Pages

Thursday 12 April 2012

ஆண்டிடோட் (ANTIDOTE)

அவள் எனக்கு நன்கு பரிச்சயமானவள் தான், கல்லூரி நாட்களில் .

கார்பன் உருண்டைகள் நாட்டியம் ஆடிக்கொண்டு இருக்கும்,அவளின் இமைகளாய்.அதற்காகவே அவளை கல்யாணம் செய்து கொள்ளலாம்.அவள் என்னை ஈர்த்த விஷயங்களில் அவளது தீர்க்கமான பேச்சும்  ஒன்று.எதையும் சட்டைசெய்துகொள்ள மாட்டாள்.அவளோடு தர்க்கம் செய்த நாட்கள் எண்ணற்றவை.

அப்போது அரசு மருத்துவக்கல்லூரியின் இறுதி நாட்களில்  இருந்தோம் .ஒரு தனியார் பேருந்தில் சில நண்பர்களோடு திருச்சி  செல்ல வேண்டியிருந்தது.

அன்று என் காதலை சொல்ல திட்டமிட்டு இருந்தேன். நான் சொல்வதற்கு முன்பு அவள் அக்காரியத்தை செய்வாள் என என்னிடம் முன்னரே கூறியிருந்தால் நான் பயணப்பட்டு இருக்கவே மாட்டேன்.

பயணி ஒருவர் தள்ளாடிக்கொண்டு நின்றிருந்தார்.இவர் குடித்துவிட்டு பயணம் செய்ததை அனைவரும் வெறுப்பாய் பார்த்தோமே தவிர யாரும் அவரை வண்டியில் இருந்து கீழ் இறக்கவில்லை.

நானும் அவளும் சிரித்து பேசிக்கொண்டு இருக்க;அவர் அவளை ஆட்டு இறைச்சிக்காக எந்நேரமும் விழித்துக்கொண்டு இருக்கும் நாய் போல் பார்த்துக்கொண்டு இருந்தான்..

அவள் அவரை சட்டைசெய்ததாக தோன்றவில்லை. மாறாக, அவள் பேச்சிலும்;நான் அவளை கவனிக்கவில்லை என்பதில் மட்டுமே இருந்தது.

காதல பத்தி என்ன நினைக்குறீங்க??

ஹ்ம்ம் நீயுமா ??. உனக்கு  யார் மேல? என்ன திடீர்னு?

சும்மா சொல்லுங்க..

LOVE IS A FOOLISHMAN JOB . எந்த மிருகமாவது லவ் பண்ணுதா?. எல்லாம் நேரடியா செக்ஸ்னு ஆரம்பிச்சுரும். இந்த மனுச மிருகம் மட்டும் தான் இப்படி
எல்லாத்துக்கும் டிராமா பண்ணிட்டு இருக்கும்.

அவள் இப்படி சர்வ சாதாரணமாய் செக்ஸ் என சொல்லுவாள் என நான் எதிர்ப்பாக்கவில்லை.ஆனால் அவள் தாண்டவம் ஆடியதை நான் காணவேண்டும் என்பதற்காக நேரம் வேகமாய் சுழன்றுகொண்டு இருந்தது.

அந்த தள்ளாட்டலும் தன் பணியை செவ்வனே தொடர்ந்து கொண்டு இருந்தான்.திடீரென அவளது இடையில் கிள்ளினான்.

அதற்கு முன்பு வரை நான் அவளை  அவளாகாவே பார்த்து இருந்தேன். இவள்போல் அன்று தான் பார்த்தேன்.இதற்கு பின்பு அவளிடம் நான் காதல் பற்றி பேசவேயில்லை.

துர்க்கை தன் விழிகளை கோரமாக்கினாள் .அவளின் தேய்ந்துபோன காலணி இன்று அதிவேகமாய் தேய்ந்தது.

பேருந்து நிறுத்தப்பட்டது.

உன் அக்கா இடுப்ப கிள்ள வேண்டியதுதான.அடியின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருந்தது.

ராதிகா எல்லோரும் பாக்கறாங்க.

பாக்கட்டும்; அப்பயாவது இந்த மாதிரி நாய்களுக்கு புத்தி வரட்டும்

பஸ் ஹாரனை ட்ரைவர் ஒருமுறை அழுத்தியது தான் மிச்சம்;இவளின் பார்வையிலேயே டிரைவர் வண்டியின் என்ஜினை அணைத்துவிட்டார்.

அடி இன்னும் குறையவில்லை.அவள் கண்ணில் இருந்து ஒரு துளி நீர்கூட இல்லை. ஆனால் அப்படியொரு  கோபம்.

தாண்டவம் ஒருவழியாய் முடிந்து;பேருந்து கிளம்பியது.

இவனுகளுக்கு எல்லாம் ஆண்டிடோட் கொடுத்துட்டு அடிக்கணும்.அப்ப தான் உரைக்கும்.

ஹ்ம்ம்

The depressed nervous system should be made active. bastards.


சில நேரம் நிசப்தம் எங்களை சூழ்ந்து இருந்தது.

சரி நம்ம என்ன பேசிக்கிட்டு இருந்தோம். ஹ்ம்ம் யார லவ் பண்ற சொல்லவேயில்ல .

நாகர்கோவில் வந்துருச்சு.இறங்கலாம் 

அவளிடம் அதற்கு பின்னர் நான் காதல் பற்றி பேசக்கூட தயங்கினேன்.

நான்கு வருடம் என்னுள் கரைந்துபோனது.

நான் கோவையில் ஒரு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டு இருந்தேன்.

ஹேய் கார்த்திக் எப்படி இருக்க ??. 

கார்த்திக்கை நான் பார்த்து இரண்டு வருடம் ஆகிருந்தது.கடைசியாய் அவனை   MD நுழைவு தேர்வு அன்று பார்த்த ஞாபகம் .ராதிகாவின் ஊர்க்காரன் என்பதால் இவனை ஞாபகம் இருந்தது.

அவன் பதிலளிக்காமல் இருக்க ,நான் தவறான நபரை கார்த்திக் என அழைத்தது போல் தோன்றியது.

சாரி ......

நீங்க.. ராமநாதன் தான ..எப்படி சார் இருக்குக்கீங்க?? ஒரு ரெண்டு வருஷம் இருக்குமா நம்ம பார்த்து??.

ராதிகாவைப்பற்றி கேட்க நினைத்தேன்.

அதற்காக அவரிடம் பேச்சை தொடர்ந்தேன்.

ஆம் ராதிகாவிடம் நான் தொடர்பு அறுபட்டு இருந்தேன். நான்கு ஆண்டுகள்..

கல்யாணம்???

பேச்சுக்கள் நீள...............

சார்,ராதிகாக்கு கல்யாணம் ஆயிருச்சா??

அத ஏன் சார் கேக்குறீங்க?? 

என் மனம் பதபதைத்தது.

அவ வீட்டவிட்டு ஓடிட்டா சார்..

கார்த்திக்,ARE YOU SURE ??

ஆமா சார் . அவ தான்.போயும் போயும் ஒரு டீக்கடைக்காரன்.

என் குழப்பங்கள் அதிகரித்தன.

சார் MMC ராதிகா தான ?

அட ஆமா சார் முட்டக்கண்ணு.

அதற்கு பின் நான் அவரது பேச்சை தடுக்கவில்லை.

பையன் பாக்க சகிக்கல சார்.
அவுங்கம்மா எவ்வளவோ சொன்னாங்க.
அவ மாத்திக்கறதா இல்ல.
யாரோ அவளோட SCHOOLMATE ஆம். 

இவ  டாக்டர். அவன் டீக்கடை வச்சுருக்கான்.

அவங்க வீட்டுல அவள தலைமுழுகீட்டாங்க.

சார் பையன் எந்த ஊர்?

ஏதோ திருச்சி  பஸ் ஸ்டாண்டுல கட வச்சுருக்கானாம்??எதுக்கு சார் ?

சும்மா தான் கேட்டேன்.

அவர் சென்றாலும் ராதிகாவின் செயல் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.

LOVE IS A FOOLISHMAN JOB . எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

ஆண்டிடோட் 

ஆம் 

ஆண்டிடோட் தான்.

The depressed nervous system should be made active 

காதலிப்பவர்களுக்கும் நிச்சயமாய் ஆண்டிடோட் தேவை. 
நிச்சயம் தீர நிச்சயம் 



6 comments:

  1. ஹா ஹா அருமை... காட்சிப்படுத்துதலில் கவனம் செலுத்தவும். இன்னும் டீட்டைல்ஸ் கொடுக்கவும்.. ( உதாரணத்திற்கு: இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையில் நான் ஜன்னலோரம் இருந்தேன். அவள் கைப்பிடிக் கம்பியில் தோள் சாய்த்திருந்தாள். எங்கள் ஆடைகள் உரசும் ஆனால், தொடைகள் உரசாத இடைவெளியில் அமர்ந்திருந்தோம். மிதமான கூட்டம். பேருந்து 100 கிலோமீட்டர் ஸ்பீடைப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தது.. )

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. true story oh?????

    ReplyDelete
  4. இந்த narration போதும் :) உங்க கதைகளோட பிளஸ் எஸ்ரா மாதிரி நீளமா பத்து பக்கத்துக்கு போகாததுதான்.. ரொம்ப புடிச்சிருக்கு இந்த கதை.. நண்பி ஒருத்தி படிக்கட்டும்னு டைம்லைன்ல போட்டிருக்கேன் :) நன்றி @4anbu @anbu

    ReplyDelete
  5. மையக்கரு எனக்குப் பிடித்தது...ஷாலினி எழுதிய பெண்ணின் பெருமை இந்தக் கருத்துக்களை பிரதிபலிக்கும் கட்டுரைத் தொடர்..நல்ல பதிவு..

    ReplyDelete