Pages

Tuesday 27 March 2012

பயணம்

அன்று நான் நானாக இல்லை.

என் மகள் சுவற்றில் சாய்ந்து இருந்தாள்; அவள் இதழோரத்தில் நேற்று இரவு இருந்த சிரிப்பு இப்போது மறைந்து போய் இருந்தது.

நேற்றைய இரவு சற்று அதிகமாகவே நீண்டு இருந்தது.


என் மகளின் காதலுக்கு நான் என் மனைவியை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. என் மனைவி இறுதி வரை அவள் பிடியில் இருந்து கீழ் இறங்கவில்லை. என் மகளும் அப்படியே.


இன்று அனைத்தும் மாறி இருந்தது.


என் மனைவி யாரையோ அலைபேசியில் தொடர்பு கொள்ளமுயற்சித்து கொண்டு இருந்தாள்.

நானும் என் கட்டிலில் இருந்து எழ முயற்சித்து தோற்றுப்போய் இருந்தேன்.

வண்டியில் செல்லலாமே என யோசித்துக்கொண்டு இருக்க; என் மனைவியும்  என்னோடு பயணம் செய்ய ஆயுத்தமானாள்.இவ்வாறு நானும் என் மனைவியும் சேர்ந்து ஒரு விசயத்தை செய்வது இதற்கு முன்னர் எப்போது என்று நினைவில் இல்லை.

இன்று காலையில் இருந்து என் மனதிற்கு நெகிழ்வாய் அமைந்தது இந்த பயணம் மட்டுமே . குளிர்  காலத்தின் நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தன.

சட்டென அ.முத்துலிங்கம் அவர்களின் கவிதை ஒன்று மனதில் தோன்றியது


குளிர் காலம் வரப்போவதற்கான அறிகுறி
ஆடுகள் கத்தையான ரோமத்தின் கதகதகப்பில்
தங்களை பாதுகாக்க ஆயத்தப்படுத்தின.
மனிதர்கள்
தங்கள் உடம்புகளை நீண்ட அங்கிகளுக்குள்
மூடி மறைத்துக்கொண்டார்கள் .
இந்த மரங்கள் மட்டும் ஏனோ
இருக்கும் இலைகளையும் உதிர்த்துவிட்டு
வெறும் மேலோடு குளிர் காலத்தை
எதிர்க்கத் தயாராகி விட்டன.
என்ன துணிச்சல்!!

என் வயது என்னை முழுக்கவிதையையும் என் மனதில் தோன்ற விடாமல் என் ஞாபகமறதியை அதிகப்படுத்தி இருந்தது.

நான் ஏனோ ஒரு சிறுவன் போல் அனைத்தையும் பார்த்துகொண்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்; ஏனோ எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது போன்றதொரு  உணர்வு..


சிறிது நேரம் கண் அயர்ந்துவிட்டேன்...

வாகனம் இப்போது கல்லறை நோக்கி உருண்டோடியது.


அனைவரும் சூழ்ந்து இருக்க

ஒரு  3 அடி குழி வெட்டப்பட்டு இருந்தது. சவப்பெட்டி திறந்த நிலையில் கிடந்தது. எனக்கு சட்டென ஓர் ஆசை...


அந்த சவப்பெட்டியில் படுத்தால் எப்படி இருக்குமென??.


யாரும் பார்க்காதபோது  சட்டென பெட்டிக்குள் என்னை கிடத்தினேன்.என் வீட்டு கட்டிலை விட இந்த மெத்தை எனக்கு சவுகரியமாய் இருந்தது.இங்கு ஏன் தூங்கக்கூடாது என நான் சிந்திக்கும் முன் தூங்கியிருந்தேன்..

இருள் என்னை சூழ்ந்து இருந்தது. இது கனவு என சொல்லி என் மனதை தேற்றிக்கொண்டு இருந்தேன்.கண் விழித்தும் பயனில்லை என பின் முடிவுக்கு வந்தேன்..

இந்த கட்டில் எனக்கு நிரந்தரம் ;என் இடம்  மீண்டும் தோண்டபடாத வரை..

5 comments:

  1. கடைசி ரெண்டு வரிகள் நச்! ஏதோ ஒன்னு விட்டுப் போனது போன்ற உணர்வு.

    ReplyDelete
  2. #நல்ல கதை! இன்னும் கொஞ்சம் நீளப்படுத்தியிருக்கலாம்!

    #வசனங்களுக்கு மேற்க்கோள் இடப்பட்டு எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் அழகாய் இருந்திருக்கும்.. எது வசனம், எது உங்கள் விவரிப்பு என்பதை புரிந்துகொள்ள சிரமப்படவேண்டியுள்ளது! அதேபோல் தான் கவிதைக்கும்:)

    ReplyDelete
  3. அருமை நண்பரே.. கதை சொல்லும் முறை வித்யாசமாக இருந்தது...

    ReplyDelete
  4. மிக நல்ல கதை. உங்கள் பதிவுகளில் நான் படித்ததிலேயே மிகச் சிறந்த கதை இதுதான் :))

    ReplyDelete
  5. மிக்க நன்றி செல்வு. கண்டிப்பாக இனி சில கதைகள் சிறப்பானதாக இருக்கும்

    ReplyDelete