Pages

Monday, 27 February 2012

விபத்து

சொல்லுங்க மாமா

கோபால் , ப்ரீயா இருக்கியா

ஏன் , மாமா சொல்லுங்க


இல்ல ப்ரீயா இருந்தா சொல்லு வெளிய போலாம். எங்க? காலேஜ்லையா இருக்க.

இல்ல மாமா, காலேஜில இருந்து கெளம்பீட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்.

சரி சரி சீக்கிரம் வா..

டேய் நான் கெளம்புறேன். மாமா கூப்பிடுறார்.

மூன்று பஸ் மாறினால் ,சீக்கிரம் சென்றுவிடலாம். கல்லூரியில் இருந்து ரெட்டியார் சத்திரத்திற்கு ஒரு டவுன் பஸ். பின்பு ஓட்டஞ்சத்திரதிற்கு ஒரு விரைவு. அப்புறம் பழனிக்கு ஒரு பஸ். எப்படியும் மாமா லேட்டாக தான் கெளம்பவார்.


ரெட்டியார் சத்திரத்தில் இறங்கிட்டேன் ..இன்னிக்குன்னு ஒரு பஸ்சும் நிக்கல. மாமாவும் கால் பண்ணல. 4 பஸ் நிக்காம போயிருச்சு.

திடீர்னு பாலத்துகிட்ட ஒரு புது காரும் லாரியும்  மோதிருச்சு . கார் இன்னும் ரெஜிஸ்டர் கூட பண்ணல. எல்லோரும் அத நோக்கி ஓடினாங்க.


ஆக்சிடண்டுன்க்ராதாள எல்லா பஸ்சும் நின்னுருச்சு. நானும் பஸ்ல ஏறிட்டேன் ..


விபத்துகளில் நன்மையையும் உண்டு. 

அந்த கார்க்காரன்  மேல தான் தப்பு ........ காதல் சொல்ல நேரமில்லை.உன் காதல் சொல்ல தேவையில்லை .நம் காதல் சொல்ல வார்த்தையில்லை .


ஹெட்செட்டிற்குள்  நுழைந்தன என் காதுகள்.

சேவக் 40  பந்தில் 70 ரன் . கம்பீரும் தன் பங்கிற்கு அடித்து நொறுக்க ; சட்டென விழித்தேன்.

9 MISSED CALLS ..

நல்ல தூக்கம்..

என்ன அப்பா சொல்லுங்க

எங்கடா இருக்க . இப்ப தான் பழனில இறங்கினேன். மாமா கெளம்பீட்டான்களா ??.


சரி சரி வீட்டுக்கு சீக்கிரம் வா. 


என்ன பா? சொல்லுங்க. மாமா ரெட்டியார் சத்திரத்துகிட்ட ஆக்சிடண்டுல இறந்துட்டார்.

விபத்துகளோ ; என்கவுன்டர்களோ நமக்கு சாதரணம் தான் . நம்மில் யாருக்கும் நடக்காத வரை 

7 comments:

  1. ஒரு அழகான குறும்படம் போல இருக்கு. இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதினா இன்னும் அழகா வந்திருக்கும்.!

    ReplyDelete
    Replies
    1. நன்றி . கண்டிப்பாக விரைவில் சற்று தெளிவாக எழுதுவேன்

      Delete
  2. நல்ல முயற்சி.. கொஞ்சம் பெருசாவே எழுதியிருக்கலாம். சின்னதா இருப்பதால் அந்த ஃபீல் மிஸ்ஸிங்

    ReplyDelete
    Replies
    1. ஏனோ தெரியவில்லை. எழுத முயற்சிக்கிறேன். பெரிதாக இருந்தால் படிக்க மாட்டார்கள் என்ற என் எண்ணம் என்னை விட்டு அகன்று செல்ல மறுக்கிறது

      Delete
  3. சூப்பருங்க...! உங்க பெஸ்ட் இது தான்!

    ReplyDelete
  4. பிளாக் டிசைன் சூப்பருங்க...!

    ReplyDelete
  5. நன்றி ஸ்ரீ . என் சிறந்தது வந்துவிட்டது எனில் நான் எழுத மாட்டேன் .

    ReplyDelete