Pages

Wednesday, 18 January 2012

நிஜம் அல்ல நிழல்

                                 இந்த கதை படிக்கும் போது  சிகப்பு ரோஜாக்கள்; DIAL M FOR MURDER பட காட்சிகள் ஞாபகம் வந்தால் ஆசிரியராகிய !!!!! நான் பொறுப்பல்ல
                               
                                 கணவன் நல்லவன்

                                 மனைவி கள்ளதொடர்பு

                                 கணவன் கொலை செய்ய திட்டமிடுகிறான்

                                 இது தாங்க  கதை...



                                 இனி கதைக்கு போவோம்


                                    திட்டம் தான் இந்தாண்டு திட்டம் அல்ல. ஆறு மாத திட்டம். கொலை செய்ய வேண்டும்.ஆம் அவள் தான். பணக்காரி.. பிணக்காரியாக்க வேண்டும்..
                                 என்னைக்கு வருவ (அதீத மரியாதை )


                                  3 DAYSLA வந்துருவேன் 
               
                                  எல்லாம் எடுத்துட்டு போறீங்கல்ல.(ஆம் உன்னை கொலை செய்யும் திட்டத்தையும் சேர்த்து )

                                  அடுத்த 3  நாட்களில் நடப்பது  


                                  கோபால் டெல்லி சென்று  விட்டான்   


                                  கிருத்திகா கார் விபத்தில் பலி.


                                  கோபால் சென்னை பயணம்.       


                                  கொலை முடிந்து விட்டது. கதையும் தான்.
                           
                                  அப்படின்னு வந்து பார்த்தா அவபாட்டுக்கு உக்காந்து இருக்கா. அந்த கார்த்திக் பயலும் பக்கத்துல உக்காந்துகிட்டு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்காங்க.. அடச்சீ இவளுக்கு ஏன் மரியாதை ..

                                 எங்கே சொதப்பீனோம்???

                               


                                  இனி யாரையும் நம்ப போறதில்லை.. நானே முடிவு கட்டுகிறேன் . யாருக்கு தெரிந்தாலும் பரவாயில்லை. நீங்கள் யாரும் என்னை போட்டுகொடுக்க மாட்டீர்கள்  என்று நம்புகிறேன்.

                                  அன்று இரவு எங்கள் படுக்கை அறையில் ச்சே அவர்கள் அறையில் பீரோவுக்கு பின்னால் ஒளிந்து இருந்தேன்.

                                 இருவரின் முகத்திலும் சிரிப்பு.கடைசியாக சிரித்து கொள்.

                                  யாரும் சந்தேகபடலையா.
                               
                                  ச்சே ச்சே

                                   என்ன சந்தேகம். ஒன்னும் புரியல.பீரோவுக்கு பக்கத்தில் ஒரு செய்தித்தாள். அதிர்ச்சியில் உறைந்தேன்..
                               
                                  பிரபல தொழில் அதிபர் கார் விபத்தில் பலி 


                                                கோபால் என்கிற 31 வயது தொழில் அதிபர் ஏர்போட்டிற்கு செல்லும் வழியில் எதிரே வந்த தனியார் பேருந்தில்  மோதி இறந்தார்.கார் டிரைவர், கோபால் இருவரும் சம்பவ இடத்திலேயே ப......லி....  


MORAL : EXECUTION IS IMPORTANT THAN PLANNING 

Monday, 2 January 2012

காட்சிபிழை


ROOM NO.36 சாப்பாடு வெளிய இருக்கு எடுத்துகோங்க.

 வாழ்க்கை முற்றிலும் வெறுத்திருந்தது அவள் இங்கு வந்து சேரும் முன். நான் யார் என்று உள்ளே ஒரு கேள்வி சில நாட்களாய் மட்டும் மனதில் ஒலிக்கின்றது.
       
                       புது புது அர்த்தங்கள் படத்துல வர்ற கீதா மாதிரி ஒரு மனைவி.ஏனோ பிடிக்கல ரஹ்மான் மாதிரி எனக்கும்.ஓடி வந்துட்டேன் torture  தாங்க முடியாம...

அவள் இங்கு என்று வந்தாள் என்று தெரியாது. எனக்காகவே வந்தாள் என்பது போல ஒரு உணர்வு.I LOVE HER THE MOST, கல்யாணம் ஆகாத ஒருவனுக்கு மனதில் தோன்றும்  கனவு போல் இருந்தாள்.
     
நீங்க அழகா இருக்கீங்க.. சிரித்துகொண்டே சென்றுவிடுவாள்.
   
டாக்டர் எப்ப வருவார். கீழ் floorல இருக்கார். என்றும் எதையோ பறிகொடுத்து போல் இருப்பாள். Many times she makes me feel that she has special interest in me.


                         எனக்கு எது எது பிடிக்கும் என்று கேட்டு அறிந்துகொண்டு எனக்கு கல்யாணம் செய்து வைத்தனர் போலும். over-possession harms us at much occasions.அவள் செய்யும் ஒவ்வொரு விசயமும் செயற்கைதனங்கள் மட்டுமே மேலோங்கி இருக்கும்.அவள் பிடித்தாலும் பிடிக்கவில்லை ரகம்.

                          அன்று அமைதியும் இனிமையாய் பட்டது.கொடைகானல் சாலையில் ஐபேட் உடன் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தேன்..cigarette lighter வாடை கூட வாசம் தான்.நினைவுகளை அழித்துக்கொண்டு இருந்தேன் . காதில் ஒரு கூக்குரல் வேறொன்றும் நினைவில் இல்லை.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்துவிட்டேன்.யாரும் தெரியாத ஒரு ஊர்.இருந்தும் மனதில் ஒருவித மகிழ்ச்சி.

இவள் பெயர் நித்யா. இவள் மட்டுமே உலகம் எனக்கு. அவளிடம் காதலை சொல்ல முடிவெடுத்தேன்..

உங்களோடு  இருக்க ஆசை
           
இப்படியே பைத்தியமாவா??. அவள் கேள்வி என்னை சற்று கோபப்பட வைத்தது.ஆனால் கோபம் வரவில்லை. சிரித்தேன்.... சிரித்தாள்...


அவளுக்கென்று யாரும் இல்லை.என்னை போல் அவளும் தனிமை விளக்கு.சில நாட்கள் அவளோடு இருந்தேன்.


We joined together not just by hands... 


ஏன் இவ்வாறு என்பது போல் ஒரு கனவு.நினைவு படுத்தி பார்க்கையில் அனைத்தும் நிஜம்.அழகான மனைவி,முகம் ஞாபகம் இல்லை.ஓடி வந்து இருக்கிறேன் என்கிறது மனம்..ஏன் என்று தெரியவில்லை??.. மீண்டும் கேள்வி பதில்கள் மனதில்?.
     
ஏன் வீட்டை விட்டு வந்தேன்?
                        
அவள் என்ன செய்தாள்?
                          
If taking care is something bad.what else has the nurse did for me?? 


                         
மனைவியின் அன்பு தவறில்லை என்று தோன்றியது. மண்டைக்குள் ஒளிச்சிதறல்கள்.விண் விண் என்று தேனீ ரீங்கரமிடுமா? எனக்கு அப்படி தான் இருந்தது.நான்கு மாதமிருக்குமா? இல்லை,இல்ல்லை இல்ல்ல்லாஆஇ...

                       
ஆறு மாதங்கள்...சீட் எரிந்து போச்சா? ச்சே. நான் எப்படி பிழைத்தேன்? ஏன் அவள் வந்து என்னை பார்க்க வில்லை? நான் கொடுமைக்காரனா? இது கனவா?கனவுதான்.கனவேதான்..முழிக்க வேண்டும் தூக்கத்தில் இருந்து முழிக்க வேண்டும்......இல்லை தூக்கமில்லை.இவளை என்ன செய்ய?

                         
ATM கார்டு இருந்தது.நிறைய பணம் இருந்தது.காரே வாங்கலாம்.கார் வாங்கும் அளவுக்கு பணம். கார் வேண்டாம். டாக்ஸி பிடிக்கலாம். உடனே மனைவியை பார்க்க வேண்டும். எந்த ஊர்? அந்த ஊர்தான்.ஆம்.அதே ஊர்தான்.

                       
இவள் நினைவுகளை வைத்து கொண்டு என் மனைவியுடன் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? இவளை வைத்துகொண்டு எப்படி நிம்மதியாய் வாழ முடியும்.இவளுக்கு நான் மட்டுமே இருக்கிறேன் என்று நினைக்கும்போது இப்பொழுது மகிழ்ச்சியாய் உள்ளது.ஆனால் இவள் இருநதால் எனக்கு மகிழ்ச்சி இருக்காது.

மாட்ட மாட்டேன். நிச்சயம் மாட்ட மாட்டேன்.நான் யார் ஒரு patient . அவள் ஒரு nurse .எங்களுக்குள் ஒன்றும் இல்லை.இருந்திருந்தால் என்ன.நான் உளறபோவதில்லை. அவள் உளற இருக்கபோவதில்லை.

தேவை ஒரு கயிறு..

இல்லை

இல்லை

கழுத்து நெரிந்து மாட்டிகொள்வேன்.

கத்தி??

ஏன் இவ்வளவு யோசிக்கிறேன் போகிற வழியில் தள்ளிவிட்டால் இறையாகி(எழுத்து பிழை அல்ல ) விடுவாள். பின்பு ஜூனியர் விகடனில் மலை அடிவாரத்தில் பெண் பிணம் கொலையாளி யார்?.


யாருக்கு தெரியும் நானில்லை. பக்கத்தை திருப்புவது போல் அவள் வாழ்க்கையும் மறைந்துவிடும்;மறந்தும் விடும்.

பிகில் அடித்துக்கொண்டு இருந்தேன்.மனைவி முகம் மறந்து விட்டது.இதோ அவளுக்காக நான். நான் மட்டுமே. நித்யாவா?? யார் அது??. ஆம் இப்போது அவள் அது தான்..
                                 ________________________________________
பி.கு: POLICE துப்பு துலக்கியது. அவள் பெயர் நித்யா அல்ல வந்தனா என்று கண்டுபிடித்தது.வந்தனா கொடைகானல் மருத்துவமனையில் யாருக்கோ nurse  ஆக இருந்து இருக்கிறாள்.

HURRAY என் மனைவி பெயர் வந்தனா என்று கத்தி கொண்டு இருந்தேன் .....







Monday, 26 December 2011

சினிமா

                                       அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
               ரொம்ப நாளுக்கு அப்புறம் எழுதறேன்... பிடிச்ச விசயத்துக்கு பயப்பட கூடாது.. பயப்படற விசயம் பிடிச்சாலும் கொஞ்சம் யோசிக்க தோணுது..  அண்ணா சொன்ன மாதிரி  மக்களின்  ரசனையை  புரிஞ்சுகறது ரொம்ப கஷ்டம் ..
சினிமா சினிமா சினிமா . சின்ன வார்த்த அர்த்தம் புரியறதுக்குள்ள ஆயுசு முடிஞ்சுரும் போல.
             விக்ரமன்னு ஒருத்தர் இருந்தாரு . ஒரே கதைக்கு டிங்கரிங் பைண்டிங் பண்ணாம கதை பெற மட்டும் மாத்தி நூறு நாளு ஓட்டினார். ஷங்கர் டிங்கரிங் பைண்டிங் பண்ணி ஓட்டினாரு. ஏனோ ரொம்ப வருஷம் பொறுத்த பயபுள்ளைக 'உன்னை நினைத்து'ல கண்டுபிடிச்சுடாங்க.. ஷங்கர் மட்டும் தப்பிச்சுட்டார்.ஊரரசுனு ஒருத்தர் இருக்காரு. ரெண்டே படத்துல இவரையும் கண்டு பிடிச்சுடாங்க.
         
               அட இவுங்கலேல்லாம் பார்த்து ஒன்னும் பயபடல. மக்களை நினச்சா தான் பயமே. குங்கம பூவும் கொஞ்சும் புறாவும்னு ஒரு படம். ஹீரோ ஹீரோயின் பரவால ரகம்.கதையும் ஓகே. படம் சுத்தமா ஓடல. மைனானு ஒரு படம் கதை முனாடி சொன்ன படாது மாதிரி தான் ஆரம்பிச்சுச்சு. ரெண்டு படத்துலயும் ரெண்டு பேரும் அவுட்டு.மைனால ஹீரோவும் சகிகல. இந்த படம் என்னடானா பயங்கரமா ஓடுது.
               ஊழல பத்தி ஷங்கர் இல்லாட்டி முருகதாஸ் சொன்ன பாக்குற மக்கள் சுசிகணேசன் சொன்ன அப்ப ஏதுக்கள(ஒரு வேலை இது தான் முக ராசியோ)..
              விஜய் 50  பேர அடிக்கறாரு. கார்த்தி ௦ 200 பேர அடிக்கறாரு. அட நம்ம தென்னிந்திய ப்ரூஸ் லீ தனுஷ் அடிக்கறாரு. விக்ரம் அந்நியன்ல அடிச்சப்ப ஏத்துக்கிட்ட நாம் ராஜபாட்டைல ஏத்துக்கல. ஒரு மண்ணும் விளங்கல...
              ஒருத்தன் என்னடான்னா சியான் விக்ரம் மாதிரி இங்கலிபீசுல யாரோ சியான் பென்னு ஒருத்தர் விக்ரம் நடிச்சத காபி அடிச்சத சொல்றாரு... இவன  கூட மன்னிச்சுரலாம் .. ஒரு கிறுக்கன் பந்தயம் படம் ஹிட்டுன்னு பெட்டு கட்டுறான் . கேட்டா அதுல தலைவர் விசய்படம் வருமாம். அட போங்கடா கோயாங்கோ