்களில் .

கார்பன் உருண்டைகள் நாட்டியம் ஆடிக்கொண்டு இருக்கும்,அவளின் இமைகளாய்.அதற்காகவே அவளை கல்யாணம் செய்து கொள்ளலாம்.அவள் என்னை ஈர்த்த விஷயங்களில் அவளது தீர்க்கமான பேச்சும்  ஒன்று.எதையும் சட்டைசெய்துகொள்ள மாட்டாள்.அவளோடு தர்க்கம் செய்த நாட்கள் எண்ணற்றவை.

அப்போது அரசு மருத்துவக்கல்லூரியின் இறுதி நாட்களில்  இருந்தோம் .ஒரு தனியார் பேருந்தில் சில நண்பர்களோடு திருச்சி  செல்ல வேண்டியிருந்தது.

அன்று என் காதலை சொல்ல திட்டமிட்டு இருந்தேன். நான் சொல்வதற்கு முன்பு அவள் அக்காரியத்தை செய்வாள் என என்னிடம் முன்னரே கூறியிருந்தால் நான் பயணப்பட்டு இருக்கவே மாட்டேன்.

பயணி ஒருவர் தள்ளாடிக்கொண்டு நின்றிருந்தார்.இவர் குடித்துவிட்டு பயணம் செய்ததை அனைவரும் வெறுப்பாய் பார்த்தோமே தவிர யாரும் அவரை வண்டியில் இருந்து கீழ் இறக்கவில்லை.

நானும் அவளும் சிரித்து பேசிக்கொண்டு இருக்க;அவர் அவளை ஆட்டு இறைச்சிக்காக எந்நேரமும் விழித்துக்கொண்டு இருக்கும் நாய் போல் பார்த்துக்கொண்டு இருந்தான்..

அவள் அவரை சட்டைசெய்ததாக தோன்றவில்லை. மாறாக, அவள் பேச்சிலும்;நான் அவளை கவனிக்கவில்லை என்பதில் மட்டுமே இருந்தது.

காதல பத்தி என்ன நினைக்குறீங்க??

ஹ்ம்ம் நீயுமா ??. உனக்கு  யார் மேல? என்ன திடீர்னு?

சும்மா சொல்லுங்க..

LOVE IS A FOOLISHMAN JOB . எந்த மிருகமாவது லவ் பண்ணுதா?. எல்லாம் நேரடியா செக்ஸ்னு ஆரம்பிச்சுரும். இந்த மனுச மிருகம் மட்டும் தான் இப்படி
எல்லாத்துக்கும் டிராமா பண்ணிட்டு இருக்கும்.

அவள் இப்படி சர்வ சாதாரணமாய் செக்ஸ் என சொல்லுவாள் என நான் எதிர்ப்பாக்கவில்லை.ஆனால் அவள் தாண்டவம் ஆடியதை நான் காணவேண்டும் என்பதற்காக நேரம் வேகமாய் சுழன்றுகொண்டு இருந்தது.

அந்த தள்ளாட்டலும் தன் பணியை செவ்வனே தொடர்ந்து கொண்டு இருந்தான்.திடீரென அவளது இடையில் கிள்ளினான்.

அதற்கு முன்பு வரை நான் அவளை  அவளாகாவே பார்த்து இருந்தேன். இவள்போல் அன்று தான் பார்த்தேன்.இதற்கு பின்பு அவளிடம் நான் காதல் பற்றி பேசவேயில்லை.

துர்க்கை தன் விழிகளை கோரமாக்கினாள் .அவளின் தேய்ந்துபோன காலணி இன்று அதிவேகமாய் தேய்ந்தது.

பேருந்து நிறுத்தப்பட்டது.

உன் அக்கா இடுப்ப கிள்ள வேண்டியதுதான.அடியின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருந்தது.

ராதிகா எல்லோரும் பாக்கறாங்க.

பாக்கட்டும்; அப்பயாவது இந்த மாதிரி நாய்களுக்கு புத்தி வரட்டும்

பஸ் ஹாரனை ட்ரைவர் ஒருமுறை அழுத்தியது தான் மிச்சம்;இவளின் பார்வையிலேயே டிரைவர் வண்டியின் என்ஜினை அணைத்துவிட்டார்.

அடி இன்னும் குறையவில்லை.அவள் கண்ணில் இருந்து ஒரு துளி நீர்கூட இல்லை. ஆனால் அப்படியொரு  கோபம்.

தாண்டவம் ஒருவழியாய் முடிந்து;பேருந்து கிளம்பியது.

இவனுகளுக்கு எல்லாம் ஆண்டிடோட் கொடுத்துட்டு அடிக்கணும்.அப்ப தான் உரைக்கும்.

ஹ்ம்ம்

The depressed nervous system should be made active. bastards.


சில நேரம் நிசப்தம் எங்களை சூழ்ந்து இருந்தது.

சரி நம்ம என்ன பேசிக்கிட்டு இருந்தோம். ஹ்ம்ம் யார லவ் பண்ற சொல்லவேயில்ல .

நாகர்கோவில் வந்துருச்சு.இறங்கலாம் 

அவளிடம் அதற்கு பின்னர் நான் காதல் பற்றி பேசக்கூட தயங்கினேன்.

நான்கு வருடம் என்னுள் கரைந்துபோனது.

நான் கோவையில் ஒரு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டு இருந்தேன்.

ஹேய் கார்த்திக் எப்படி இருக்க ??. 

கார்த்திக்கை நான் பார்த்து இரண்டு வருடம் ஆகிருந்தது.கடைசியாய் அவனை   MD நுழைவு தேர்வு அன்று பார்த்த ஞாபகம் .ராதிகாவின் ஊர்க்காரன் என்பதால் இவனை ஞாபகம் இருந்தது.

அவன் பதிலளிக்காமல் இருக்க ,நான் தவறான நபரை கார்த்திக் என அழைத்தது போல் தோன்றியது.

சாரி ......

நீங்க.. ராமநாதன் தான ..எப்படி சார் இருக்குக்கீங்க?? ஒரு ரெண்டு வருஷம் இருக்குமா நம்ம பார்த்து??.

ராதிகாவைப்பற்றி கேட்க நினைத்தேன்.

அதற்காக அவரிடம் பேச்சை தொடர்ந்தேன்.

ஆம் ராதிகாவிடம் நான் தொடர்பு அறுபட்டு இருந்தேன். நான்கு ஆண்டுகள்..

கல்யாணம்???

பேச்சுக்கள் நீள...............

சார்,ராதிகாக்கு கல்யாணம் ஆயிருச்சா??

அத ஏன் சார் கேக்குறீங்க?? 

என் மனம் பதபதைத்தது.

அவ வீட்டவிட்டு ஓடிட்டா சார்..

கார்த்திக்,ARE YOU SURE ??

ஆமா சார் . அவ தான்.போயும் போயும் ஒரு டீக்கடைக்காரன்.

என் குழப்பங்கள் அதிகரித்தன.

சார் MMC ராதிகா தான ?

அட ஆமா சார் முட்டக்கண்ணு.

அதற்கு பின் நான் அவரது பேச்சை தடுக்கவில்லை.

பையன் பாக்க சகிக்கல சார்.
அவுங்கம்மா எவ்வளவோ சொன்னாங்க.
அவ மாத்திக்கறதா இல்ல.
யாரோ அவளோட SCHOOLMATE ஆம். 

இவ  டாக்டர். அவன் டீக்கடை வச்சுருக்கான்.

அவங்க வீட்டுல அவள தலைமுழுகீட்டாங்க.

சார் பையன் எந்த ஊர்?

ஏதோ திருச்சி  பஸ் ஸ்டாண்டுல கட வச்சுருக்கானாம்??எதுக்கு சார் ?

சும்மா தான் கேட்டேன்.

அவர் சென்றாலும் ராதிகாவின் செயல் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.

LOVE IS A FOOLISHMAN JOB . எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

ஆண்டிடோட் 

ஆம் 

ஆண்டிடோட் தான்.

The depressed nervous system should be made active 

காதலிப்பவர்களுக்கும் நிச்சயமாய் ஆண்டிடோட் தேவை. 
நிச்சயம் தீர நிச்சயம் 



Wednesday, 11 April 2012

தங்கப்ப தக்கம்

டேய் இந்த  தங்கப்ப தக்கம் ஜோக் எந்த படத்துலடா  வரும் ???. யாரோ தினகரிடம் கேட்க, கேள்வி குமாரின் செவிகளை எட்டின.

சினிமாக்கேள்விகள் குமாரிடம் தான் வரும். தினத்தந்தி குருவியார் போல் எல்லோருக்கும் பதில் கூறுவான்.அவன் வைத்து இருக்கும் அரியர்சை விட அவனுக்கு சினிமா அறிவு அதிகம் எனலாம்.

அவனுக்கு சிதறல்களாய் மட்டுமே அக்காட்சி நியாபகம் இருந்தது. 

சரத்குமார் ,அப்பாஸ் நடிச்ச படம் தான?

ஆமாண்டா?

இந்த கடைசி சீன்ல கூட சரத்குமார் கக்கூஸ்ல உக்காந்து அழுவானே அதுவா ??

டேய் சூப்பர்டா . எப்படிடா? சரி சரி படத்து பேர சொல்லு ..

அது தெரியலடா யோசிச்சு சொல்றேன்..

அட போட .. இது கூட தெரியல. 

இன்னிக்கு நைட்டுக்குள்ள சொல்றேன்.

ஒன்றும் பேசாமல் நகர்ந்துவிட்டான் குமார்.ஒரு தமிழ் படம் தெரியாமல் விழித்தது  இது தான் முதல் முறை.அதுவும் அவனுக்கு இப்போது முழுக்கதையும் நியாபகம் வந்துவிட்டது.ஆனால் பெயர் மட்டும் ????

அவன் வீடு சென்றதும் எப்போதும் போல் அர்ச்சனை விழ ஆரம்பித்தது.

அப்பாவின் ஏவுகணைகள் வீசத்தொடங்கின ..

என்ன பண்ணலாம்னு இருக்க??என்னிக்கு அரியர் எல்லாம் முடிக்க போற?

விஜயகுமார் தான சரத்தோட அப்பா ??

இந்த மொபைல  என்னிக்கு தூக்கி போடுறியோ அன்னைக்குத்தான் உருப்புடுவ.

ஒரு கடுதாசி ஜோக் கூட வருமே??..

பாரு எல்லா புக்கும் புதுசாவே இருக்கு. திறந்தாவது பார்த்து இருக்கியா??

வாழமரத் தோட்டத்துல ஒரு பைட் சீன் கூட வருமே?
படத்தின் பெயர் ???

உங்க அம்மா அன்னிக்கு ஒரு நாள் டீக்குடிக்காம உங்களால வாழ முடியாதான்னு கேட்டா. அன்னிக்கு இருந்து நான் டீ குடிக்கல.நான் மானஸ்தன். நீயுந்தான் இருக்கியே. 

அவன் அப்பா சொன்னது அவனுக்கு முகத்தில் அறைந்தது போல் இருந்தது. அவன் அப்பா திட்டத்திட்ட வீட்டிற்கு வெளியே வந்தான்..

தினகருக்கு  போன்  செய்தான் 

டேய் படம் பேரு மானஸ்தன் 


Tuesday, 10 April 2012

காவல் தெய்வம்

வேலாண்டிபாளையம் ..

கலவரக்கண்களோடு காவல் நிலையத்திற்கு உள்ளே நுழைந்தான் ரகுமான்

அவன் கண்களில்  நேற்றிரவு  தூக்கம் களவு செய்யப்பட்டு இருந்தது. களவு சொல்ல வந்த விஷயத்தை பார்ப்போம் 

அய்யா என் பொஞ்சாதியை  நேத்து இருந்து காணோமுங்க?

என்னயா சொல்ற நல்லா தேடி பாத்தியா 

வழக்கம்போல் சாதரணமாக கேட்டார் இன்ஸ்பெக்டர்..

கண்ணீர் உருண்டோடியது அவன் கன்னங்களில்.

சரி சரி ரைட்டர் இன்னும் வரல. வெளிய ஒக்காரு. வந்ததுக்கு அப்புறம் ஒரு கம்ப்ளைன் எழுதி கொடுத்துட்டு போ.

அவரின் பொறுப்பற்ற பேச்சு இவனை கோபம் அடைய செய்தது. இவனை பொறுத்தவரை போலீஸ் என்றால் புகார் கொடுத்தவுடன் பிடித்து தர வேண்டும்.

உங்க பொஞ்சாதினா இப்படி கண்டுக்காம இருப்பீங்களா??

சடாரென விழுந்தது ஒரு அடி. ஏன்டா கூ..... வாய  மூடிட்டு போய் வெளிய உக்கார்.வாய் நீளுதோ.. 

அழுதபடி சென்று கை தரையில் பட குத்தவைத்து உக்கார்ந்து இருந்தான்..

இரண்டு மணி நேரம் ஓட்டம் கண்டுவிட்டது.இன்னும் யாரும் வரவில்லை..

யோவ் எங்கயா அந்த ரைட்டர். அந்த மனுஷன் காலைல இருந்து உக்காந்து இருக்கான். நான் வேற கோபத்துல அடிச்சுட்டேன். 

குப்புசாமி சார் அந்த ஆள கூப்பிட்டு ஒரு கம்ப்ளைன் எழுதி வாங்கிக்குங்க..

இந்தாப்பா பேரு;ஏரியா எல்லா விவரமும் எழுதி கொடுத்துட்டு போ..

அவன் எழுதுகையில் இனி இந்த ஊர் அவனை எப்படி நோக்கும் என்பதிலேயே அவன் முழுக்கவனமும் இருந்தது.அவனை இரண்டு மணிநேரம் அலைக்கழித்த ரைட்டர் மேலும் இருந்தது..

கோப்புகளை சரிசெய்கையில் ஒரு படத்தை பார்த்து ரகுமான் கதறினான் 
"இவன் தான் சார் என் பொஞ்சாதியை கூட்டீட்டு  ஓடீட்டான் "

எல்லோரும் அதிர்ச்சியாய் பார்க்க ரைட்டர் கோகுல் சந்தோசமாய் கோப்பில் சிரித்துக்கொண்டு இருந்தார் 

Tuesday, 27 March 2012

பயணம்

அன்று நான் நானாக இல்லை.

என் மகள் சுவற்றில் சாய்ந்து இருந்தாள்; அவள் இதழோரத்தில் நேற்று இரவு இருந்த சிரிப்பு இப்போது மறைந்து போய் இருந்தது.

நேற்றைய இரவு சற்று அதிகமாகவே நீண்டு இருந்தது.


என் மகளின் காதலுக்கு நான் என் மனைவியை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. என் மனைவி இறுதி வரை அவள் பிடியில் இருந்து கீழ் இறங்கவில்லை. என் மகளும் அப்படியே.


இன்று அனைத்தும் மாறி இருந்தது.


என் மனைவி யாரையோ அலைபேசியில் தொடர்பு கொள்ளமுயற்சித்து கொண்டு இருந்தாள்.

நானும் என் கட்டிலில் இருந்து எழ முயற்சித்து தோற்றுப்போய் இருந்தேன்.

வண்டியில் செல்லலாமே என யோசித்துக்கொண்டு இருக்க; என் மனைவியும்  என்னோடு பயணம் செய்ய ஆயுத்தமானாள்.இவ்வாறு நானும் என் மனைவியும் சேர்ந்து ஒரு விசயத்தை செய்வது இதற்கு முன்னர் எப்போது என்று நினைவில் இல்லை.

இன்று காலையில் இருந்து என் மனதிற்கு நெகிழ்வாய் அமைந்தது இந்த பயணம் மட்டுமே . குளிர்  காலத்தின் நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தன.

சட்டென அ.முத்துலிங்கம் அவர்களின் கவிதை ஒன்று மனதில் தோன்றியது


குளிர் காலம் வரப்போவதற்கான அறிகுறி
ஆடுகள் கத்தையான ரோமத்தின் கதகதகப்பில்
தங்களை பாதுகாக்க ஆயத்தப்படுத்தின.
மனிதர்கள்
தங்கள் உடம்புகளை நீண்ட அங்கிகளுக்குள்
மூடி மறைத்துக்கொண்டார்கள் .
இந்த மரங்கள் மட்டும் ஏனோ
இருக்கும் இலைகளையும் உதிர்த்துவிட்டு
வெறும் மேலோடு குளிர் காலத்தை
எதிர்க்கத் தயாராகி விட்டன.
என்ன துணிச்சல்!!

என் வயது என்னை முழுக்கவிதையையும் என் மனதில் தோன்ற விடாமல் என் ஞாபகமறதியை அதிகப்படுத்தி இருந்தது.

நான் ஏனோ ஒரு சிறுவன் போல் அனைத்தையும் பார்த்துகொண்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்; ஏனோ எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது போன்றதொரு  உணர்வு..


சிறிது நேரம் கண் அயர்ந்துவிட்டேன்...

வாகனம் இப்போது கல்லறை நோக்கி உருண்டோடியது.


அனைவரும் சூழ்ந்து இருக்க

ஒரு  3 அடி குழி வெட்டப்பட்டு இருந்தது. சவப்பெட்டி திறந்த நிலையில் கிடந்தது. எனக்கு சட்டென ஓர் ஆசை...


அந்த சவப்பெட்டியில் படுத்தால் எப்படி இருக்குமென??.


யாரும் பார்க்காதபோது  சட்டென பெட்டிக்குள் என்னை கிடத்தினேன்.என் வீட்டு கட்டிலை விட இந்த மெத்தை எனக்கு சவுகரியமாய் இருந்தது.இங்கு ஏன் தூங்கக்கூடாது என நான் சிந்திக்கும் முன் தூங்கியிருந்தேன்..

இருள் என்னை சூழ்ந்து இருந்தது. இது கனவு என சொல்லி என் மனதை தேற்றிக்கொண்டு இருந்தேன்.கண் விழித்தும் பயனில்லை என பின் முடிவுக்கு வந்தேன்..

இந்த கட்டில் எனக்கு நிரந்தரம் ;என் இடம்  மீண்டும் தோண்டபடாத வரை..

Monday, 26 March 2012

மெல்ல திறந்தது கதவு


baatein hawa hai saari, saari ki saari
kyun hai kyun hai kyun hai kyun hai kyun....
rukhi si khaali khaali, ulti hi duniya saari
kyun hai kyun hai kyun hai kyun hai kyun....

மெல்ல திறந்தது கதவு படத்தின் குழலூதும் பாடலின்  ஹிந்தி வெர்சன் ஓடிக்கொண்டு இருந்தது.

மெல்ல திறந்தது கதவு

"சார் ஒரு க்ரூப் போட்டோ எடுக்கணும் ".

அப்படி ஒரு அழகை அக்கடையின் ரிசப்சனிஸ்ட்  பார்த்ததில்லை போலும் ;


உள் அறையில்   லென்சை சரிசெய்து கொண்டிருந்தான் அக்கடையின் உரிமையாளர்  .

சார் சூப்பர் பொண்ணு சார். கடைல முன்னாடி மாட்டுறதுக்கு பொண்ணு போட்டோ வேணும்னு சொண்ணீங்கள்ள. இவ மேட்ச் ஆவா சார்.

ஹ்ம்ம் சரி சரி உன்ன நம்புறேன். முகத்த நல்லா கழுவீட்டு வரசொல்லு பார்ப்போம்.

அந்தப்பொண்ணு மேக் அப் போட்டுட்டு இருக்கா சார். கண்டிப்பா சொல்றேன். இதவிட அழகான பொண்ணு கிடைக்கமாட்ட சார். அவ ஒத்துக்குவாளா .

அதெல்லாம் சொல்லி சமாளிச்சுக்கலாம். டைம் ஆனா பரவால. மெதுவா வர சொல்லு . சில பேருக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்.

2 மணி நேரம் ஆகிவிட்டது. பொறுமை இழந்தநிலையில்

யோவ் வரசொல்லுயா . மதியம் சாப்பாட்டுக்கு போகனும் . இன்னுமா மேக் அப் பண்றா.

இன்னும் அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்..

அவளை பார்த்தவுடன் ; ஒன்றும் சொல்லாமல் ரிசப்சனிஸ்டை கடுமையாக ஏசிவிட்டு வெளியேறினான்..


உள்ளே நுழைந்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி


           மெல்ல திறந்தது கதவு

குறிப்பு : நகைச்சுவைக்காக மட்டுமே ; இஸ்லாமிய நண்பர்களை கிண்டல் செய்யும் பொருட்டில் அல்ல                            

Monday, 19 March 2012

வலி

அன்று இரவு வண்டியில் வரும் போது ; இருவர் என்னை வேண்டும் என்றே இடித்தனர். வெளிச்சமின்மை காரணமாக அவர்கள் யார் என அறியவில்லை. ஆனால் அதற்கு காரணம் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு என்று மட்டும் ஊர்ஜிதம்   செய்துகொண்டேன்.பெரிதாக ஏதும் அடி இல்லை எனினும் உள்காயங்கள் சில. தோள்பட்டையும்; முதுகும்  ஏதோ செய்தது.

எழும்போது அப்படி ஒரு வலி . எழ முடியவில்லை. லீவு சொல்லி விடவேண்டும் என்று கூட யோசித்தேன். நான் கோழை அவர்கள் செய்யும் செயல்களை கண்டு அஞ்சிவிட்டேன் என்று எடுத்துக்கொள்ளக்கூடும். ஆகையால் சென்றேன்..


உள்ளே நுழைந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் என் இடத்தில் உட்கார்ந்து  கொண்டேன்.


தேநீர் இடைவேளையில் , அவர்கள் யாரும் ஒன்றும் நடக்காதது போன்று ஒரு முகபாவனை வைத்து கொண்டனர். எனக்கு எரிச்சலாய் இருந்தது. விடுப்பு எடுத்து கெளம்பிவிட்டேன்.


அன்று மாலை .

சென்றிருந்த மருத்துவமனையில் ஆள் யாரும் இன்றி செவிலியர் மட்டும் வெளியே உக்கார்ந்து இருந்தார்.

மேடம், டாக்டர் எப்ப வருவாங்க ??

உள்ள வாங்க ..

எனக்கு சற்று அசௌகரியமாக பட்டது. நான் தவறாக எண்ணிவிட்டேன். அந்த செவிலியர் தான் மருத்துவர்.


சாரிங்க

ஹ்ம்ம் பரவால  சொல்லுங்க.

மேடம் முதுகு ; தோள்ப்பட்டை எல்லாம் ரொம்ப வலிக்குது .

சரி ஒரு XRAY எடுத்துடுங்க. அப்புறம் தான் கிளியரா சொல்ல முடியும் ..

400 ரூபாய் என் பர்சில் இருந்து திருடப்பட்டது.

மேடம் ரிப்போர்ட் ..


சார் பெருசா ஒன்னும் பிரச்சனை இருக்கறதா தெரியல. ஆனா நீங்க கேர்புல்லா இருக்கணும். தண்டுவடத்துல சிறிசா வீங்கி இருக்கு. அதுனால கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்குங்க..


ஒரு வாரம் கழித்து


எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அமைதியான சூழ்நிலயில் எல்லாவற்றையும் அசை போட்டேன்

என்னை அடிக்க சொல்லி ஆள் அனுப்பியவர்கள் ஒன்றும் தெரியாதது போல் நடித்தது.முதுகும் ,தோள்ப்பட்டையும் வலித்தது. 400 ரூபாய் திருடப்பட்டது. அந்த செவிலியரும்!!! முதுகில் பிரச்சனை என சொன்னது ..

கனவில் அடி வாங்கினாலும் உண்மையிலேயே முதுகு பிரச்சனை வருமோ ??

Sunday, 11 March 2012

ஜானி

"செனோரீட்டா ஐ  லவ் யூ; மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ "

அண்ணே ஒரு டீ ஒரு வர்க்கி ....

இந்த கடை முன்னாடி தான் அவள முதல் முறையா பார்த்தேன்...


சார் சத்தியமா சொல்லணும். இவ்ளோ அழகா நீங்க யாரையும் பார்த்து இருக்க மாட்டீங்க. சில நாய்க தான்தான் அழகுங்ற  மாதிரி சீன போடும் . ஆனா இவ REALLY AWESOME  சார்  ....


இதோ ...

இந்த APARTMENT ல தான் சார் வேலை பாக்குறேன். நான் என் நாலு பிரண்ட்ஸ்  எல்லோரும் இங்க தான் 3  வருசமா இருக்கோம்.

எல்லாத்துக்கும் நைட் டூட்டி ஜாப் தான் சார். எல்லோரும் காலைல தூக்க கலக்கத்துல இருப்பாங்க. பட் அவ காலைல ஆறரை மணிக்கு வாக்கிங் வருவா. அவளுக்காக நானும் வந்துருவேன் . ஓனரு  அந்த வகைல நல்ல டைப்.


அவள பார்த்து நான் சிரிப்பேன். அவளும் பதிலுக்கு சிரிப்பா..

அவள வீடு வரைக்கும் பாலோ பண்ணுவேன்.உள்ள போய்ட்டா திரும்பி வரவே மாட்டா..

இப்படியே நாட்கள் நகர்ந்தன ..

ஒரு நாள் அவள பார்க்ல பார்த்தேன் ..

இன்னிக்கு சொல்லிரலாம்னு முடிவு பண்ணிட்டேன் . சொன்னேன் ..



என்ன வெறுங்கைல வந்து லவ் சொல்ற???.

அதுக்கென்ன சில நாய்க மாதிரி கிடார் வச்சுகிட்டா சொல்ல முடியும் . நம்மள  பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.

நான் என்ன சொன்னாலும் அவனுகளுக்கு லொள் லொள்ளுன்னு தான் கேட்கும்

. நீ பதில் சொன்னாலும் அவனுகளுக்கு லொள் லொள்ளுன்னு தான் கேட்கும் ..

Friday, 9 March 2012

மனிதம்

சைரோன் ஒலி அணைக்கப் பட்டிருந்தது. அப்போதும் நல்ல கூட்டம் குழுமி இருந்தது. காமிராக்களின் வெளிச்ச சிதறல்கள். வழக்கமான கேள்விகள். அதை விட வழக்கமான பதில்கள். வெள்ளை அங்கியில் ரத்த பொத்தல்கள். நான்கு பிணங்கள் ஆம்புலன்சில் இருந்து இறக்கப் பட்டு தரையில் கிடத்தப்பட்டன.

"தீவிரவாதிகளுக்கும் எங்களுக்குமான மோதலில் சட்டம் ஜெயித்திருக்கிறது" என்றார் துணைக் கமிஷனர்.
                                      _________________________________

நேரம்: அதிகாலை நான்கு மணி
சாமான்ய மக்கள் அசந்து உறங்கும் நேரம்
குற்றங்களுக்கு ஏற்றது.

பாரக்பூரின் பரபரப்பான சாலை அமானுஷ்யதில் உறைந்திருந்தது. தோட்டாக்கள் நிரப்பப்பட்டன. ட்ரிக்கர் சரிபார்க்கப்பட்டது. காக்கிகள் காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்சாரியில். அவர்களுக்காக மரணம் காத்திருந்தது. இருட்டின் அமைதியில் ஒரு 'விஷுக்'. உடலில் ரத்த ஊற்றுகள் பெருக்கெடுத்தன. தார் சாலை எங்கும் குருதி வழிந்தோடியது. 

ரமேஷ் சந்த், it's your turn என்றார் அவ்உயர் அதிகாரி.

சந்தின் தோள்பட்டையில் புல்லட் இறங்கியது.

                                  ____________________________________

மத்திய பிரதேசத்தின் இருண்ட காடுகள்.

செருப்பு மாலைக்குள் முதல் அமைச்சர் வணக்கம் சொல்லி கொண்டிருந்தார். சமாதானம் செய்ய வந்த அதிகாரி ஒருவர் பழத்தால் தாக்கப்பட்டார்.

உங்க நல்லதுக்கு தான ரோடு போட்ருக்கோம். ஸ்கூலு கட்டி கொடுத்தோம்

அதெல்லாம் எங்களுக்கா பண்ணுனீங்க..உங்க வெளிநாட்டு மொதலாளிகளுக்காக தான போட்டீங்க...காது குத்தாதீங்க.

வாக்குவாதம் முற்றியது. சென்சார் செய்யப் படவேண்டிய வார்த்தைகள்  காற்றில் பறந்தன.

எச்சரிக்கை விடப்பட்டது. கூட்டம் கொந்தளித்தது.

தினசரிகளுக்கு நாளைய தலைப்பு செய்தி கிடைத்தது. பழங்குடிகள் சுடப்பட்டார்கள்.

                                  _________________________________

சார்..மாட்டிக்கிட்டா..?

மாட்ட மாட்டோம். இப்ப கூட நாலு பேர வங்கி கொள்ளையர்கள்னு சுட்டாங்க. மாட்டுனான்களா? ஒரு பிரதமர் கொல்லப்பட்டதா மூணு பேர புடிச்சு வச்சு இருக்கனுங்க? அது உண்மையா? 

இருந்தாலும்...

தைரியமா பண்ணலாம்..உங்களுக்கு தான் இன்னிக்கு காயம்.

சார்??


Tuesday, 6 March 2012

புகார்

பாட்டி எப்போதும் போல் நாயின் வேகத்துக்கு பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.. அந்த நாயைப்பற்றி சொல்ல வேண்டும் . ஏதோ ஹட்ச் டாக் என பெயர் சொல்லி 2000 ரூபாய்க்கு வாங்கி வந்தாள் சுகந்தி.
அந்த பாட்டியை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி இருந்தனர் கணேஷ் ;சுகந்தி தம்பதிகள்..


சுகந்தியின் மகள் கோமதியோ ஹட்ச் நாயோடு தான் விழிப்பு; தூக்கம் எல்லாம் ; பள்ளிவிட்டு வந்தவுடன் நாயை பார்த்தால் தான் இவளுக்கு எல்லாமே.


இப்படி இருக்கையில் ....

பாட்டி எப்போதும் போல் நாயின் வேகத்துக்கு பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.. 

திடீரென்று அந்த நாய் தன் சங்கிலியை விட்டு விலகி சென்றது. பாட்டி செய்வதறியாமல் திகைக்க ; நாய் அவளது பார்வையில் தென்படவில்லை.

வீட்டிற்குள் கேட்க போகும் அர்ச்சனைகள் தன் காதில் இப்போதே விழத்  தொடங்கின.


உள்ளே நுழைந்ததும் :



  • அந்த நாய் மதிப்பு எவ்ளோன்னு தெரியுமா??
  • கோமதி கேட்டா என்ன சொல்றது ??
  • திங்குற அளவுக்கு புத்தி இருக்கா ??
  • உங்களுக்கு செலவு பண்றத விட இந்த நாய்க்கு அதிகமா செலவு பண்ணி இருக்கோம் 


எதுவும் பேச வேண்டாம் முதல்ல வெளிய போங்க

பாட்டி கண்ணீரோடு வெளியே  செல்ல...

சில நாட்கள் கழித்து

அய்யா !!

என்ன சொல்லு

எங்கம்மாவ பார்க்கணும்

ஓ அது நீ தானா??? சுகந்தி சற்றே கோபத்துடன் .


நீ வாங்குன காசுக்கு பாதி கூட உங்கம்மா வேலை செய்யல .யார்கிட்டயும் சொல்லாம அன்னிக்கு வீட்டைவிட்டு போய்ட்டாங்க. 


என்னமா சொல்றீங்க??

கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம் ; உங்கம்மாவோட ஒரு போட்டோ இருந்துச்சு அத வச்சு தேட சொல்லி இருக்கோம்

ரொம்ப நன்றிகம்மா

சரி சரி என்னிக்கு மிச்ச காச திருப்பி தர போற ..

என்னமா சொல்றீங்க..

உங்கம்மா போயாச்சு அந்த வேலைக்கு வேற ஒரு ஆளையும் வச்சாச்சு. உன்கிட்ட கொடுத்த காசுக்கு உங்கம்மா வேலை செய்யலையே...


அம்மா 


சரி சரி போய்த்தொல ....

எங்கம்மா கிடச்சா மட்டும் சொல்லுங்க

புகார் பண்ணி இருக்கோம் . நீ ஒரு மாசம் கழிச்சு வா

சில நாட்கள் கழித்து

நாங்க போலீஸ் ஸ்டேசன்ல இருந்து பேசுறோம் .. கொஞ்ச நாளைக்கு முன்னாடி   புகார் கொடுத்தது நீங்க தானா ??

சுகந்தி மகிழ்ச்சியோடு

"ஆமா சார் நாய் கெடச்சுருச்சுங்களா?? "

 


   நான் தினமும் கல்லூரிக்கு செல்லும் போது ஒரு பாட்டி நாய் ஒன்றை கூட்டிக்கொண்டு நாய்க்காக வாக்கிங் வருவார். விசாரிக்கையில் இவர் அந்த வீட்டில்  வேலை செய்கிறார் என்பதை அறிந்தேன். இருவரும் வருவதை பார்க்கையில் இந்த நாய்க்கு தான் பாட்டி காவலோ என எண்ண தோன்றும் . அவருக்காக இந்த கதை எழுதினேன்.

Wednesday, 29 February 2012

சக்தி

நான்காம் ஆண்டு பொறியியல் மின்னணு மற்றும் தொழில்தொடர்பியல் (சரி சரி விடுங்க ECE ) மாணவிகள் பேசிக்கொண்டது .

இந்த கார்த்தி  இப்படி பண்ணுவான்னு கொஞ்சங்கூட எதிர்ப்பாக்கலடீ.

இத்தன நாளா யார்டையும் பேசாம இப்ப FACEBOOKல RELATIONSHIP WITH SAKTHI னு ஸ்டேடஸ் அப்டேட்  பண்ணி இருக்கான்.

எந்த கார்த்திடீ?

அவன்தான்டீ நம்ம யாராவது பேச போனா முறைச்சுகிட்டே இருப்பானே   அவன்தான்.நாலு வருசத்துல யார்ட்டயுமே பேசினதே  இல்ல. 

அவனா ??சரி, சக்தி என்ன சொன்னா ? .

அவளால இன்னும் நம்பவே முடியல. கார்த்தி ஏன் இப்படி எழுதினான்னு புரியாம உக்காந்து இருக்கா. 


ஆம் அவர்கள் சொல்வதும்  நியாயம்தான்.

எல்லா படத்துலயும் ஹீரோ பேறு கார்த்திக் . ஆனா இவனோ மௌனம் பேசியதே சூர்யா மாதிரி யார பார்த்தாலும் முறைப்பான்; ஆனா ரொம்ப நல்ல டைப்.
பட் இவன் ஏன் இப்படி பண்ணினான்??

அடுத்த நாள் 

சக்தி லைப்ரரிக்கு வெளியே நின்றிருக்க கார்த்திக் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்..

சக்தி கேட்டே விட்டாள்.

என்ன நினைச்சிட்டு இருக்க??

என்ன வேணும்னாலும் நினைப்பேன். உனக்கென்ன..

ஹ்ம்ம் FACEBOOK ல என்ன ஸ்டேடஸ் போட்ட ?

ஏன் நீ பாக்கலையா ??

அதென்ன லவ் வித் சக்தி??

ஆமாம். உனக்கென்ன .

நீ என்ன லவ் பண்றியா ??

ஐயோ. அவனுக்கு தூக்கி வாரி போட்டது. அவனது பதிலோ அவளை தூக்கி வாரி போட்டது 

என்னை இவ்வளவு கீழ்தரமா நினச்சுட்டீங்கள்ள. இந்த நாலு வருஷத்துல யாராவது ஒரு பொண்ணு கிட்ட பேசி இருப்பனா?. ATLEAST யாரையாவது பார்த்து சிரிச்சு இருப்பனா??. நம்ம கிளாஸ் பொண்ணு யார்மேளையும் எனக்கு எந்த விதமான தவறான அபிப்ராயமும் கிடையாது.

அப்ப சக்தி எந்த பொண்ணு ??

எனக்கு உங்கள மட்டும் இல்ல ; எந்த பொண்ணையும் பிடிக்காது. நான் பார்த்தது உங்களுக்கு பின்னாடி நின்னுகிட்டு இருந்த சக்திவேல் 

                                                 
  


Monday, 27 February 2012

விபத்து

சொல்லுங்க மாமா

கோபால் , ப்ரீயா இருக்கியா

ஏன் , மாமா சொல்லுங்க


இல்ல ப்ரீயா இருந்தா சொல்லு வெளிய போலாம். எங்க? காலேஜ்லையா இருக்க.

இல்ல மாமா, காலேஜில இருந்து கெளம்பீட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்.

சரி சரி சீக்கிரம் வா..

டேய் நான் கெளம்புறேன். மாமா கூப்பிடுறார்.

மூன்று பஸ் மாறினால் ,சீக்கிரம் சென்றுவிடலாம். கல்லூரியில் இருந்து ரெட்டியார் சத்திரத்திற்கு ஒரு டவுன் பஸ். பின்பு ஓட்டஞ்சத்திரதிற்கு ஒரு விரைவு. அப்புறம் பழனிக்கு ஒரு பஸ். எப்படியும் மாமா லேட்டாக தான் கெளம்பவார்.


ரெட்டியார் சத்திரத்தில் இறங்கிட்டேன் ..இன்னிக்குன்னு ஒரு பஸ்சும் நிக்கல. மாமாவும் கால் பண்ணல. 4 பஸ் நிக்காம போயிருச்சு.

திடீர்னு பாலத்துகிட்ட ஒரு புது காரும் லாரியும்  மோதிருச்சு . கார் இன்னும் ரெஜிஸ்டர் கூட பண்ணல. எல்லோரும் அத நோக்கி ஓடினாங்க.


ஆக்சிடண்டுன்க்ராதாள எல்லா பஸ்சும் நின்னுருச்சு. நானும் பஸ்ல ஏறிட்டேன் ..


விபத்துகளில் நன்மையையும் உண்டு. 

அந்த கார்க்காரன்  மேல தான் தப்பு ........ காதல் சொல்ல நேரமில்லை.உன் காதல் சொல்ல தேவையில்லை .நம் காதல் சொல்ல வார்த்தையில்லை .


ஹெட்செட்டிற்குள்  நுழைந்தன என் காதுகள்.

சேவக் 40  பந்தில் 70 ரன் . கம்பீரும் தன் பங்கிற்கு அடித்து நொறுக்க ; சட்டென விழித்தேன்.

9 MISSED CALLS ..

நல்ல தூக்கம்..

என்ன அப்பா சொல்லுங்க

எங்கடா இருக்க . இப்ப தான் பழனில இறங்கினேன். மாமா கெளம்பீட்டான்களா ??.


சரி சரி வீட்டுக்கு சீக்கிரம் வா. 


என்ன பா? சொல்லுங்க. மாமா ரெட்டியார் சத்திரத்துகிட்ட ஆக்சிடண்டுல இறந்துட்டார்.

விபத்துகளோ ; என்கவுன்டர்களோ நமக்கு சாதரணம் தான் . நம்மில் யாருக்கும் நடக்காத வரை 

Wednesday, 8 February 2012

கைதி


                                                    சிக்கனம் , கஞ்சம் , சுயநலம் , இந்த வார்த்தைகளுக்கு தமிழின் ஆழம் நோக்கி வேறு ஒரு வார்த்தை தேடினால் அது தான் அருண் என்ற இந்த கதையின் குறுகிய மனம் உள்ள பாத்திரத்தின் படைப்பு.. 

                                பேச்சில் ஒரு தெளிவு. சீரிய சிந்தனைகளை  வலைதளங்களில் தெளிப்பவன்  , எளிதில் பழகும் பண்பு என ஒரு முகம் . வாழ்விலோ ஒரு கஞ்சம் , இலவசத்தை நம்பி ஓடும் ஒரு ஜீவன்; என ஒரு முகம் . நம்மை போல வலை தளங்களில் மட்டும் வல்லவன். 

                                 தான் செல்லவிருக்கும் ஊருக்கு வீட்டில் இருந்தே உணவு பொட்டலம் கொண்டு வந்திருந்தான்.. நடந்து  வருகிற வழியில் ஒரு கடையில் சிம் கார்டுகள் விற்பனை செய்யபட்டுகொண்டு இருந்தன.. 

                       TALKTIME 999 
                      
                       SIM CARD 99


ஆக்டிவேடட் பண்ணின சிம் சார். 

 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். திடீரென் ஒரு சிம் கார்டு கீழே விழ அதை எடுத்து வைத்து கொண்டான்...

நூறு ருபாய் மிச்சம்..

எப்போதும் போல் அன்ரிசர்வ்வேசனில்  சென்று டிக்கெட் எடுக்காமல் நின்று கொண்டான். வேலூரில் இருந்து ஈரோடிற்கு சென்று கொண்டிருக்கிறான் . 

இரயில் கிளம்பிகிறது. 

அங்கு அவன் சந்திக்கும் நபர்கள் பற்றிய உரையாடல் தான் கதை. 

NOTE ! : மூவரின் பேச்சுகளும் நேர் கூற்றில் தான் வரும்..

NOTE 2 : பெயர் குறிக்கபடாமல்   காட்சிகள் நகரும். இரயில் பயணங்களில் பலர் பெயர் கேட்பதில்லை.

"யோவ் ஜன்னல மூடுயா " உள்ளிருந்து ஒரு குரல்.

ஜன்னல மூடு . உனக்கு குளுருலேன்னா மத்தவங்கள் பத்தியும் யோசி.. 

நீங்க எங்கிருந்து வர்றீங்க 

சென்னைல இருந்து ஜோலார்பேட்டை போகனும் 

இந்த இரயில் அங்க நிக்காதே 

தெரியும் சார் . டிரைன் ஸ்லோவா போகும் . அங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க . சோ எப்பயும் போல் ரன்னிங் தான் 

தம்பி நீ எந்த ஊரு 

திண்டுக்கல் ணா . VIT காலேஜுக்கு வந்தேன் ..

அங்க என்ன பா ?

CULTURALS ணா .. நாளைக்கு தான் முடியுது. ஆனா இன்னிக்கே கெளம்புறேன் ..

என்ன ஊர்ரா இது . சுத்தி பார்க்க ஒரு இடம் கூட இல்ல . ஏதோ கற்கோவில்னு சொன்னாங்க. போய் பார்த்தா வெறும் கல்லு தான் இருக்கு ...

உங்களையெல்லாம் ஊட்டில போய் விட்டாலும் என்னபா இது வெறும் பனியா  இருக்குன்னு வந்துடுவீங்க 

அப்புறம் ஊட்டில என்னதாங்க இருக்கு.போன தடவ ஊட்டி போனப்ப அரை மணி நேரத்துல எல்லாத்தையும் பார்த்துட்டேன். ஏதோ போட் ஹௌசுன்னு சொன்னாங்க. படகுல பெடல் போட்டு வச்சுருந்தாங்க..

அண்ணா ஒரு இடத்துக்கு போனா . அதா மெய்மறந்து பாக்கணும். நீர் வீழ்ச்சின்னா வைரமுத்து சொன்ன மாதிரி அது நீர் எழுச்சிங்ற அளவுக்கு அத  ரசிச்சு பார்க்கணும். இல்லாட்டி வாழுறதே வேஸ்ட்டு.. 

அட ஆம்பூர் வந்துருச்சு போல 

எப்டினா இவ்ளோ இருட்டுலயும் கரெக்டா சொல்றீங்க 

எல்லாம் பிரியாணி வாசத்த வச்சு தான்.

ஏன் யா நீ வேற .. இங்க தோல் பேக்டரி இருக்கு..

ஆமா அண்ணா அதையெல்லாம் மூடியாச்சு. ஆனா இன்னும் வாட மட்டும் போகல 

சரி எங்க வேலை பாக்குறீங்க..

சென்னைலங்க 

சென்னைல எங்க ??

தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க 

இல்ல நந்தனத்துக்கு   வருவேன்.

அங்க தாங்க வேலை பாக்குறேன்

ஆமா அங்க அந்த பெரியார் மாளிகை இருக்கே; அதுக்கும் பெரியாருக்கும் என்னங்க சம்பந்தம்.

அண்ணா உங்களுக்கு உண்மையாவே தெரியாதா இல்ல ச்சும்மா கேக்குறீங்களா

தெரிஞ்சுக்க தான்பா கேக்குறேன். ஒரு லாரி டிரைவருக்கு என்ன தெரியும் சொல்லு 

சரி வேல்லூர்ல அமிர்தியாவது  பாத்துருக்கியா?

ஆமா அந்த காடுதான.

எப்படியா எத சொன்னாலும் வெறுத்து சொல்ற..

அண்ணா நானும் பாத்துருக்கேன் அதுல நீரோடை ஒன்னு இருக்கும் .

ஆமா தம்பி டியுப்ல தண்ணி லீக் ஆனா மாதிரி வருமே அது தான

ஐயோ கஷ்டம் உங்களோட . எதையுமே ரசிக்க மாட்டீங்களா

இவனேலாம் தாஜ் மஹால் கூட்டிட்டு போய் விட்டாலும் , என்னபா வெறும் சுண்ணாம்புல பெயிண்ட் அடிச்சுருக்காங்கன்னு  சொல்லுவான்

சரி அத விடுங்க எங்க வேலை பாக்குறீங்க

அது தான் நந்தனம்னு சொன்னேன்ல

ஆமா ஆமா சொன்னீங்க .

பெரியார் மாளிகைக்கு பக்கத்து பில்டிங்..

அப்ப அங்க வந்தா உங்கள பார்க்கலாம்

என்ன பார்த்து  என்னங்க பண்ண போறீங்க . இரயில் பயணங்கள் நீடிக்காது..

ஏன் இப்படி சொல்றீங்க.. சரி உங்கள வந்து பாக்குறேன்.

ஏன்பா தம்பி பழனில சுத்தி பாக்குற மாதிரி ஏதுனாச்சும் இருக்கா ?

ஒன்னும் இல்லணா . பழனி மலைய சொன்னா . மலைக்கு மேல ஒரு கோவில கட்டி வச்சுருக்காங்கன்னு சொல்ல போறீங்க..

வாணியம்பாடி வந்துருச்சு போல 

ஆமா ஜோலார்பேட்டைல வண்டி நிக்காதுல்ல என்ன பண்ண போறீங்க 

உங்களுக்கு என்ன அம்னீசியாவா 

அப்டீன்னா 

அங்க வேலை நடக்குது. அதுனால மெதுவா தான் போகும். எப்பயும் போல ரன்னிங் தான்..

சரிங்க உங்க நம்பர் கொடுத்தீங்கன்னா ....... 

பேரே தெரியாது. நம்பர் வச்சு என்ன பண்ண போறீங்க 

சரி பேர சொல்லுங்க..

மறுபடியும் சொல்றேன். இரயில் பயணம் நீடிக்காது..

உள்ளிருந்து ஒருவன் வருகிறான் 

தம்பி தம்பி என்ன பண்ற 

ஜோலார்பெட்ல வண்டி நிக்காது எப்படி எறங்குவ?

ரன்னிங்க்ள இறங்கீடுவியா??.

சரி நான் இறங்குற மாதிரி இறங்கு..

பாத்தியா இவ்ளோ நேரம் நம்பர் கேட்டுட்டு இப்ப ஆள காணோம். எங்கயா அந்த மனுஷன்??..

அண்ணா நீங்க நம்பர் கொடுங்க. நான் அவர்ட்ட கொடுத்துடறேன் 

தம்பி நீ இறங்குவியா  ?

சரி உன் பேக்க தூக்கி போடு.

இப்படி இறங்கு 

டே  இறங்கு டா

மறுபடியும் இரயிலில் ஏறி

நீ மொதல்ல இறங்கு பா 

அண்ண உங்க நம்பர் . 

உன் நம்பர் சொல்லு MISSED CALL கொடுக்கறேன் 

9629151439 

பேச்சுக்கள் முடிந்தது 

இரயிலில் இரங்கியவாறு அவர் அலைபேசி எடுத்து என் நம்பரை அழுத்தி 'ஹலோ' என்றார்   ; விரைவாக சென்ற வண்டியின் வேகத்தில் முன்னர் இருந்த ப்ளேட்பாரம் கம்பியில் இடித்து ரத்தம் வழிய அவர் இறப்பதை அவன் பார்த்தான்..

மண்டயில் ஏதேதோ சொல்ல 

இரயில் கம்பிய புடிச்சு இழு 

கத்து 

ஏதாவது பண்ணு 

திடீரென அவ்வாறு தோன்றியது

ஏன் கத்தனும். நமக்கெதுக்கு இந்த வேலை.

சிம்மை கழற்றி தூக்கி எறிந்தான்..

100 ரூபாய் சிம் உதவியது..



Monday, 30 January 2012

வாலு

                                     
                                                                
                                                                வாலு
     
               எப்பயும் போல ஜெயா வீட்டு சந்துல கத்திக்கிட்டு இருந்துச்சு.

        கிர்ர்ர்ர்

        கிரர்ர்ர்ரர்ர்ர்ர்

         கிர்ர்

        "ஜெயா என்ன கத்துற "  சந்தோரமாய் எட்டி பார்த்தேன் ...

        நான் தான் சிங்கம் கிர்ர்ர்ரர்ர்ர்ர் கிர்ர்ரர்ர்ர்ர்

        சிங்கமா??  சரி சிங்கம்னா வாலு இருக்கணும் தெரியுமா. உனக்கு தான் வால் இல்லையே 

         தன்னை தான் பின்புறமாய் திரும்பி பார்க்க நினைத்து சுற்றி விழுந்தாள்..

        தனக்கு இல்லை என்பது போல் நினைத்து நமட்டு சிரிப்பு சிரித்தாள்..

        எனக்கும் சங்கடமாய் பட்டது ,ஒரு குழந்தையை ஏமாற்றியது..

      சட்டென பதில் வந்தது அவளிடம் . நிசப்தம் மட்டுமே என்னிடம்

                 

       ஆமா எனக்கு இல்லை அண்ணாக்கு இத்துகூண்டா  முன்னாடி நீட்டீட்டு இருந்துச்சு..

Saturday, 21 January 2012

சொப்பனத்தங்கம்

                 இந்த கதையின் தலைப்பு சொர்க்கதங்கம்; சொற்பத்தங்கம்;சொக்கத்தங்கம் ;சொப்பனத்தங்கம் என அனைத்தும் பொருந்தும்...
    
                  ஏலே காக்கி இந்த மரத்துக்கு பாத்தியே கட்டல.மருந்த தூவி உட்டுருக்க.கிழக்கால சாணம் வச்சுருக்கேன். அத போய் எடுத்துட்டு வா..

                  ச்சே செட்டியார் தோட்டத்துக்கு வந்தாலே இது தான் பிரச்சனை அலுத்துகொண்டான் காக்கி.. 
                 
                 ஆமா அப்புறம் 1  ஏக்கரா தென்னந்தோப்புக்கு இந்த அண்ணன் தம்பி ரவுசு தாங்க முடியாது. 

                 அண்ண குமரேசன் கெட்டிக்கார பைய. 1  ஏக்கராவுல 3   ஏக்கராவுக்கு உரிய தேங்காய் விளச்சல 40 நாள்ல பாத்துருவான்.ஆனாலும் தம்பி குமாருக்கு சரி பாதி பிரிச்சு கொடுத்துடுவான். அம்புட்டு பாசம் தம்பி மேல 

                அன்னிக்கு 

                 எப்பயும் போல சிரிச்சு பேசிக்கிட்டு இருந்த குமாரு பொசுக்குன்னு கீழ விழுந்துட்டான். பேச்சு மூச்சே இல்ல.குமரேசன் அலறி அடிச்சு ஊரையே கூட்டிட்டான்.. ஆஸ்பித்திரிக்கு கொண்டு போற வரைக்கும் புலம்பிகிட்டேதான் இருந்தான். 

                 செல்லாண்டி மாரியாத்தா என் தம்பிய காப்பாதுடீ. 

                 குமரசேன் பொஞ்சாதிக்குகூட இவஞ்செய்யுறது அதிகப்படியா   இருந்துச்சு. 

                  அய்யா என் தம்பிய காப்பாத்துங்க.. 

                  டாக்டர் பல்ஸ் பார்த்துவிட்டு தேறாது என்பது போல் பார்த்தார். ICU வில் ECG பார்த்துட்டு உங்க தம்பிக்கு HEART ATTACKனு சொல்லீட்டார். குமரேசனுக்கு நெஞ்சு அடைச்சுடுச்சு. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டான். 

                 நான் நம்ப மாட்டேன். என் தம்பிய கொன்னுபுட்டீன்களா . பாவிகளா. நாசமத்துபோக.  

                  சரி சார். பிரேத பரிசோதனை செய்யணும் கையெழுத்து போடுங்க. 

                  என் தம்பிய கொன்னது இல்லாம வெட்டவும் பாக்குறீங்களா. போடமாட்டேன். (அவன் கைநாட்டு என்பது மற்றொரு விசயம் ) 

                 ஊர்க்கார்களும் சண்டை போடவே. டாக்டருக பொணத்த எடுத்துட்டு போக விட்டுட்டாங்க...
                  
                 4  நாலு கழிச்சு தென்ன மரத்துக்கிட்ட உக்காந்து இருந்து கொண்டே தம்பிய நெனச்சு பார்த்தான். கண்ணுல தண்ணி வர்றப்ப மனசு சொல்லுச்சு நடிகண்டா நீ

        " பின்ன சும்மாவா அன்னிக்கு அவன்தான் முதல்ல பார்த்தான்அதுக்காக பாதி வேணும்னா கொடுப்பனா?? . தேங்காய்னா பரவால தங்கமுங்க அதுவும் ஒண்ணா ரெண்டா 22 தங்க காசு விடுவனா.மண்ணுல பொதஞ்சு இருந்துச்சு. 

        குமாரு ஒரு பிரச்சன்னையும் இல்ல. நமக்குள்ள எதுக்கு சண்ட ஒரு மாசம் உள்ளயே இருக்கட்டும். அடுத்த மாசம் தோட்டத்துக்கு மருந்து வைக்கணும். அது வரைக்கும் ரெண்டு பேரும் இத தொட வேண்டாம். குமார் என்னை முழுசா நம்பினான்..

      அப்புறம் தான் யோசிச்சேன். பேசாம விஷம் கொடுப்போம்.. ௦௦௦ ௦  ௦௦௦௦ ௦ 2 g  potassium எடுத்து தினமும் சோத்துல கலந்தா 30 நாள்ல லேசா ஆரம்பிக்குற மூச்சுத்திணறல் (asphyxia). அப்படியே நீர்வீக்கம்(edema) அதிகமாகும். கண்ணுக்கு போற நரம்புல (miotic pupil ) வீக்கம் அதிகமாகி; விஷம் உடலை அரிச்சு ரத்தம் சிவப்பு கலர்ல இருந்து கருப்பா மாற ஆரம்பிக்கும்.. பாசமா வளத்த தம்பி பங்கு கேட்டா பங்கு போட வேண்டியது தான். 

       எல்லாம் சரியா நடந்துச்சு. இந்த சனியம்புடுச்ச டாக்டரு பொசுக்குன்னு AUTOPSY (பிரேத பரிசோதனைனு ) சொல்லி குண்ட தூக்கி போட்டுட்டான்.விடுவனா அழுதல்ல தம்பிய கூட்டியாந்தேன்.
   
     நான்தான் கொன்னேன்னு இந்த விளக்கத்த சொன்னா என் பொஞ்சாதி கூட நம்பாது. பின்ன கைநாட்டு மட்டுமே போட தெரிஞ்ச ஒரு ஆளுக்கு இவ்ளோ அறிவான்னு என் பொண்டாட்டி புட்டுக்கிடும்..

  இன்னிக்கு சாந்திரம் தங்க வேட்டை "

  மனதிற்குள் சொல்லி எழுந்தான் குமரேசன்..

 கதை முற்றும் 


கிறுக்கு பைய இவன் செஞ்சதுக்கும் HEART அட்டக்குக்கும் என்ன சம்பந்தம்... குமாரு போய் சேர்ந்த காரியமே வேற. ஒரு நாலு சாயங்காலம் குமரேசன் பையன் விஜய் அந்த புதையல தோண்டிகிட்டு இருந்தான்.. 


 " டேய் என்னடா பண்ற " 


 "இல்ல சித்தப்பா பிரெண்டு ஒருத்தன் தங்க சாகுலேட்டு கொடுத்தான். மண்ணுல வச்சு எடுத்தா குட்டி போடும்னு சொன்னான். அது தான் பாக்குறேன்".

பாவம் இளகைய மனசு குமாரு பாதி செத்து போயிட்டான். அதையே நெனச்சு நெனச்சு உயிரும் போயிடுச்சு..



  

STORY INSPIRED FROM ஸ்ரீராம்'s சாபம் AND சுஜாதா's SHORT STORY 
MEDICAL TERMS FROM அலர்மேல்மங்கை..




Friday, 20 January 2012

AS YOU LIKE IT

            இந்த கதை ஒரு பாண்டஸி கதை. ஆதலால் மூளையை மூலையில் வைக்கவும்..

           ஹீரோ பேரு (யோசிக்கல). ஒரு சின்ன வியாதி. தெளிவாக படித்து கொள்ளவும், இவரு எந்த பொண்ணுகிட்ட propose  பண்ணுறாரோ ; அந்த பொண்ணு அடுத்து யாரு பார்த்து இவர லவ் பண்ணலாம்னு தோணுதோ அவரு கூட செட் ஆகிரும். இதனால் இவருக்கு என்ன நடக்க போகிறது என்பது தாங்க கதை 

           ஏன் எனக்கு மட்டும் இப்படி?. இன்னிக்கு நேத்துனா பரவால. ஆனா யார பார்த்தாலுமே இப்படி தாங்க நடக்குது. எனக்கு சோகமா படுறது எல்லா பொண்ணுகளுக்கும் வசதியா போச்சு. எங்கிட்ட வந்து propose  பண்ணுங்க ப்ளீஸ்னு வரிசைல நிக்குதுக. இதுல எவ்ளோ செலவானாலும் பரவாலைன்னு வசனம் வேற. என்ன கொடும சார்.. 
          
          ஜாலியா ஆரம்பிச்சது இப்ப எரிச்சலா இருக்கு.ஒரு MATRIMONIAL மாதிரி USE  பண்றாங்க.. 

           I LOVE YOU

           I LOVE YOU

           I LOV U
   
           I LUV UUUU 

           இந்த ஊரே வேண்டாம்டா சாமி.இங்க யாருக்கும் என்ன பத்தி தெரியாது. என் உடன் பிறவா பக்கி கார்த்திக்   சொல்லாத வரை..

           FOR THE FIRST TIME  எனக்கும் தோணுது. ராதாமோகன் சொன்ன மணியும் அடிக்கல.. விஷ்ணுவர்தன் சொன்ன மாதிரி ராஜா சார் பாட்டும் கேக்கல. ஒரே நிசப்தம்..

           YA I AM GOING TO PROPOSE FOR THE FIRST TIME FROM MY HEART 

         அப்படின்னு PROPOSE பண்ண போனா மண்டைல அலராம் அடிக்குது. அய்யகோ ??? 

          என்ன பண்ணலாம்.

         சாக போற படு கேவலமா இருக்கற ஒரு பொண்ணுகிட்ட லவ்வ சொல்லுவோம். ரொம்ப கேவலமா எங்க தேடுறது??. அட கார்த்தி எதுக்கு இருக்கான். தேடுனு சொன்னா தேட போறான்.

         சத்தியமா சொல்றேன் இவ்ளோ கேவலமா ஒருத்தவங்கள பார்க்க முடியாது. பொன்னம்பலத்துக்கு  பொம்பள வேஷம் போட்ட மாதிரி இருந்தாங்க.சரி ட்ரை பண்ணி பார்போம். 

        சொல்லிட்டேன். சொல்லி தொலைச்சேன். நம்பாமல் மண்டைய சொரிந்து கொண்டே போயிருச்சு.. 
        
      ஒரு வாரம் தீவிர செக்கிங். 

     தப்பிச்சுட்டேன். 
  
    இனி எல்லாம் சுபம்னு போய் சொல்லிட்டேன்.சும்மா மூணு வார்த்த ஒரு கப் COFFEE   

    காதலில் நானும் வென்றுவிட்டேன். 

    திடீர்னு சனியன் வந்தான். 
   
     பேப்பர் பார்த்தியாடா??
     
     இல்ல. ஏன் இந்திய ஜெயச்சுருச்சா!!

      போடா லூசு பயலே நம்ம TEST பண்ணின அல்பாயுசு கெழவிய எவனோ கல்யாணம் பண்ணிடானாம்....

       







    அடுத்து என்ன பண்ணலாம் 
    
    அவள் யாரையும் பார்க்க கூடாது. பார்த்தாலும் நினைக்க கூடாது.

    இது வரைக்கும் கதை சொன்ன ஹீரோ இனி என்ன பண்ணலாம்னு யோசிக்க போயிட்டாரு.. 

    இந்த கார்த்திக் பய அந்த பொண்ணுகிட்ட சொல்லீட்டான்  


    இனி கதைய நம்ம பார்போம்..
                                                                 
           அந்த பொண்ணுக்கு தெரியாம 
ஹீரோ மார்பிங் பண்ணிக்கறாரு. இவர பொறுத்த வரைக்கும் அந்த பொண்ணு அவ கண்ணுல பார்க்க போற ரெண்டாவது பையனும் இவரே (என்ன ஒரு புத்திசாலித்தனம் )

          அவ இன்னும் கொஞ்சம் யோசிச்சு. EYE BALL TRANSPLANTATION பண்ணிக்குது . அவள பொறுத்த வரைக்கும். அவள் கண்கள் பார்க்கும் முதல் இரண்டாவது இரண்டும் ஹீரோ தான். (இதுக ரெண்டும் லவ் பண்ணா உருப்படுமா )


         மார்பிங் முகத்த இவ லவ் பண்ண ஆரம்பிக்கிறா.
       
               காதல் !! கதை ஒரு வழியா முடியுது..

        நோட்டு1: அந்த புது கண்களுக்கு ஹீரோ முதல் ஆள். கதை முடியல

        நோட்டு 2: கதை பிடிக்கலேன்னா நானும் மூளையை கலட்டி வச்சுட்டதா முடிவுகட்டிகொள்ளவும்

 TITLE FROM ஷேக்ஸ்பியர்
 EYE TRANSPLANTION IDEA FROM MINORITY REPORTS 

Wednesday, 18 January 2012

நிஜம் அல்ல நிழல்

                                 இந்த கதை படிக்கும் போது  சிகப்பு ரோஜாக்கள்; DIAL M FOR MURDER பட காட்சிகள் ஞாபகம் வந்தால் ஆசிரியராகிய !!!!! நான் பொறுப்பல்ல
                               
                                 கணவன் நல்லவன்

                                 மனைவி கள்ளதொடர்பு

                                 கணவன் கொலை செய்ய திட்டமிடுகிறான்

                                 இது தாங்க  கதை...



                                 இனி கதைக்கு போவோம்


                                    திட்டம் தான் இந்தாண்டு திட்டம் அல்ல. ஆறு மாத திட்டம். கொலை செய்ய வேண்டும்.ஆம் அவள் தான். பணக்காரி.. பிணக்காரியாக்க வேண்டும்..
                                 என்னைக்கு வருவ (அதீத மரியாதை )


                                  3 DAYSLA வந்துருவேன் 
               
                                  எல்லாம் எடுத்துட்டு போறீங்கல்ல.(ஆம் உன்னை கொலை செய்யும் திட்டத்தையும் சேர்த்து )

                                  அடுத்த 3  நாட்களில் நடப்பது  


                                  கோபால் டெல்லி சென்று  விட்டான்   


                                  கிருத்திகா கார் விபத்தில் பலி.


                                  கோபால் சென்னை பயணம்.       


                                  கொலை முடிந்து விட்டது. கதையும் தான்.
                           
                                  அப்படின்னு வந்து பார்த்தா அவபாட்டுக்கு உக்காந்து இருக்கா. அந்த கார்த்திக் பயலும் பக்கத்துல உக்காந்துகிட்டு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்காங்க.. அடச்சீ இவளுக்கு ஏன் மரியாதை ..

                                 எங்கே சொதப்பீனோம்???

                               


                                  இனி யாரையும் நம்ப போறதில்லை.. நானே முடிவு கட்டுகிறேன் . யாருக்கு தெரிந்தாலும் பரவாயில்லை. நீங்கள் யாரும் என்னை போட்டுகொடுக்க மாட்டீர்கள்  என்று நம்புகிறேன்.

                                  அன்று இரவு எங்கள் படுக்கை அறையில் ச்சே அவர்கள் அறையில் பீரோவுக்கு பின்னால் ஒளிந்து இருந்தேன்.

                                 இருவரின் முகத்திலும் சிரிப்பு.கடைசியாக சிரித்து கொள்.

                                  யாரும் சந்தேகபடலையா.
                               
                                  ச்சே ச்சே

                                   என்ன சந்தேகம். ஒன்னும் புரியல.பீரோவுக்கு பக்கத்தில் ஒரு செய்தித்தாள். அதிர்ச்சியில் உறைந்தேன்..
                               
                                  பிரபல தொழில் அதிபர் கார் விபத்தில் பலி 


                                                கோபால் என்கிற 31 வயது தொழில் அதிபர் ஏர்போட்டிற்கு செல்லும் வழியில் எதிரே வந்த தனியார் பேருந்தில்  மோதி இறந்தார்.கார் டிரைவர், கோபால் இருவரும் சம்பவ இடத்திலேயே ப......லி....  


MORAL : EXECUTION IS IMPORTANT THAN PLANNING