Pages

Monday, 2 January 2012

காட்சிபிழை


ROOM NO.36 சாப்பாடு வெளிய இருக்கு எடுத்துகோங்க.

 வாழ்க்கை முற்றிலும் வெறுத்திருந்தது அவள் இங்கு வந்து சேரும் முன். நான் யார் என்று உள்ளே ஒரு கேள்வி சில நாட்களாய் மட்டும் மனதில் ஒலிக்கின்றது.
       
                       புது புது அர்த்தங்கள் படத்துல வர்ற கீதா மாதிரி ஒரு மனைவி.ஏனோ பிடிக்கல ரஹ்மான் மாதிரி எனக்கும்.ஓடி வந்துட்டேன் torture  தாங்க முடியாம...

அவள் இங்கு என்று வந்தாள் என்று தெரியாது. எனக்காகவே வந்தாள் என்பது போல ஒரு உணர்வு.I LOVE HER THE MOST, கல்யாணம் ஆகாத ஒருவனுக்கு மனதில் தோன்றும்  கனவு போல் இருந்தாள்.
     
நீங்க அழகா இருக்கீங்க.. சிரித்துகொண்டே சென்றுவிடுவாள்.
   
டாக்டர் எப்ப வருவார். கீழ் floorல இருக்கார். என்றும் எதையோ பறிகொடுத்து போல் இருப்பாள். Many times she makes me feel that she has special interest in me.


                         எனக்கு எது எது பிடிக்கும் என்று கேட்டு அறிந்துகொண்டு எனக்கு கல்யாணம் செய்து வைத்தனர் போலும். over-possession harms us at much occasions.அவள் செய்யும் ஒவ்வொரு விசயமும் செயற்கைதனங்கள் மட்டுமே மேலோங்கி இருக்கும்.அவள் பிடித்தாலும் பிடிக்கவில்லை ரகம்.

                          அன்று அமைதியும் இனிமையாய் பட்டது.கொடைகானல் சாலையில் ஐபேட் உடன் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தேன்..cigarette lighter வாடை கூட வாசம் தான்.நினைவுகளை அழித்துக்கொண்டு இருந்தேன் . காதில் ஒரு கூக்குரல் வேறொன்றும் நினைவில் இல்லை.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்துவிட்டேன்.யாரும் தெரியாத ஒரு ஊர்.இருந்தும் மனதில் ஒருவித மகிழ்ச்சி.

இவள் பெயர் நித்யா. இவள் மட்டுமே உலகம் எனக்கு. அவளிடம் காதலை சொல்ல முடிவெடுத்தேன்..

உங்களோடு  இருக்க ஆசை
           
இப்படியே பைத்தியமாவா??. அவள் கேள்வி என்னை சற்று கோபப்பட வைத்தது.ஆனால் கோபம் வரவில்லை. சிரித்தேன்.... சிரித்தாள்...


அவளுக்கென்று யாரும் இல்லை.என்னை போல் அவளும் தனிமை விளக்கு.சில நாட்கள் அவளோடு இருந்தேன்.


We joined together not just by hands... 


ஏன் இவ்வாறு என்பது போல் ஒரு கனவு.நினைவு படுத்தி பார்க்கையில் அனைத்தும் நிஜம்.அழகான மனைவி,முகம் ஞாபகம் இல்லை.ஓடி வந்து இருக்கிறேன் என்கிறது மனம்..ஏன் என்று தெரியவில்லை??.. மீண்டும் கேள்வி பதில்கள் மனதில்?.
     
ஏன் வீட்டை விட்டு வந்தேன்?
                        
அவள் என்ன செய்தாள்?
                          
If taking care is something bad.what else has the nurse did for me?? 


                         
மனைவியின் அன்பு தவறில்லை என்று தோன்றியது. மண்டைக்குள் ஒளிச்சிதறல்கள்.விண் விண் என்று தேனீ ரீங்கரமிடுமா? எனக்கு அப்படி தான் இருந்தது.நான்கு மாதமிருக்குமா? இல்லை,இல்ல்லை இல்ல்ல்லாஆஇ...

                       
ஆறு மாதங்கள்...சீட் எரிந்து போச்சா? ச்சே. நான் எப்படி பிழைத்தேன்? ஏன் அவள் வந்து என்னை பார்க்க வில்லை? நான் கொடுமைக்காரனா? இது கனவா?கனவுதான்.கனவேதான்..முழிக்க வேண்டும் தூக்கத்தில் இருந்து முழிக்க வேண்டும்......இல்லை தூக்கமில்லை.இவளை என்ன செய்ய?

                         
ATM கார்டு இருந்தது.நிறைய பணம் இருந்தது.காரே வாங்கலாம்.கார் வாங்கும் அளவுக்கு பணம். கார் வேண்டாம். டாக்ஸி பிடிக்கலாம். உடனே மனைவியை பார்க்க வேண்டும். எந்த ஊர்? அந்த ஊர்தான்.ஆம்.அதே ஊர்தான்.

                       
இவள் நினைவுகளை வைத்து கொண்டு என் மனைவியுடன் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? இவளை வைத்துகொண்டு எப்படி நிம்மதியாய் வாழ முடியும்.இவளுக்கு நான் மட்டுமே இருக்கிறேன் என்று நினைக்கும்போது இப்பொழுது மகிழ்ச்சியாய் உள்ளது.ஆனால் இவள் இருநதால் எனக்கு மகிழ்ச்சி இருக்காது.

மாட்ட மாட்டேன். நிச்சயம் மாட்ட மாட்டேன்.நான் யார் ஒரு patient . அவள் ஒரு nurse .எங்களுக்குள் ஒன்றும் இல்லை.இருந்திருந்தால் என்ன.நான் உளறபோவதில்லை. அவள் உளற இருக்கபோவதில்லை.

தேவை ஒரு கயிறு..

இல்லை

இல்லை

கழுத்து நெரிந்து மாட்டிகொள்வேன்.

கத்தி??

ஏன் இவ்வளவு யோசிக்கிறேன் போகிற வழியில் தள்ளிவிட்டால் இறையாகி(எழுத்து பிழை அல்ல ) விடுவாள். பின்பு ஜூனியர் விகடனில் மலை அடிவாரத்தில் பெண் பிணம் கொலையாளி யார்?.


யாருக்கு தெரியும் நானில்லை. பக்கத்தை திருப்புவது போல் அவள் வாழ்க்கையும் மறைந்துவிடும்;மறந்தும் விடும்.

பிகில் அடித்துக்கொண்டு இருந்தேன்.மனைவி முகம் மறந்து விட்டது.இதோ அவளுக்காக நான். நான் மட்டுமே. நித்யாவா?? யார் அது??. ஆம் இப்போது அவள் அது தான்..
                                 ________________________________________
பி.கு: POLICE துப்பு துலக்கியது. அவள் பெயர் நித்யா அல்ல வந்தனா என்று கண்டுபிடித்தது.வந்தனா கொடைகானல் மருத்துவமனையில் யாருக்கோ nurse  ஆக இருந்து இருக்கிறாள்.

HURRAY என் மனைவி பெயர் வந்தனா என்று கத்தி கொண்டு இருந்தேன் .....







10 comments:

  1. விமர்சனம் என்பது எழுத்தாளனுக்காக அல்ல.வாசகனுக்கானது.இந்த கதையை எப்படி வகுத்து கொள்வது?
    தன்னெழுச்சியான போக்கு கொண்ட சிறந்த கதைக்கு உதாரணம் அசோகமித்ரனின் "காந்தி" சிறுகதையும் மனப்பிறழ்வு கொண்ட நடைக்கு முன்னோடியாக திகழ்வது நகுலனின் "நினைவு பாதை" நாவலும்தான். இந்த கதையின் நாயகன் ஒரு வகையில் விட்டேற்றி தனமான மன சிக்கல் நிரம்பியவன். அவனுக்கான நடையை,அதாவது,நகுலன் படைப்புகளில் காணப்படும் நடை,தேர்வு செய்ததே இந்த கதைக்கு சிறப்பானதொரு படிமத்தை நமக்கு அளிக்கிறது.
    எந்த விதமான இயற்கை வருணனைகளும் உவமைகளும் காட்சி சித்திரங்களும் இந்த கதையில் குறிப்பிட படவில்லை. தேவையும் இல்லை. பின் நவீனத்துவ உத்திகள் சரிவர கைகூடாததற்கு காரணம் எழுத்தாளனின் பயிற்சி இன்மையே. ஒரு கதை வாசகனுக்கு ஏதோ ரூ அனுபவத்தை தர வேண்டும்.
    நம்மை அந்த கதை ஆட்கொள்ள வேண்டும். நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டும். கதையின் நாயகனை போலவே நமக்கும் மறந்து போய் விடுகிறது. அல்லது மறந்து போய் விடும்......கதையும் கதையின் கருவும்.
    தீராத வாசிப்பும் கூர்ந்த அவதானிப்புகளுமே ஒரு சிறந்த எழுத்தாளனை உருவாக்கும் கார்த்திகேயன் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.எழுத வேண்டும். வாழ்த்துகள்

    ReplyDelete
  2. @platonic mikka nandri. will improve in future .. thanks a lot

    ReplyDelete
  3. nice , but எதுவும் புரியல

    ReplyDelete
  4. சொன்ன விதம் பிடிச்சிருக்கு நண்பா! நிறைய எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  5. கதைக்கரு நிச்சயம் அருமை. ஆனால் சற்று குழப்பமான நடை. அதில் மட்டும் கவனம் தேவை :) மற்றபடி நல்ல முயற்சிங்க!

    ReplyDelete
  6. kg thala suthura mathiri iruku da

    ReplyDelete
  7. kaatchiya eppa kaattuveenga

    ReplyDelete
  8. கதையை புரியவே இல்லை

    ReplyDelete
  9. எனக்கு பிடித்திருக்கிறது நண்பா.வித்தியாசமான நடை

    ReplyDelete
  10. எனக்கு பிடித்திருக்கிறது நண்பா.வித்தியாசமான நடை

    ReplyDelete