Pages

Saturday, 18 February 2012

அம்புலி 3D

hii da

still in theatre only

ok ok

y didnt come to exam ??

ok ok film started. will call later

என்னடா படம் முடிஞ்சுச்சா

முடிஞ்சுச்சு டா

எப்படிடா இருக்கு MUK கு

டேய் நான் அம்புலி போனேன்

அம்புலியா ??

ஆமாண்டா தமிழோட முதல் 3D FILM

அப்ப நான் மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்தது

அதெல்லாம் 2D ல எடுத்து அப்புறம் மாத்தினது. இது தான் 3D காமரால எடுத்த முதல் படம்

கதை??



பழசு தாண்டா . ஊருக்குள அந்த பக்கமா போன பேய் அடிச்சு சாப்பிடுடும்னு பழைய பிட்டு .

ஓ. ஹீரோ ??

  ஓர் இரவு படத்துல வந்த அதே டீம். அந்த படத்துல PRODUCER ; director ; music கேமரா எல்லாம் இவுங்க தான். இதுலயும் அத  தான் பண்ணி இருக்காய்ங்க

ஏதோ படத்துல யாருமே தெரிய மாட்டாங்கன்னு சொன்னியே அதுவா ??

  ஆமாண்டா. அந்த படம் தான்

ஏன்டா அப்ப இந்த பட போஸ்டர்ல பார்த்திபன்; உமா ரியாஸ்கான் ; தம்பி ராமையா ; ஜெகன் போடோவெல்லாம் இருக்கு

  இவங்கெல்லாம் எக்ஸ்ட்ரா.அம்புளியோட அண்ண பார்த்திபன். அம்மா உமா .ரெண்டு பிரெண்ட்ஸ் லீவுக்கு வீட்டுக்கு போகாம இருப்பாங்க. அதுல ஒருத்தனோட அப்பா தம்பி ராமையா . ஜெகன் வந்து நாத்திகன் ரோல் டா.

அம்புலி யாரு ?

                               

உனக்கு தெரிஞ்ச மூஞ்சி தான் . இந்த மானாட மயிலாடல வந்தான் டா . மூஞ்சிகூட பருவா இருக்குமே. கருப்பா இருப்பான்.

கோகுலா ??

  அவந்தாண்ட. பாவண்டா அவன காட்டவே இல்ல . புல் மேக் அப். அவன்கரதே எழுத்து போடுற அப்ப தான் தெரியும்.

சரி சரி கடைசியா சாவான மாட்டானா??

எப்பயும் போல ENGLISH படத்துல எல்லாம் வருமே . அதே மாதிரி தான் . PART 2 ஆரம்பிக்கற மாதிரி தப்பிக்கிற மாதிரி முடிச்சுடுவாங்க.ஆனா நெறையா லாஜிக் மிஷ்டேக்கு டா .

  ஆரம்பிச்சுட்டியா ..சரி சரி என்னதான் புதுசா இருந்துச்சு.

  ஆர்ட் நல்ல இருந்துச்சு. அப்புறம் சில  சீன்ல   3D  சூப்பர இருந்துச்சு. வேறொன்னும் பெருசா இல்ல .

அவ்ளோதானா ??

 எப்பயும் போல ஒரே கதைய எடுக்காம புதுசா டிரை பண்ணுறாங்க . அதுக்கே  பாக்கலாம்டா. கம்மியான டிக்கட் எடுத்து; கிட்ட உக்காந்து பாரு. படம் பாக்க நல்லா இருக்கும்.

பாட்டு இருக்கா டா??

ஆமாண்டா   ஒரு 3 பாட்டு . ஆனா ஒன்னும் ஞாபகம் இல்ல . நெஞ்சுக்குள்ள யாருன்னு ஒன்னும் மட்டும் கேட்கலாம். bUT RR சூப்பர்ர்ரா

 சரி எத்தன நாள் ஓடும் ??

ஓடும் டா . ஒரு பத்து நாலு.

சரி விடு டவுன்லோடு பண்ணி பாத்துக்குறேன்.

டேய் இது 3D படம் டா.

ஓ சரி சரி ..

சரி சரி எங்க வேகமா போற

பிளாக்ல எழுத தான். இதையாவது படி டா

சரி சரி பார்போம் ..



  

5 comments:

  1. ஹலோ..? ப்ரொட்யூஸர் சாரா..?

    சொல்லுங்க ஹரீஷ்..?

    சார், நம்ம அம்புலி படத்துக்கு வழக்கமா பக்கம் பக்கமா எழுதுற மாதிரியான விமர்சனம் எழுதாம, ஒரு ப்ளாகர் வித்தியாசமா ஒரு விமர்சனம் எழுதியிருக்காரு... http://get2kg.blogspot.in/2012/02/3d.html இந்த லிங்க்-ல இருக்கு படிச்சி பாருங்க சார்...

    ஓ அப்படியா... நல்லது... அதுதான் கரெக்ட்... நாம மட்டும் வித்தியாசமா படம் எடுக்கலாம் ஆனா, மத்தவங்க வித்தியாசமா எழுதக்கூடாதா..? நல்ல முயற்சிதான்... கண்டிப்பா படிக்கிறேன்.


    -----------

    நண்பருக்கு,

    நல்ல அணுகுமுறையில் விமர்சித்துள்ளீர்கள்... நன்றி..! அருமை..!

    -
    DREAMER

    ReplyDelete
    Replies
    1. நன்றி நீங்களெல்லாம் என் விமர்சனத்தை படிப்பீர்கள் என தெரியாது. நானும் கனவு தான் கண்டுகொண்டு இருக்கிறேன். என் கனவுகளையும் அனைவரும் காணும் நாள் வரும் .. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு. இப்படி வித்யாசமாய் எழுதினால் யாரேனும் படிப்பார்களா? என எண்ணினேன். என் நம்பிக்கையை பொய்த்தமைக்கு நன்றி

      Delete
  2. good review - nice to see that u have tried a different style - still not sure of the film is worth a visit to the theatre ... Thanx Karthik @sweetsudha1

    ReplyDelete
    Replies
    1. thanks for the encouragement for reading my new style. really thanq. has it released in ur town ka ?

      Delete
  3. தல பின்றீங்க!
    வாழ்த்துக்கள்:))

    ReplyDelete