நான்காம் ஆண்டு பொறியியல் மின்னணு மற்றும் தொழில்தொடர்பியல் (சரி சரி விடுங்க ECE ) மாணவிகள் பேசிக்கொண்டது .
இந்த கார்த்தி இப்படி பண்ணுவான்னு கொஞ்சங்கூட எதிர்ப்பாக்கலடீ.
இத்தன நாளா யார்டையும் பேசாம இப்ப FACEBOOKல RELATIONSHIP WITH SAKTHI னு ஸ்டேடஸ் அப்டேட் பண்ணி இருக்கான்.
எந்த கார்த்திடீ?
அவன்தான்டீ நம்ம யாராவது பேச போனா முறைச்சுகிட்டே இருப்பானே அவன்தான்.நாலு வருசத்துல யார்ட்டயுமே பேசினதே இல்ல.
அவனா ??சரி, சக்தி என்ன சொன்னா ? .
அவளால இன்னும் நம்பவே முடியல. கார்த்தி ஏன் இப்படி எழுதினான்னு புரியாம உக்காந்து இருக்கா.
ஆம் அவர்கள் சொல்வதும் நியாயம்தான்.
எல்லா படத்துலயும் ஹீரோ பேறு கார்த்திக் . ஆனா இவனோ மௌனம் பேசியதே சூர்யா மாதிரி யார பார்த்தாலும் முறைப்பான்; ஆனா ரொம்ப நல்ல டைப்.
பட் இவன் ஏன் இப்படி பண்ணினான்??
அடுத்த நாள்
சக்தி லைப்ரரிக்கு வெளியே நின்றிருக்க கார்த்திக் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்..
சக்தி கேட்டே விட்டாள்.
என்ன நினைச்சிட்டு இருக்க??
என்ன வேணும்னாலும் நினைப்பேன். உனக்கென்ன..
ஹ்ம்ம் FACEBOOK ல என்ன ஸ்டேடஸ் போட்ட ?
ஏன் நீ பாக்கலையா ??
அதென்ன லவ் வித் சக்தி??
ஆமாம். உனக்கென்ன .
நீ என்ன லவ் பண்றியா ??
ஐயோ. அவனுக்கு தூக்கி வாரி போட்டது. அவனது பதிலோ அவளை தூக்கி வாரி போட்டது
என்னை இவ்வளவு கீழ்தரமா நினச்சுட்டீங்கள்ள. இந்த நாலு வருஷத்துல யாராவது ஒரு பொண்ணு கிட்ட பேசி இருப்பனா?. ATLEAST யாரையாவது பார்த்து சிரிச்சு இருப்பனா??. நம்ம கிளாஸ் பொண்ணு யார்மேளையும் எனக்கு எந்த விதமான தவறான அபிப்ராயமும் கிடையாது.
அப்ப சக்தி எந்த பொண்ணு ??
எனக்கு உங்கள மட்டும் இல்ல ; எந்த பொண்ணையும் பிடிக்காது. நான் பார்த்தது உங்களுக்கு பின்னாடி நின்னுகிட்டு இருந்த சக்திவேல்
இது உண்மைக் கதை அல்ல
ReplyDeleteஎல்லா படத்துலயும் ஹீரோ பேறு காத்திக் ! சக்தி கொடு..............! ;-)
ReplyDeleteஅலை பாயுதே முதல் VTV ; TVP வரை . கார்த்திக் என்றால் ஹீரோ தான்
Deleteநன்றி பிழை இப்போது தான் பார்த்தேன்
Deleteஇது என்ன Gay type கதையா ? ;)
ReplyDeleteஇல்லீங்க பேரு மாத்தி லெஸ்பியன் மாத்ரி கூட படிச்சுக்கலாம்
Deleteஅட கொலைக்காரா அவனா நீ ரைட்றா...எடுங்கடா அந்த கத்திரிக்கோல...
ReplyDeleteAaa Angallam Thodathinga... Yen da Ipdi Opening la ye Gay Story
ReplyDeleteஅலை பாயுதே முதல் VTV ; TVP வரை . கார்த்திக் என்றால் ஹீரோ தான் .
ReplyDeleteடே அவனா நீ .....
ReplyDelete