நாகரீகம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு என்ன பதில் சொன்னாலும் பொருந்தும்.சிந்து சமவெளியில் தொடங்கி இன்றளவும் தொடர்கிறது.இன்று நான் சொல்லும் பதில் நாளை தவறாகிவிடும்.. அது ஒரு மாற்றத்தின் கட்டாயத்தில் உள்ளது. தவறெனக்கொள்ளபடுவது சரியாவதும். சரி எனக்கொண்டது தவறாவதும் வாடிக்கை ஆகிவிட்டது..1950 களில் கடுக்கன் போடும் ஆண்கள் மத்தியில் போடாதவர்கள் குற்றவாளிகள் போல் பார்க்கபட்டனர். இன்றும் அதே நிலைமை. என்ன ஒரு சிறு மாற்றம் கடுக்கன் STUD ஆகி உள்ளது.
ஒரு குவளை அளவு அரிசியில் இருக்கும் அதே சத்துக்கள் தான் கோதுமையிலும் ஓட்சிலும் இருப்பதாக கேள்வி. 'உன் மண்ணில் விளையாத ஒரு உணவு பொருள் உன் உடம்பிற்கு ஒவ்வாது " என ராஜாஜி சொன்னதாக கேள்வி. மூன்று பதார்தத்திலும் நாம் சாப்பிடும் அளவு தான் வேறுபட போகிறதே ஒழிய வேறில்லை. ஏனோ நாம் பிறரின் பொருட்கள் மீது கொண்டிருக்கும் மோகம் குறைந்தபாடில்லை..
ரவிக்கை இல்லாமல் இருந்த காலம் மறைந்து பின்னர் ரவிக்கைகளின் அளவு குறைந்து. தற்போது மீண்டும் அது இல்லாமல் அணிவது கவர்ச்சி;நவநாகரீகம் என கொள்ளப்படுகிறது ..
நாம் சாப்பிடும் உணவு. சாப்பிடும் பொருள் என அனைத்தும் கால சக்கரத்தின் கீழ் சுழன்று கொண்டே இருக்கிறது.. நம் கை விரலை விட கரண்டியும்; முட்கரண்டியும் சுத்தமானவை தான் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. சுத்தம் இல்லை எனிலும் கூட பிறர் என் விரல்களை பயன்படுத்தி இருக்கபோவதில்லை .சர்வ பள்ளி ராதாகிருட்டிணன் ஒரு முறை இங்கிலாந்து சென்ற போது சர்ச்சில் அவர்கள் விரல்களில் உணவு உண்ணும் ராதாகிருட்டிணனை கேலி செய்து இருக்கிறார். "எங்கள் ஊரில் கழுதை கூட கரண்டியில் தான் சாப்பிடும்" அதற்கு ராதாகிருட்டிணனின் பதில் அவரை ப்ளார் என அறைய வைத்தது. "நான் மனிதனாக இருக்க ஆசை". இந்த துணிவு நம்மில் எத்துனை பேருக்கு இன்று இருக்கிறது???
நாகரீகம் என்பது தற்போது மாறுதலுக்கு உட்பட்டது என்பது களைந்து எதை செய்ய வேண்டுமோ அதற்கு முரணாக செய்ய வேண்டும் என கருத்தில் கொள்ளப்படுவது நம்மிடம் உள்ள இழிவு மனப்பான்மையையும்; பேதை தனத்தையுமே காட்டுவதாக இருக்கிறது.
நாகரீகத்தின் படி; தமிழ் சமுதாய நெறிகளின் படி வேட்டி;கோவணம் கட்டுங்கள் என யாரும் சொல்வதில்லை. ஆடை நம் தேகத்தை மறைக்க உதவாமல் நம் அறிவை மறைக்க முயலும் போது அதை கழற்றுவது தவறில்லை.
நாகரீகம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுவதே அன்றி பிறர் செய்வதை பிரதி எடுப்பது அல்ல. நாம் நாமாக இருப்போம்..
இந்த் கட்டுரை katturai .COM இல் வெளியாகி உள்ளது
http://www.katturai.com/?p=1737
இந்த் கட்டுரை katturai .COM இல் வெளியாகி உள்ளது
http://www.katturai.com/?p=1737
romba nalla iruku inum neriya ethir pakuren pa..
ReplyDeletethanq fred...
Delete