Pages

Monday, 10 September 2012

என் கனவின் நிழல்

மெரூன் நிற சேலை அணிந்திருந்தார்.நேற்றைய கனவிலும் இதே சேலையைத் தான் அணிந்திருந்தாரா? ச்சே இதே சேலையாக இருக்க முடியாது.ஆனால் இதனை போன்றதொரு சேலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மெரூனா? சிகப்பா? என் பெரியம்மாவின் முகம் கார்டூனிஸ்ட்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. கார்டூனிஸ்ட்களுக்கு  அல்வா தான் வேண்டுமா? இட்லி மிளாகாய் பொடி சட்னி என அவரவர் பாடு.  பெரியம்மாவிற்கு கருணாநிதி மூக்கு. மன்மோகன்சிங்கின் நெற்றி. இது போதாதா? மூவரையுமே எனக்கு பிடிக்காது. இல்லையில்லை, நால்வரையுமே எனக்கு பிடிக்காது.பெரியம்மாவில் 'அம்மா' ஒளிந்திருப்பதை கவனிக்க. ஆனால் நேற்றைய கனவில் என்னிடம் இன்முகத்தோடு பேசினார். நான் கனவில் ஆச்சர்யப்பட்டது கனவுபோல் அல்லாது துல்லியமாக நினைவில் இருப்பது மற்றொரு பேராச்சர்யம். அதுவே என் பயமும்.

அடே கண்ணா! என்கிறார் பெரியம்மா.

அடேயில் அத்தனை குழைவு. என் கனவிலும் இப்படித் தான் அழைத்தார். நகை வாங்கவேண்டும் என்றார்.துணைக்கு வாடா என்றார். எப்போதும் மறுத்துவிடும் நான் ஏனோ சரியென்று தலையாட்டிக் கொண்டே அவருடன் செல்கிறேன். நகையெல்லாம் வாங்கித் திரும்பும் வழியில் மின்சார சீர்குலைவு .என் அலைபேசி வெளிச்சமே எனக்கும் நான் வெறுக்கும் பெரியம்மவிற்கும் உற்ற துணை என்ற நிலையில் நாங்கள் உட்புகுந்து வெளியேற வேண்டிய சிறு சந்தில் நம் சொந்த நிழல்களே எழுந்து பேயாடி அச்சுறுத்தும் இருட்டில் நிழல் உருவம் ஒன்று அசைந்தாடி வருவதை கண்ட போது என் உயிர் என் கூட்டில் இல்லை.

நிஜத்தில் எனக்கு வேர்த்திருக்கிறது என்று கனவிலும் எனக்கு புரிகிறது. ஆனால் நான் கனவு கண்டுகொண்டு தான் இருந்தேன். குழப்புகிறேனா? நானே இன்னும் தெளிவடையவில்லை. அந்த இருட்டு உருவம் எங்களை நோக்கி முன்னேறி என் பெரியம்மாவிடம் இருந்த நகைப் பைகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டது.நான் அசட்டுத் தனமாக அலைபேசியின் வெளிச்சத்தை அவன் முகத்தில் பாய்ச்ச யத்தனிக்க என் பதிமூன்றாயிர ரூபாய் மதிப்புள்ள அலைபேசியையும் பிடுங்கிக் கொண்டது அப்பேயுருவம்.போச்சு! நான் கனவிலிருந்து விழித்துக் கொண்டேன்.

இப்போது பயமாக உள்ளது.இருக்காதா பின்னே! இதோ இப்போது கனவில் நடந்தது போலவே நகை வாங்கி வருவதற்குள் இருட்டி விட்டது. ஐயோ! இதோ மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது.கனவை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறேனா? அதே போலொரு இருட்டு.சந்து.இந்த இடத்தில் ஒன்றை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். நான் கொஞ்சம் புத்திசாலி. நகைக்க வேண்டாம்.பெரியம்மாவின் நகை போனால் போகட்டும்.என் அலைபேசி போகலாமா? இப்படியெல்லாம் ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என முன்பே யூகித்து தான் எனது அலைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.பெரியம்மா இப்போது அலறுகிறாள். 'யாரோ வரப்ல இருக்கே!'

யாரும் காணோமே

நல்லா பாருடா

ஆம். ஒரு இருட்டு உருவம் எங்களை நோக்கி முன்னேறியது. இதென்ன விசித்திரமாக இருக்கிறது? அது என்னை நோக்கித் தான் வருகிறது. கனவு கண் போன்றதா? தலைகீழாக உள்வாங்கப்பட்டு நேராவதா? 'சார்வாள், பை என் பெரியம்மாகிட்ட இருக்கிறது.என்னாண்ட இல்ல' என்று அறிவுறுத்தலாமா வேண்டாமா? அவ்வுருவம் என்னை நெருங்கி என் தோளில் கை வைத்தது. பின்பு சொன்னது

'தம்பி, நீ உன் செல்போன வீட்லய வச்சுட்டு வந்துடுவேன்னு நேத்தே எனக்கு தெரியும். உனக்கு மட்டுந்தான் உலகத்துல தூங்குற வழக்கம்னு நினைப்பா? எங்களுக்கும் கனவு வரும்!'


Monday, 23 July 2012

சமூகத்தின் கை

நான் என் கடையில் படு வேகமாக ஜூனியர் விகடன் படித்துக் கொண்டிருந்தேன்.இந்த நேரத்திற்கு அந்த வயதானவர் வருவார் என தெரியும்.அவரின் மீதுள்ள ஒரே எரிச்சல் நாம் என்ன வேலை செய்தாலும்,அதனை பற்றி கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டே இருப்பார்.

சில நாட்கள் முன்பு  அவர் வந்தபோது வேண்டுமென்றே அலைபேசியில் முனைப்பாய் இருப்பதை போன்று பாவனை செய்து தப்பித்தேன் . அன்றிலிருந்து முன்பு போல சகஜமாக என்னிடம்  பேசுவதில்லை. நிம்மதியாக இருந்தது. அவருக்கு அம்னீஷியா இருக்க வேண்டும்.இன்று இப்போது என்னை நோக்கி புன்னகைத்த படியே வருகிறார். நமக்கு பிடிக்காதவர்கள் நம்மை பார்த்து புன்னகைப்பதை போன்று எரிச்சல் உண்டாக்கும் விஷயம் வேறில்லை.

தம்பி எப்படி இருக்கீங்க? பாத்து ஒரு வாரம் ஆச்சு?

ஒரு வாரம் தான் சார் ஆச்சு.

ஏன் கார்த்திக் அங்க இருக்குற KIDS SCHOOL உங்க சித்தி தான நடத்துறாங்க ?

ஆமா சார் ஏன்?

இல்லை என் பேத்தி அங்க தான் படிக்குது.



என் பையனும் , மருமகளும் ஆபீஸ் போகறதால 2 வயசு பாப்பவ அங்க சேத்துட்டாங்க.

அங்க நிறைய குழந்தைக இருக்கும் சார்.அவளுக்கும் போர் அடிக்காது

ஆமாம் பா.30 வருசத்துக்கு முந்தி உங்க ஆச்சி இருந்த ஊர்ல தான் நாங்களும் இருந்தோம் .ஆச்சிகூட ரெண்டு வருஷத்துக்கு முந்தி இறந்துட்டாங்கள்ள ??

4 வருஷம் ஆச்சு  சார்

நாங்கள் எல்லாம் அந்த ஊர்ல கார்பரேசன் தொழிலாளிக . இரும்பு கவசம் மாதிரி ஒரு கை போட்டு இருப்போம்.அதுல தான் அந்த இடத்துல  இருக்குற எல்லா மனித கழிவுகளையும் எடுத்துட்டு போகணும்.

இந்த மனிதரோடு எப்படி இத்தனை நாள் பேசினோம் என்று எனக்குள் தோன்ற ஆரம்பித்தது.அவரின் மீது ஏதோ ஒரு அருவருப்பு மெல்ல தோன்றி படர ஆரம்பித்தது. அதன் முரணியக்கம் போல என் ஆழம், அவரை வெறுப்பதை விரும்புகிறதா?

ஓ.அப்படீங்களா?. சரி சார் .என்ன வேணும்.நான் கடைய பூட்டிட்டு போகணும்.

நான் சொல்வதை அவர் சட்டை செய்துகொள்வதாக தெரியவில்லை.

அன்னிக்கு தீபாவளிக்கு மொத நாளு. எல்லோரும் நோம்பிக்காசு வாங்க உங்க வீட்டு முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தோம் .உங்க ஆச்சி ரொம்ப கம்மியா கொடுத்தாங்க.என் பொஞ்சாதி ஏதோ வேகத்துல என்னங்கம்மா இது , இத வச்சு என்ன பண்றது ?. இத கொடுக்கறதுக்கு கொடுக்காமையே இருக்கலாம்னு  வார்த்தைய விட்டுட்டா..

உங்க பாட்டி உடனே ' பீ அல்ற ஜாதிக்காரி உனக்கு இவ்ளோ திமிரானு கேட்டாங்க ?'

எத்தனை ஆண்டுகள் கடந்திருக்கும்? ஆனால் இன்றும் இதை நினைக்கையில் அவர் கண்களில் நீர் தேங்கி இருந்தது. எனக்கு ஏனோ வருத்தமாக இருந்தது. அந்த 80 வயது முதியவர் இதுவரை அப்படி பேசியதில்லை.

சார் அதெல்லாம் அப்ப சார். இப்ப யார் அப்படி இருக்காங்க ?. காலம் நிறைய மாறிடுச்சு. அதெல்லாம் விடுங்க சார்  .

அதுனால இல்ல கார்த்தி.நேத்து உங்க ஸ்கூல்ல எங்க பாப்பா ஆய் போயிருச்சு. உங்க சித்தி தான் கழுவிவுட்டாங்க.

அதுனால என்ன சார் ?. இதுல என்ன இருக்கு.

இல்லப்பா  உங்க சித்தி அது ஓனரா  இருந்தாலும் அவங்க பண்ணினது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.

சரி சார் அதுனால என்ன?

இல்ல இப்ப யாருப்பா மலம் அள்ளுற  ஜாதி.

நான் திரும்பி அவரை பார்க்கும் போது அவர் கண்களில் அந்த நீர் இல்லை.30 வருடமாக மனதில் தேக்கிவைத்த ஒரு வார்த்தை இன்று அக்னிக்குழம்பாய்  வெளியேறி இருக்கிறது.

அவர் முகத்தில் ஏதோ ஒரு பெருமிதம்.

இந்த சமூகத்தின்  கை மிகவும் அபாயகரமானது. அது ஒரு நாள் எல்லோரையும் அறையும். இன்று என்னை அறைந்தது போல் .

Thursday, 21 June 2012

சாட்சி

இரவு மணி இரண்டு இருக்கும்.

கார்த்திக் சற்றும் பயமில்லாமல் அந்த ஊரின் புனிதமேரி நினைவாலயத்தின் உள்ளே சென்றுகொண்டு இருந்தான்.அவன் அலைபேசியின் வெளிச்ச உதவியோடு கல்லறைகளை கடந்துகொண்டு இருந்தான்.தான் தேடிவந்ததை கண்டது போல் ஒருநிமிடம் ஒரு கல்லறையை வெறித்துப் பார்த்தான்.

                                                           கரோலின் பெர்னாண்டஸ் 
                                          தோற்றம் 22.06.1986 மறைவு 26.12.2010 .

அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தவன்  சட்டென அங்கிருந்த ஒரு கோடாலியை எடுத்து கல்லறையை உடைக்கத் தொடங்கினான்.

உள்ளே அவளின் சருகு போன்றதொரு கூடு  தான் இருந்தது.மூக்கின் துவாரம் வழியாக ஒரு புழு ஊர்ந்து கொண்டு இருந்தது.
அவனது முகம் வியர்த்துவிட்டது.சட்டென அந்த உடலை எடுத்து தன் முகத்தின் அருகே கொண்டுவந்தான்.தன் மொபைலில் ஒரு புகைப்படம் எடுப்பதற்குள் எங்கிருந்தோ வந்த கூட்டம் அவனை சுற்றிவளைத்துவிட்டது.

காவல்நிலையம்.....

..................
சற்று சோர்வடைந்த குரலுடன் கார்த்திக் பேச ஆரம்பித்தான்.

நானும் கரோலினும் லவர்ஸ் சார்.
.............................
............................
அவன் கதையைக்கேட்டு எல்லோரும் சோகமுகத்தோடு இருந்தனர்.

ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டு இருக்கும் பொழுது வேறொரு கார் நேரெதிரே வர ;இவன் தன் காரை திருப்பமுயன்று அது ஒரு மரத்தின் மீது மோதி அவள் இறந்துவிட்டதாகவும் கூறினான்.

இறந்தாலும் காதலி காதலிதானே. அவள் பினமானாலும் ,சில வருடத்தில் மக்கிவிட்டாலும் இவன் காதல் போயத்துவிடுமா என்ன?.

இவனது முகவரியைக்குறித்துக்கொண்டு  காவல்துறையினர்  இவனைவிடுவித்தனர்.

காரில் தன் நண்பனோடு பயணிக்கத்தொடங்கினான்.

டேய் என்ன சொல்லிடா தப்பிச்ச . கார் ஓட்டிக்கொண்டே பதில் எதிர்பார்த்து இருந்தான் ஜெரோம்.

பதிலெல்லாம் இருக்கட்டும்.பெட் வச்ச 5000 ரூபாயை எடு. என்னமோ ஜீசஸ் , பிசாசுனெல்லாம் பயம் காட்டின.எப்புடி.

கண்டிப்பா காச தர்றேன்.என்னடா சொன்ன?.

லைட்டா மன்மதன் அம்பு கதைய உல்டாபண்ணி சொன்னேன். எல்லோரும் நம்பீட்டாங்க.

சரி அந்த பொண்ணு.

கரோளின்க்ரா பேரயே அங்க தான் பார்த்தேன். அட போட பொணம் என்ன வந்து சாட்சியா சொல்ல போகுது.

இருவரும் சிரித்தனர்.

மறுநாள் காலை ...

காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உடல் நசுங்கி பலி.

இது விபத்து அல்ல கரோலின் தான் இவர்களை கொன்றாள் என்று இந்த இரு பிணமும் சாட்சியா சொல்ல போகிறார்கள்

நோட்டு:புள்ளி மட்டும் வைத்து இருக்கும் இடங்களில் நீங்களாகவே
ஒரு காதல் கதையை முடிவு செய்துகொள்ளவும்

Friday, 4 May 2012

காதல் அழிவதில்லை

கோம்ஸ் ஹெட்செட்டில்  காதை பொருத்திக்கொண்டு இருந்தாள்.கோமதி  கோம்ஸ் ஆகி இருந்தாள் .காரணம் கார்த்திக் . இருவரும் ஒரே ஊர்.காதலர்கள் இனி இவர்தம் உரையாடல்.

என் கண்மணி உன் காதலன் எனை பார்த்ததும்

என்ன டா பாட்டெல்லாம் பாடுற.

சும்மா தான்.சரி என்ன பண்ற

இன்னிக்கு பாட்டி ஊருக்கு போறேன்பா. நாளைக்கு ஈவனிங்  வந்துருவேன். நீ என்ன பண்ற

AS USUAL RIDING BIKE . பஸ் கெளம்பிருச்சா

எத்தன வாட்டி சொல்றது.போன கட் பண்ணு.

சரி சரி வண்டிய ஆப் பண்ணிட்டேன்.

கோமதி முன் சீட்டில் உக்கார்ந்து இருந்தாள்.சட்டென அவள் பார்வையில் கார்த்திக் தென்பட்டான்.ஹெட்செட் மாட்டிக்கொண்டு பேசன் பைக்கில் சென்றுகொண்டு இருந்தான் . அவள் முறைத்தவாறு ,

நீ பொய் சொல்றத விடவே மாட்டியா

இப்ப என்ன ஆச்சு ஒய் பொலம்பிங்

நக்கலா .நீ பைக் ஓட்டிட்டு தான இருக்க

சத்தியமா இல்ல பா.

உன் பின்னாடி ஒரு பஸ் வருது பாரு.

என்ன வெலயாடுரியா..

அதுல தான் நான் வர்ரேன்.என்கிட்டயே பொய் சொல்ற.போ உன்கிட்ட பேசமாட்டேன்

பஸ் டிரைவர் ஹாரனை சப்தமாய் அழுத்த கார்த்திக் பேசியது அவளுக்கு கேட்கவில்லை.சாடாரென ஒரு லாரி இடப்பக்கமிருந்து வந்து கார்த்திக் ஓட்டிய பைக் ..........

கார்த்திக்கின் மூளை சிதற ; அவன் தலை இல்லாமல் துடித்துக்கொண்டு இருந்து இறந்தான்.

அதை பார்த்த அடுத்த நொடி கோமதி பேருந்தில் அதை பார்த்தவாறு இதயம் அடைத்து இறந்தாள்.

காதல் அழிவதில்லை.

If every time I thought of you, a star fell.. Well, then the sky would be empty ..

To be in love is merely to be in a state of perceptual anesthesia


உண்மை காதல் இப்படித்தான்.அடுத்த கணம் உயிர் பிரிந்துவிடும்.

சரி

சரி கதைக்கு வருவோம்

என் கண்மணி உன் காதலன் எனை பார்த்ததும்

கோமதி பதில் சொல்ல போறியா இல்லையா.ஒரு நிமிஷமா நீ ஒன்னுமே பேசல .சத்தியமா நான் பைக்க ஆப் பண்ணிட்டேன்.இந்த ரோட்டுல பஸ்செல்லாம் வராது பா.

பேக்கு பொண்ணு கோமதி பேக்ல பாத்து ஏதோ ஒரு பேக்க லவ்வர்னு நினச்சு உயிரை விட்டுடுச்சு.


Wednesday, 2 May 2012

கைதியின் டைரி

பெங்களூருவின் பாரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் வருக வருகவென நிரபராதிகளையும்  அன்போடு தன் பக்கம் இழுத்தவண்ணம் இருந்தது. இந்த பத்திரிகை நிருபர் இங்கு வருவது இருபத்தி ஆறாவது முறை.தினமும்  தண்டிக்கப்பட்ட  ஒவ்வொருவரும் தான் ஏன் சிறைக்கு வந்தனர் என்பதைப்பற்றி சொல்ல வேண்டுமாம்.

இந்த நாள் என்னுடையது.

இங்கு நான் அடைக்கப்பட்டு இருப்பதற்குரிய காரணம் என்னவெனில்;

சும்மா பேச்சு வழக்கில சொல்லுங்க.நான் எழுதிக்கறேன்.

சரி அப்புறம் உங்க இஷ்டம்.
நான் என்ன பத்தி சொல்றதுக்கு முன்னாடி என் பக்கத்து ரூம்ல இருக்குற அபுஜ்மரியா பத்தி சொல்லணும்.

நீங்க உங்கள பத்தி மட்டும் பேசலாம்.அவரென்ன ஊமையா??

ஊமை இல்லை.ஆனால் ஊமை ஆக்கப்பட்டவர்.

சட்டீஸ்கர் மாநிலத்துல ஒரு கிராமத்து  மக்களுக்காக போராடியவர். அந்த மாநிலம் இந்த மனுசன மதிச்சு விருதெல்லாம் கொடுத்துச்சாம். இதுதாங்க நடந்தது.

அங்க இருக்குற ஒரு பழங்குடி அனாத  பெண்ணை மூணு பெரிய இடத்து நாய்க கற்பழிக்கறாங்க. நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேசனுக்கு போன அந்த பொண்ணுக்கு அங்கயும் வெறியாட்டம் தான் நடந்து இருக்கு.விஷயம் இந்த அபுஜ்மரியாவுக்கு போக அவர் எவ்வளவோ போராடினாராம்.

கடைசியா இவரையும்,அந்த பொண்ணையும்  மாவோயிஸ்ட் தீவிரவாதின்னு  முத்திர குத்தி இங்க அடைச்சுவச்சுருக்காங்க.

எந்த மாநிலம் இவருக்கு அவார்ட் கொடுத்துச்சோ அதே மாநிலம் இவர தீவிரவாதின்னு சொல்லுது.நான் இங்க வந்து ரெண்டு மாசம் ஆவுது.இதுவரைக்கும் ஒரு வார்த்தை பேசல.

சில சமயம் மனுஷன் செத்துட்டார்ன்னு நினைக்குறப்ப கண்ணுல லேசா கண்ணீர் வரும்.

சரி சரி டைம் ஆகுது உங்கள பத்தி சொல்லுங்க.

அந்த பெரிய மனுசனோட பாக்குறப்ப நான் பண்ணினது எல்லாம் தப்பு தான். என் வக்கீலுக்கு இது வரைக்கும் ரெண்டு லச்ச ரூபா செலவு அழுது இருப்பேன். பன்னிபய வெளிய எடுக்க முடியாதுன்னு கைவிருச்சுட்டான்.தப்பு பண்ணினது ஏதோ  உண்மைதாங்க.யாருதாங்க தப்பு பண்ணல.ஏன் ஜட்ஜ் தப்பே பண்ணி இருக்க மாட்டனாக்கும்.சொல்லுங்க

தப்பு பண்ணீட்டு வெட்டிவசனம் பேசாதே. தப்பு பண்றப்ப யோசிச்சுருக்கணும்.

அதேதாங்க.ரெண்டு லச்ச ரூபா செலவு பண்ணி உண்மையெல்லாம் சொல்லி படிச்ச வக்கீலாலையே ஒன்னும் புடுங்க முடியல. உன்கிட்ட சொல்லி நீ என்னத்த புடுங்க போற.பேப்பர கிழிச்சு போட்டுட்டு கெளம்பற வழியப்பாரு..

Thursday, 12 April 2012

ஆண்டிடோட் (ANTIDOTE)

அவள் எனக்கு நன்கு பரிச்சயமானவள் தான், கல்லூரி நாட்களில் .

கார்பன் உருண்டைகள் நாட்டியம் ஆடிக்கொண்டு இருக்கும்,அவளின் இமைகளாய்.அதற்காகவே அவளை கல்யாணம் செய்து கொள்ளலாம்.அவள் என்னை ஈர்த்த விஷயங்களில் அவளது தீர்க்கமான பேச்சும்  ஒன்று.எதையும் சட்டைசெய்துகொள்ள மாட்டாள்.அவளோடு தர்க்கம் செய்த நாட்கள் எண்ணற்றவை.

அப்போது அரசு மருத்துவக்கல்லூரியின் இறுதி நாட்களில்  இருந்தோம் .ஒரு தனியார் பேருந்தில் சில நண்பர்களோடு திருச்சி  செல்ல வேண்டியிருந்தது.

அன்று என் காதலை சொல்ல திட்டமிட்டு இருந்தேன். நான் சொல்வதற்கு முன்பு அவள் அக்காரியத்தை செய்வாள் என என்னிடம் முன்னரே கூறியிருந்தால் நான் பயணப்பட்டு இருக்கவே மாட்டேன்.

பயணி ஒருவர் தள்ளாடிக்கொண்டு நின்றிருந்தார்.இவர் குடித்துவிட்டு பயணம் செய்ததை அனைவரும் வெறுப்பாய் பார்த்தோமே தவிர யாரும் அவரை வண்டியில் இருந்து கீழ் இறக்கவில்லை.

நானும் அவளும் சிரித்து பேசிக்கொண்டு இருக்க;அவர் அவளை ஆட்டு இறைச்சிக்காக எந்நேரமும் விழித்துக்கொண்டு இருக்கும் நாய் போல் பார்த்துக்கொண்டு இருந்தான்..

அவள் அவரை சட்டைசெய்ததாக தோன்றவில்லை. மாறாக, அவள் பேச்சிலும்;நான் அவளை கவனிக்கவில்லை என்பதில் மட்டுமே இருந்தது.

காதல பத்தி என்ன நினைக்குறீங்க??

ஹ்ம்ம் நீயுமா ??. உனக்கு  யார் மேல? என்ன திடீர்னு?

சும்மா சொல்லுங்க..

LOVE IS A FOOLISHMAN JOB . எந்த மிருகமாவது லவ் பண்ணுதா?. எல்லாம் நேரடியா செக்ஸ்னு ஆரம்பிச்சுரும். இந்த மனுச மிருகம் மட்டும் தான் இப்படி
எல்லாத்துக்கும் டிராமா பண்ணிட்டு இருக்கும்.

அவள் இப்படி சர்வ சாதாரணமாய் செக்ஸ் என சொல்லுவாள் என நான் எதிர்ப்பாக்கவில்லை.ஆனால் அவள் தாண்டவம் ஆடியதை நான் காணவேண்டும் என்பதற்காக நேரம் வேகமாய் சுழன்றுகொண்டு இருந்தது.

அந்த தள்ளாட்டலும் தன் பணியை செவ்வனே தொடர்ந்து கொண்டு இருந்தான்.திடீரென அவளது இடையில் கிள்ளினான்.

அதற்கு முன்பு வரை நான் அவளை  அவளாகாவே பார்த்து இருந்தேன். இவள்போல் அன்று தான் பார்த்தேன்.இதற்கு பின்பு அவளிடம் நான் காதல் பற்றி பேசவேயில்லை.

துர்க்கை தன் விழிகளை கோரமாக்கினாள் .அவளின் தேய்ந்துபோன காலணி இன்று அதிவேகமாய் தேய்ந்தது.

பேருந்து நிறுத்தப்பட்டது.

உன் அக்கா இடுப்ப கிள்ள வேண்டியதுதான.அடியின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருந்தது.

ராதிகா எல்லோரும் பாக்கறாங்க.

பாக்கட்டும்; அப்பயாவது இந்த மாதிரி நாய்களுக்கு புத்தி வரட்டும்

பஸ் ஹாரனை ட்ரைவர் ஒருமுறை அழுத்தியது தான் மிச்சம்;இவளின் பார்வையிலேயே டிரைவர் வண்டியின் என்ஜினை அணைத்துவிட்டார்.

அடி இன்னும் குறையவில்லை.அவள் கண்ணில் இருந்து ஒரு துளி நீர்கூட இல்லை. ஆனால் அப்படியொரு  கோபம்.

தாண்டவம் ஒருவழியாய் முடிந்து;பேருந்து கிளம்பியது.

இவனுகளுக்கு எல்லாம் ஆண்டிடோட் கொடுத்துட்டு அடிக்கணும்.அப்ப தான் உரைக்கும்.

ஹ்ம்ம்

The depressed nervous system should be made active. bastards.


சில நேரம் நிசப்தம் எங்களை சூழ்ந்து இருந்தது.

சரி நம்ம என்ன பேசிக்கிட்டு இருந்தோம். ஹ்ம்ம் யார லவ் பண்ற சொல்லவேயில்ல .

நாகர்கோவில் வந்துருச்சு.இறங்கலாம் 

அவளிடம் அதற்கு பின்னர் நான் காதல் பற்றி பேசக்கூட தயங்கினேன்.

நான்கு வருடம் என்னுள் கரைந்துபோனது.

நான் கோவையில் ஒரு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டு இருந்தேன்.

ஹேய் கார்த்திக் எப்படி இருக்க ??. 

கார்த்திக்கை நான் பார்த்து இரண்டு வருடம் ஆகிருந்தது.கடைசியாய் அவனை   MD நுழைவு தேர்வு அன்று பார்த்த ஞாபகம் .ராதிகாவின் ஊர்க்காரன் என்பதால் இவனை ஞாபகம் இருந்தது.

அவன் பதிலளிக்காமல் இருக்க ,நான் தவறான நபரை கார்த்திக் என அழைத்தது போல் தோன்றியது.

சாரி ......

நீங்க.. ராமநாதன் தான ..எப்படி சார் இருக்குக்கீங்க?? ஒரு ரெண்டு வருஷம் இருக்குமா நம்ம பார்த்து??.

ராதிகாவைப்பற்றி கேட்க நினைத்தேன்.

அதற்காக அவரிடம் பேச்சை தொடர்ந்தேன்.

ஆம் ராதிகாவிடம் நான் தொடர்பு அறுபட்டு இருந்தேன். நான்கு ஆண்டுகள்..

கல்யாணம்???

பேச்சுக்கள் நீள...............

சார்,ராதிகாக்கு கல்யாணம் ஆயிருச்சா??

அத ஏன் சார் கேக்குறீங்க?? 

என் மனம் பதபதைத்தது.

அவ வீட்டவிட்டு ஓடிட்டா சார்..

கார்த்திக்,ARE YOU SURE ??

ஆமா சார் . அவ தான்.போயும் போயும் ஒரு டீக்கடைக்காரன்.

என் குழப்பங்கள் அதிகரித்தன.

சார் MMC ராதிகா தான ?

அட ஆமா சார் முட்டக்கண்ணு.

அதற்கு பின் நான் அவரது பேச்சை தடுக்கவில்லை.

பையன் பாக்க சகிக்கல சார்.
அவுங்கம்மா எவ்வளவோ சொன்னாங்க.
அவ மாத்திக்கறதா இல்ல.
யாரோ அவளோட SCHOOLMATE ஆம். 

இவ  டாக்டர். அவன் டீக்கடை வச்சுருக்கான்.

அவங்க வீட்டுல அவள தலைமுழுகீட்டாங்க.

சார் பையன் எந்த ஊர்?

ஏதோ திருச்சி  பஸ் ஸ்டாண்டுல கட வச்சுருக்கானாம்??எதுக்கு சார் ?

சும்மா தான் கேட்டேன்.

அவர் சென்றாலும் ராதிகாவின் செயல் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.

LOVE IS A FOOLISHMAN JOB . எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

ஆண்டிடோட் 

ஆம் 

ஆண்டிடோட் தான்.

The depressed nervous system should be made active 

காதலிப்பவர்களுக்கும் நிச்சயமாய் ஆண்டிடோட் தேவை. 
நிச்சயம் தீர நிச்சயம் 



Wednesday, 11 April 2012

தங்கப்ப தக்கம்

டேய் இந்த  தங்கப்ப தக்கம் ஜோக் எந்த படத்துலடா  வரும் ???. யாரோ தினகரிடம் கேட்க, கேள்வி குமாரின் செவிகளை எட்டின.

சினிமாக்கேள்விகள் குமாரிடம் தான் வரும். தினத்தந்தி குருவியார் போல் எல்லோருக்கும் பதில் கூறுவான்.அவன் வைத்து இருக்கும் அரியர்சை விட அவனுக்கு சினிமா அறிவு அதிகம் எனலாம்.

அவனுக்கு சிதறல்களாய் மட்டுமே அக்காட்சி நியாபகம் இருந்தது. 

சரத்குமார் ,அப்பாஸ் நடிச்ச படம் தான?

ஆமாண்டா?

இந்த கடைசி சீன்ல கூட சரத்குமார் கக்கூஸ்ல உக்காந்து அழுவானே அதுவா ??

டேய் சூப்பர்டா . எப்படிடா? சரி சரி படத்து பேர சொல்லு ..

அது தெரியலடா யோசிச்சு சொல்றேன்..

அட போட .. இது கூட தெரியல. 

இன்னிக்கு நைட்டுக்குள்ள சொல்றேன்.

ஒன்றும் பேசாமல் நகர்ந்துவிட்டான் குமார்.ஒரு தமிழ் படம் தெரியாமல் விழித்தது  இது தான் முதல் முறை.அதுவும் அவனுக்கு இப்போது முழுக்கதையும் நியாபகம் வந்துவிட்டது.ஆனால் பெயர் மட்டும் ????

அவன் வீடு சென்றதும் எப்போதும் போல் அர்ச்சனை விழ ஆரம்பித்தது.

அப்பாவின் ஏவுகணைகள் வீசத்தொடங்கின ..

என்ன பண்ணலாம்னு இருக்க??என்னிக்கு அரியர் எல்லாம் முடிக்க போற?

விஜயகுமார் தான சரத்தோட அப்பா ??

இந்த மொபைல  என்னிக்கு தூக்கி போடுறியோ அன்னைக்குத்தான் உருப்புடுவ.

ஒரு கடுதாசி ஜோக் கூட வருமே??..

பாரு எல்லா புக்கும் புதுசாவே இருக்கு. திறந்தாவது பார்த்து இருக்கியா??

வாழமரத் தோட்டத்துல ஒரு பைட் சீன் கூட வருமே?
படத்தின் பெயர் ???

உங்க அம்மா அன்னிக்கு ஒரு நாள் டீக்குடிக்காம உங்களால வாழ முடியாதான்னு கேட்டா. அன்னிக்கு இருந்து நான் டீ குடிக்கல.நான் மானஸ்தன். நீயுந்தான் இருக்கியே. 

அவன் அப்பா சொன்னது அவனுக்கு முகத்தில் அறைந்தது போல் இருந்தது. அவன் அப்பா திட்டத்திட்ட வீட்டிற்கு வெளியே வந்தான்..

தினகருக்கு  போன்  செய்தான் 

டேய் படம் பேரு மானஸ்தன் 


Tuesday, 10 April 2012

காவல் தெய்வம்

வேலாண்டிபாளையம் ..

கலவரக்கண்களோடு காவல் நிலையத்திற்கு உள்ளே நுழைந்தான் ரகுமான்

அவன் கண்களில்  நேற்றிரவு  தூக்கம் களவு செய்யப்பட்டு இருந்தது. களவு சொல்ல வந்த விஷயத்தை பார்ப்போம் 

அய்யா என் பொஞ்சாதியை  நேத்து இருந்து காணோமுங்க?

என்னயா சொல்ற நல்லா தேடி பாத்தியா 

வழக்கம்போல் சாதரணமாக கேட்டார் இன்ஸ்பெக்டர்..

கண்ணீர் உருண்டோடியது அவன் கன்னங்களில்.

சரி சரி ரைட்டர் இன்னும் வரல. வெளிய ஒக்காரு. வந்ததுக்கு அப்புறம் ஒரு கம்ப்ளைன் எழுதி கொடுத்துட்டு போ.

அவரின் பொறுப்பற்ற பேச்சு இவனை கோபம் அடைய செய்தது. இவனை பொறுத்தவரை போலீஸ் என்றால் புகார் கொடுத்தவுடன் பிடித்து தர வேண்டும்.

உங்க பொஞ்சாதினா இப்படி கண்டுக்காம இருப்பீங்களா??

சடாரென விழுந்தது ஒரு அடி. ஏன்டா கூ..... வாய  மூடிட்டு போய் வெளிய உக்கார்.வாய் நீளுதோ.. 

அழுதபடி சென்று கை தரையில் பட குத்தவைத்து உக்கார்ந்து இருந்தான்..

இரண்டு மணி நேரம் ஓட்டம் கண்டுவிட்டது.இன்னும் யாரும் வரவில்லை..

யோவ் எங்கயா அந்த ரைட்டர். அந்த மனுஷன் காலைல இருந்து உக்காந்து இருக்கான். நான் வேற கோபத்துல அடிச்சுட்டேன். 

குப்புசாமி சார் அந்த ஆள கூப்பிட்டு ஒரு கம்ப்ளைன் எழுதி வாங்கிக்குங்க..

இந்தாப்பா பேரு;ஏரியா எல்லா விவரமும் எழுதி கொடுத்துட்டு போ..

அவன் எழுதுகையில் இனி இந்த ஊர் அவனை எப்படி நோக்கும் என்பதிலேயே அவன் முழுக்கவனமும் இருந்தது.அவனை இரண்டு மணிநேரம் அலைக்கழித்த ரைட்டர் மேலும் இருந்தது..

கோப்புகளை சரிசெய்கையில் ஒரு படத்தை பார்த்து ரகுமான் கதறினான் 
"இவன் தான் சார் என் பொஞ்சாதியை கூட்டீட்டு  ஓடீட்டான் "

எல்லோரும் அதிர்ச்சியாய் பார்க்க ரைட்டர் கோகுல் சந்தோசமாய் கோப்பில் சிரித்துக்கொண்டு இருந்தார் 

Tuesday, 27 March 2012

பயணம்

அன்று நான் நானாக இல்லை.

என் மகள் சுவற்றில் சாய்ந்து இருந்தாள்; அவள் இதழோரத்தில் நேற்று இரவு இருந்த சிரிப்பு இப்போது மறைந்து போய் இருந்தது.

நேற்றைய இரவு சற்று அதிகமாகவே நீண்டு இருந்தது.


என் மகளின் காதலுக்கு நான் என் மனைவியை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. என் மனைவி இறுதி வரை அவள் பிடியில் இருந்து கீழ் இறங்கவில்லை. என் மகளும் அப்படியே.


இன்று அனைத்தும் மாறி இருந்தது.


என் மனைவி யாரையோ அலைபேசியில் தொடர்பு கொள்ளமுயற்சித்து கொண்டு இருந்தாள்.

நானும் என் கட்டிலில் இருந்து எழ முயற்சித்து தோற்றுப்போய் இருந்தேன்.

வண்டியில் செல்லலாமே என யோசித்துக்கொண்டு இருக்க; என் மனைவியும்  என்னோடு பயணம் செய்ய ஆயுத்தமானாள்.இவ்வாறு நானும் என் மனைவியும் சேர்ந்து ஒரு விசயத்தை செய்வது இதற்கு முன்னர் எப்போது என்று நினைவில் இல்லை.

இன்று காலையில் இருந்து என் மனதிற்கு நெகிழ்வாய் அமைந்தது இந்த பயணம் மட்டுமே . குளிர்  காலத்தின் நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தன.

சட்டென அ.முத்துலிங்கம் அவர்களின் கவிதை ஒன்று மனதில் தோன்றியது


குளிர் காலம் வரப்போவதற்கான அறிகுறி
ஆடுகள் கத்தையான ரோமத்தின் கதகதகப்பில்
தங்களை பாதுகாக்க ஆயத்தப்படுத்தின.
மனிதர்கள்
தங்கள் உடம்புகளை நீண்ட அங்கிகளுக்குள்
மூடி மறைத்துக்கொண்டார்கள் .
இந்த மரங்கள் மட்டும் ஏனோ
இருக்கும் இலைகளையும் உதிர்த்துவிட்டு
வெறும் மேலோடு குளிர் காலத்தை
எதிர்க்கத் தயாராகி விட்டன.
என்ன துணிச்சல்!!

என் வயது என்னை முழுக்கவிதையையும் என் மனதில் தோன்ற விடாமல் என் ஞாபகமறதியை அதிகப்படுத்தி இருந்தது.

நான் ஏனோ ஒரு சிறுவன் போல் அனைத்தையும் பார்த்துகொண்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்; ஏனோ எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது போன்றதொரு  உணர்வு..


சிறிது நேரம் கண் அயர்ந்துவிட்டேன்...

வாகனம் இப்போது கல்லறை நோக்கி உருண்டோடியது.


அனைவரும் சூழ்ந்து இருக்க

ஒரு  3 அடி குழி வெட்டப்பட்டு இருந்தது. சவப்பெட்டி திறந்த நிலையில் கிடந்தது. எனக்கு சட்டென ஓர் ஆசை...


அந்த சவப்பெட்டியில் படுத்தால் எப்படி இருக்குமென??.


யாரும் பார்க்காதபோது  சட்டென பெட்டிக்குள் என்னை கிடத்தினேன்.என் வீட்டு கட்டிலை விட இந்த மெத்தை எனக்கு சவுகரியமாய் இருந்தது.இங்கு ஏன் தூங்கக்கூடாது என நான் சிந்திக்கும் முன் தூங்கியிருந்தேன்..

இருள் என்னை சூழ்ந்து இருந்தது. இது கனவு என சொல்லி என் மனதை தேற்றிக்கொண்டு இருந்தேன்.கண் விழித்தும் பயனில்லை என பின் முடிவுக்கு வந்தேன்..

இந்த கட்டில் எனக்கு நிரந்தரம் ;என் இடம்  மீண்டும் தோண்டபடாத வரை..

Monday, 26 March 2012

மெல்ல திறந்தது கதவு


baatein hawa hai saari, saari ki saari
kyun hai kyun hai kyun hai kyun hai kyun....
rukhi si khaali khaali, ulti hi duniya saari
kyun hai kyun hai kyun hai kyun hai kyun....

மெல்ல திறந்தது கதவு படத்தின் குழலூதும் பாடலின்  ஹிந்தி வெர்சன் ஓடிக்கொண்டு இருந்தது.

மெல்ல திறந்தது கதவு

"சார் ஒரு க்ரூப் போட்டோ எடுக்கணும் ".

அப்படி ஒரு அழகை அக்கடையின் ரிசப்சனிஸ்ட்  பார்த்ததில்லை போலும் ;


உள் அறையில்   லென்சை சரிசெய்து கொண்டிருந்தான் அக்கடையின் உரிமையாளர்  .

சார் சூப்பர் பொண்ணு சார். கடைல முன்னாடி மாட்டுறதுக்கு பொண்ணு போட்டோ வேணும்னு சொண்ணீங்கள்ள. இவ மேட்ச் ஆவா சார்.

ஹ்ம்ம் சரி சரி உன்ன நம்புறேன். முகத்த நல்லா கழுவீட்டு வரசொல்லு பார்ப்போம்.

அந்தப்பொண்ணு மேக் அப் போட்டுட்டு இருக்கா சார். கண்டிப்பா சொல்றேன். இதவிட அழகான பொண்ணு கிடைக்கமாட்ட சார். அவ ஒத்துக்குவாளா .

அதெல்லாம் சொல்லி சமாளிச்சுக்கலாம். டைம் ஆனா பரவால. மெதுவா வர சொல்லு . சில பேருக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்.

2 மணி நேரம் ஆகிவிட்டது. பொறுமை இழந்தநிலையில்

யோவ் வரசொல்லுயா . மதியம் சாப்பாட்டுக்கு போகனும் . இன்னுமா மேக் அப் பண்றா.

இன்னும் அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்..

அவளை பார்த்தவுடன் ; ஒன்றும் சொல்லாமல் ரிசப்சனிஸ்டை கடுமையாக ஏசிவிட்டு வெளியேறினான்..


உள்ளே நுழைந்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி


           மெல்ல திறந்தது கதவு

குறிப்பு : நகைச்சுவைக்காக மட்டுமே ; இஸ்லாமிய நண்பர்களை கிண்டல் செய்யும் பொருட்டில் அல்ல                            

Monday, 19 March 2012

வலி

அன்று இரவு வண்டியில் வரும் போது ; இருவர் என்னை வேண்டும் என்றே இடித்தனர். வெளிச்சமின்மை காரணமாக அவர்கள் யார் என அறியவில்லை. ஆனால் அதற்கு காரணம் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு என்று மட்டும் ஊர்ஜிதம்   செய்துகொண்டேன்.பெரிதாக ஏதும் அடி இல்லை எனினும் உள்காயங்கள் சில. தோள்பட்டையும்; முதுகும்  ஏதோ செய்தது.

எழும்போது அப்படி ஒரு வலி . எழ முடியவில்லை. லீவு சொல்லி விடவேண்டும் என்று கூட யோசித்தேன். நான் கோழை அவர்கள் செய்யும் செயல்களை கண்டு அஞ்சிவிட்டேன் என்று எடுத்துக்கொள்ளக்கூடும். ஆகையால் சென்றேன்..


உள்ளே நுழைந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் என் இடத்தில் உட்கார்ந்து  கொண்டேன்.


தேநீர் இடைவேளையில் , அவர்கள் யாரும் ஒன்றும் நடக்காதது போன்று ஒரு முகபாவனை வைத்து கொண்டனர். எனக்கு எரிச்சலாய் இருந்தது. விடுப்பு எடுத்து கெளம்பிவிட்டேன்.


அன்று மாலை .

சென்றிருந்த மருத்துவமனையில் ஆள் யாரும் இன்றி செவிலியர் மட்டும் வெளியே உக்கார்ந்து இருந்தார்.

மேடம், டாக்டர் எப்ப வருவாங்க ??

உள்ள வாங்க ..

எனக்கு சற்று அசௌகரியமாக பட்டது. நான் தவறாக எண்ணிவிட்டேன். அந்த செவிலியர் தான் மருத்துவர்.


சாரிங்க

ஹ்ம்ம் பரவால  சொல்லுங்க.

மேடம் முதுகு ; தோள்ப்பட்டை எல்லாம் ரொம்ப வலிக்குது .

சரி ஒரு XRAY எடுத்துடுங்க. அப்புறம் தான் கிளியரா சொல்ல முடியும் ..

400 ரூபாய் என் பர்சில் இருந்து திருடப்பட்டது.

மேடம் ரிப்போர்ட் ..


சார் பெருசா ஒன்னும் பிரச்சனை இருக்கறதா தெரியல. ஆனா நீங்க கேர்புல்லா இருக்கணும். தண்டுவடத்துல சிறிசா வீங்கி இருக்கு. அதுனால கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்குங்க..


ஒரு வாரம் கழித்து


எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அமைதியான சூழ்நிலயில் எல்லாவற்றையும் அசை போட்டேன்

என்னை அடிக்க சொல்லி ஆள் அனுப்பியவர்கள் ஒன்றும் தெரியாதது போல் நடித்தது.முதுகும் ,தோள்ப்பட்டையும் வலித்தது. 400 ரூபாய் திருடப்பட்டது. அந்த செவிலியரும்!!! முதுகில் பிரச்சனை என சொன்னது ..

கனவில் அடி வாங்கினாலும் உண்மையிலேயே முதுகு பிரச்சனை வருமோ ??

Sunday, 11 March 2012

ஜானி

"செனோரீட்டா ஐ  லவ் யூ; மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ "

அண்ணே ஒரு டீ ஒரு வர்க்கி ....

இந்த கடை முன்னாடி தான் அவள முதல் முறையா பார்த்தேன்...


சார் சத்தியமா சொல்லணும். இவ்ளோ அழகா நீங்க யாரையும் பார்த்து இருக்க மாட்டீங்க. சில நாய்க தான்தான் அழகுங்ற  மாதிரி சீன போடும் . ஆனா இவ REALLY AWESOME  சார்  ....


இதோ ...

இந்த APARTMENT ல தான் சார் வேலை பாக்குறேன். நான் என் நாலு பிரண்ட்ஸ்  எல்லோரும் இங்க தான் 3  வருசமா இருக்கோம்.

எல்லாத்துக்கும் நைட் டூட்டி ஜாப் தான் சார். எல்லோரும் காலைல தூக்க கலக்கத்துல இருப்பாங்க. பட் அவ காலைல ஆறரை மணிக்கு வாக்கிங் வருவா. அவளுக்காக நானும் வந்துருவேன் . ஓனரு  அந்த வகைல நல்ல டைப்.


அவள பார்த்து நான் சிரிப்பேன். அவளும் பதிலுக்கு சிரிப்பா..

அவள வீடு வரைக்கும் பாலோ பண்ணுவேன்.உள்ள போய்ட்டா திரும்பி வரவே மாட்டா..

இப்படியே நாட்கள் நகர்ந்தன ..

ஒரு நாள் அவள பார்க்ல பார்த்தேன் ..

இன்னிக்கு சொல்லிரலாம்னு முடிவு பண்ணிட்டேன் . சொன்னேன் ..



என்ன வெறுங்கைல வந்து லவ் சொல்ற???.

அதுக்கென்ன சில நாய்க மாதிரி கிடார் வச்சுகிட்டா சொல்ல முடியும் . நம்மள  பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.

நான் என்ன சொன்னாலும் அவனுகளுக்கு லொள் லொள்ளுன்னு தான் கேட்கும்

. நீ பதில் சொன்னாலும் அவனுகளுக்கு லொள் லொள்ளுன்னு தான் கேட்கும் ..

Friday, 9 March 2012

மனிதம்

சைரோன் ஒலி அணைக்கப் பட்டிருந்தது. அப்போதும் நல்ல கூட்டம் குழுமி இருந்தது. காமிராக்களின் வெளிச்ச சிதறல்கள். வழக்கமான கேள்விகள். அதை விட வழக்கமான பதில்கள். வெள்ளை அங்கியில் ரத்த பொத்தல்கள். நான்கு பிணங்கள் ஆம்புலன்சில் இருந்து இறக்கப் பட்டு தரையில் கிடத்தப்பட்டன.

"தீவிரவாதிகளுக்கும் எங்களுக்குமான மோதலில் சட்டம் ஜெயித்திருக்கிறது" என்றார் துணைக் கமிஷனர்.
                                      _________________________________

நேரம்: அதிகாலை நான்கு மணி
சாமான்ய மக்கள் அசந்து உறங்கும் நேரம்
குற்றங்களுக்கு ஏற்றது.

பாரக்பூரின் பரபரப்பான சாலை அமானுஷ்யதில் உறைந்திருந்தது. தோட்டாக்கள் நிரப்பப்பட்டன. ட்ரிக்கர் சரிபார்க்கப்பட்டது. காக்கிகள் காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்சாரியில். அவர்களுக்காக மரணம் காத்திருந்தது. இருட்டின் அமைதியில் ஒரு 'விஷுக்'. உடலில் ரத்த ஊற்றுகள் பெருக்கெடுத்தன. தார் சாலை எங்கும் குருதி வழிந்தோடியது. 

ரமேஷ் சந்த், it's your turn என்றார் அவ்உயர் அதிகாரி.

சந்தின் தோள்பட்டையில் புல்லட் இறங்கியது.

                                  ____________________________________

மத்திய பிரதேசத்தின் இருண்ட காடுகள்.

செருப்பு மாலைக்குள் முதல் அமைச்சர் வணக்கம் சொல்லி கொண்டிருந்தார். சமாதானம் செய்ய வந்த அதிகாரி ஒருவர் பழத்தால் தாக்கப்பட்டார்.

உங்க நல்லதுக்கு தான ரோடு போட்ருக்கோம். ஸ்கூலு கட்டி கொடுத்தோம்

அதெல்லாம் எங்களுக்கா பண்ணுனீங்க..உங்க வெளிநாட்டு மொதலாளிகளுக்காக தான போட்டீங்க...காது குத்தாதீங்க.

வாக்குவாதம் முற்றியது. சென்சார் செய்யப் படவேண்டிய வார்த்தைகள்  காற்றில் பறந்தன.

எச்சரிக்கை விடப்பட்டது. கூட்டம் கொந்தளித்தது.

தினசரிகளுக்கு நாளைய தலைப்பு செய்தி கிடைத்தது. பழங்குடிகள் சுடப்பட்டார்கள்.

                                  _________________________________

சார்..மாட்டிக்கிட்டா..?

மாட்ட மாட்டோம். இப்ப கூட நாலு பேர வங்கி கொள்ளையர்கள்னு சுட்டாங்க. மாட்டுனான்களா? ஒரு பிரதமர் கொல்லப்பட்டதா மூணு பேர புடிச்சு வச்சு இருக்கனுங்க? அது உண்மையா? 

இருந்தாலும்...

தைரியமா பண்ணலாம்..உங்களுக்கு தான் இன்னிக்கு காயம்.

சார்??


Tuesday, 6 March 2012

கன்னம்


 அனிதாவின்  திருமண விழாவிற்கு சென்றிருந்த போது ;

ஜெயா எப்போதும் போல் சிரித்துக்கொண்டு இருந்தாள்.

ஒரு பெரியவர் வந்து ஜெயாவின் தம்பியிடம் ,

கண்ணு தாத்தாக்கு கன்னத்துல முத்தம் கொடு பார்ப்போம்

ஜெயாவின் தம்பி கன்னம் எது?என்பது போல்; ஜெயாவை  பார்க்க

ஜெயா குறும்புடன் காதருகே வந்து "மூஞ்சில முடி எங்க இல்லியோ அது தான் கன்னம் "

ஜெயாவின் தம்பி சட்டென பெரியவரின் தலையில் முத்தம் கொடுத்தான்

             
மன்னிக்கவும் வேறொரு சிறந்த படம் கிடைக்கவில்லை

புகார்

பாட்டி எப்போதும் போல் நாயின் வேகத்துக்கு பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.. அந்த நாயைப்பற்றி சொல்ல வேண்டும் . ஏதோ ஹட்ச் டாக் என பெயர் சொல்லி 2000 ரூபாய்க்கு வாங்கி வந்தாள் சுகந்தி.
அந்த பாட்டியை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி இருந்தனர் கணேஷ் ;சுகந்தி தம்பதிகள்..


சுகந்தியின் மகள் கோமதியோ ஹட்ச் நாயோடு தான் விழிப்பு; தூக்கம் எல்லாம் ; பள்ளிவிட்டு வந்தவுடன் நாயை பார்த்தால் தான் இவளுக்கு எல்லாமே.


இப்படி இருக்கையில் ....

பாட்டி எப்போதும் போல் நாயின் வேகத்துக்கு பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.. 

திடீரென்று அந்த நாய் தன் சங்கிலியை விட்டு விலகி சென்றது. பாட்டி செய்வதறியாமல் திகைக்க ; நாய் அவளது பார்வையில் தென்படவில்லை.

வீட்டிற்குள் கேட்க போகும் அர்ச்சனைகள் தன் காதில் இப்போதே விழத்  தொடங்கின.


உள்ளே நுழைந்ததும் :



  • அந்த நாய் மதிப்பு எவ்ளோன்னு தெரியுமா??
  • கோமதி கேட்டா என்ன சொல்றது ??
  • திங்குற அளவுக்கு புத்தி இருக்கா ??
  • உங்களுக்கு செலவு பண்றத விட இந்த நாய்க்கு அதிகமா செலவு பண்ணி இருக்கோம் 


எதுவும் பேச வேண்டாம் முதல்ல வெளிய போங்க

பாட்டி கண்ணீரோடு வெளியே  செல்ல...

சில நாட்கள் கழித்து

அய்யா !!

என்ன சொல்லு

எங்கம்மாவ பார்க்கணும்

ஓ அது நீ தானா??? சுகந்தி சற்றே கோபத்துடன் .


நீ வாங்குன காசுக்கு பாதி கூட உங்கம்மா வேலை செய்யல .யார்கிட்டயும் சொல்லாம அன்னிக்கு வீட்டைவிட்டு போய்ட்டாங்க. 


என்னமா சொல்றீங்க??

கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம் ; உங்கம்மாவோட ஒரு போட்டோ இருந்துச்சு அத வச்சு தேட சொல்லி இருக்கோம்

ரொம்ப நன்றிகம்மா

சரி சரி என்னிக்கு மிச்ச காச திருப்பி தர போற ..

என்னமா சொல்றீங்க..

உங்கம்மா போயாச்சு அந்த வேலைக்கு வேற ஒரு ஆளையும் வச்சாச்சு. உன்கிட்ட கொடுத்த காசுக்கு உங்கம்மா வேலை செய்யலையே...


அம்மா 


சரி சரி போய்த்தொல ....

எங்கம்மா கிடச்சா மட்டும் சொல்லுங்க

புகார் பண்ணி இருக்கோம் . நீ ஒரு மாசம் கழிச்சு வா

சில நாட்கள் கழித்து

நாங்க போலீஸ் ஸ்டேசன்ல இருந்து பேசுறோம் .. கொஞ்ச நாளைக்கு முன்னாடி   புகார் கொடுத்தது நீங்க தானா ??

சுகந்தி மகிழ்ச்சியோடு

"ஆமா சார் நாய் கெடச்சுருச்சுங்களா?? "

 


   நான் தினமும் கல்லூரிக்கு செல்லும் போது ஒரு பாட்டி நாய் ஒன்றை கூட்டிக்கொண்டு நாய்க்காக வாக்கிங் வருவார். விசாரிக்கையில் இவர் அந்த வீட்டில்  வேலை செய்கிறார் என்பதை அறிந்தேன். இருவரும் வருவதை பார்க்கையில் இந்த நாய்க்கு தான் பாட்டி காவலோ என எண்ண தோன்றும் . அவருக்காக இந்த கதை எழுதினேன்.

Wednesday, 29 February 2012

சக்தி

நான்காம் ஆண்டு பொறியியல் மின்னணு மற்றும் தொழில்தொடர்பியல் (சரி சரி விடுங்க ECE ) மாணவிகள் பேசிக்கொண்டது .

இந்த கார்த்தி  இப்படி பண்ணுவான்னு கொஞ்சங்கூட எதிர்ப்பாக்கலடீ.

இத்தன நாளா யார்டையும் பேசாம இப்ப FACEBOOKல RELATIONSHIP WITH SAKTHI னு ஸ்டேடஸ் அப்டேட்  பண்ணி இருக்கான்.

எந்த கார்த்திடீ?

அவன்தான்டீ நம்ம யாராவது பேச போனா முறைச்சுகிட்டே இருப்பானே   அவன்தான்.நாலு வருசத்துல யார்ட்டயுமே பேசினதே  இல்ல. 

அவனா ??சரி, சக்தி என்ன சொன்னா ? .

அவளால இன்னும் நம்பவே முடியல. கார்த்தி ஏன் இப்படி எழுதினான்னு புரியாம உக்காந்து இருக்கா. 


ஆம் அவர்கள் சொல்வதும்  நியாயம்தான்.

எல்லா படத்துலயும் ஹீரோ பேறு கார்த்திக் . ஆனா இவனோ மௌனம் பேசியதே சூர்யா மாதிரி யார பார்த்தாலும் முறைப்பான்; ஆனா ரொம்ப நல்ல டைப்.
பட் இவன் ஏன் இப்படி பண்ணினான்??

அடுத்த நாள் 

சக்தி லைப்ரரிக்கு வெளியே நின்றிருக்க கார்த்திக் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்..

சக்தி கேட்டே விட்டாள்.

என்ன நினைச்சிட்டு இருக்க??

என்ன வேணும்னாலும் நினைப்பேன். உனக்கென்ன..

ஹ்ம்ம் FACEBOOK ல என்ன ஸ்டேடஸ் போட்ட ?

ஏன் நீ பாக்கலையா ??

அதென்ன லவ் வித் சக்தி??

ஆமாம். உனக்கென்ன .

நீ என்ன லவ் பண்றியா ??

ஐயோ. அவனுக்கு தூக்கி வாரி போட்டது. அவனது பதிலோ அவளை தூக்கி வாரி போட்டது 

என்னை இவ்வளவு கீழ்தரமா நினச்சுட்டீங்கள்ள. இந்த நாலு வருஷத்துல யாராவது ஒரு பொண்ணு கிட்ட பேசி இருப்பனா?. ATLEAST யாரையாவது பார்த்து சிரிச்சு இருப்பனா??. நம்ம கிளாஸ் பொண்ணு யார்மேளையும் எனக்கு எந்த விதமான தவறான அபிப்ராயமும் கிடையாது.

அப்ப சக்தி எந்த பொண்ணு ??

எனக்கு உங்கள மட்டும் இல்ல ; எந்த பொண்ணையும் பிடிக்காது. நான் பார்த்தது உங்களுக்கு பின்னாடி நின்னுகிட்டு இருந்த சக்திவேல் 

                                                 
  


THE SIXTH SENSE

                                                            THE SIXTH SENSE
                 
பேய் படம் ; ஆவிகளுடன் பேசும் படங்கள் ஆகிய படங்களை பார்த்து இருப்பீர்களாயின் இப்படம் அத்தகைய  தளத்தில் ஒரு சிறந்த படைப்பு.
ஒரு எழுத்தாளன் தன் நாவலை தானே படமாக்கியது இதுவே முதல் முறை என நினைக்கிறேன் . அதுவும் மேலை நாடுகளில் ஒவ்வொரு துறையையும்  (கதை , வசனம், இயக்கம் ) ஒவ்வொரு நபர்   செய்வர் . தமிழில் ஜெயகாந்தன் (உன்னை போல் ஒருவன்,யாருக்காக அழுதான்   ) அவர்கள் இவ்வாறு செய்ததாக கேள்வி.


நைட் ஷ்யாமளன் (மனோஜ் ஷ்யாமளன் )என்ற அமெரிக்க வாழ் இந்தியர் எழுதி இயக்கிய படம்..

மால்கம் க்ரோவ் ஒரு குழந்தைகள் மனோதத்துவ ஆலோசகர். தன் மனைவியுடன் தனிமையில் இருப்பதாய் தவறாக எண்ண உள்ளிருந்து ஒருவன்(வின்சன்ட் ) வந்து மால்கம் தனக்கு தவறாக சிகிச்சை அளித்ததாக கூறி மால்கமை  முதுகு பகுதியில் சுட்டுவிட்டு தானும் இறந்துவிடுகிறான்.


பின்பு


கோல் என்ற ஒரு சிறுவனுக்கும் வின்சன்ட் போன்று இறந்தவர்கள் இவனோடு உரையாடுவது போன்ற உணர்வு இருப்பதாய் மால்கம் உணர்கிறார் . கோல் மீது அதீத கவனம் எடுத்துகொள்கிறார்.

தன் வேலையில் முழுவதுமாய் ஈடுபடுவதால் தன் மனைவி தன்னை விட்டு விலகி செல்வதை நினைத்து மனம் உருகுகிறார்.


                                                         
கோலின் பயத்திற்கான காரணத்தை  மால்கமும் ; மால்கமை  தன் மனைவி பிரிந்ததற்கான காரணத்தை கோலும் சொல்கின்றனர்..


படத்தின் இறுதி திருப்பம் கண்டிப்பாக பலர் கணிக்கவே முடியாமல் இருப்பது மனோஜின் நேர்த்தியான திரைக்கதை.


படத்தின் ப்ளஸ் கூர்மையான வசனங்கள்



  • கோலும் ஆசிரியரும் பேசி கொள்வது 

நமது நகரம் மிகவும் பழமையானது. இங்கு இருக்கும் ஒவ்வொரு கட்டிடமும் ஏதோ ஒன்றிற்காக பயன்பட்டு இருக்கின்றது. நமது பள்ளி எதுவாக இருந்தது தெரியுமா ??

கோல் : இங்கு மக்கள் தூக்கில் இடப்படுவார்கள்.

தவறு. யார் சொன்னார்கள் இவ்வாறு ??

கோல் :தூக்கில் இடப்ப்படுமுன் அவர்கள் அழுவார்கள் ; மக்கள் அவர்களை தூற்றுவார்கள்.

இது ஒரு நீதிமன்றம்.சட்டங்கள் இயற்றப்பட்ட இடம். சட்டவல்லுனர்கள் இருந்த இடம்
கோல் : அனைவரையும் கொன்ற இடமும் இது தான் 
                 
  • மால்கம் : என் மனைவி என்னை புரிந்துகொள்ளவில்லை

    கோல் : அவள் தூங்கும்பொழுது அவளிடம் பேசுங்கள்.தூக்கத்தில் அனைவரும் உண்மை பேசுவார்கள் 

இப்படத்தை பற்றி முழுதும் நான் எழுதவில்லை.6 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு எதுவும் வெல்லாத ஒரு சிறந்த படம்


இப்படத்தின் முழு திரைக்கதையும் படிக்க

http://home.online.no/~bhundlan/scripts/TheSixthSense.htm



இப்படத்தை காண

  http://woowza.com/watch/92974251863886861885

Monday, 27 February 2012

விபத்து

சொல்லுங்க மாமா

கோபால் , ப்ரீயா இருக்கியா

ஏன் , மாமா சொல்லுங்க


இல்ல ப்ரீயா இருந்தா சொல்லு வெளிய போலாம். எங்க? காலேஜ்லையா இருக்க.

இல்ல மாமா, காலேஜில இருந்து கெளம்பீட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்.

சரி சரி சீக்கிரம் வா..

டேய் நான் கெளம்புறேன். மாமா கூப்பிடுறார்.

மூன்று பஸ் மாறினால் ,சீக்கிரம் சென்றுவிடலாம். கல்லூரியில் இருந்து ரெட்டியார் சத்திரத்திற்கு ஒரு டவுன் பஸ். பின்பு ஓட்டஞ்சத்திரதிற்கு ஒரு விரைவு. அப்புறம் பழனிக்கு ஒரு பஸ். எப்படியும் மாமா லேட்டாக தான் கெளம்பவார்.


ரெட்டியார் சத்திரத்தில் இறங்கிட்டேன் ..இன்னிக்குன்னு ஒரு பஸ்சும் நிக்கல. மாமாவும் கால் பண்ணல. 4 பஸ் நிக்காம போயிருச்சு.

திடீர்னு பாலத்துகிட்ட ஒரு புது காரும் லாரியும்  மோதிருச்சு . கார் இன்னும் ரெஜிஸ்டர் கூட பண்ணல. எல்லோரும் அத நோக்கி ஓடினாங்க.


ஆக்சிடண்டுன்க்ராதாள எல்லா பஸ்சும் நின்னுருச்சு. நானும் பஸ்ல ஏறிட்டேன் ..


விபத்துகளில் நன்மையையும் உண்டு. 

அந்த கார்க்காரன்  மேல தான் தப்பு ........ காதல் சொல்ல நேரமில்லை.உன் காதல் சொல்ல தேவையில்லை .நம் காதல் சொல்ல வார்த்தையில்லை .


ஹெட்செட்டிற்குள்  நுழைந்தன என் காதுகள்.

சேவக் 40  பந்தில் 70 ரன் . கம்பீரும் தன் பங்கிற்கு அடித்து நொறுக்க ; சட்டென விழித்தேன்.

9 MISSED CALLS ..

நல்ல தூக்கம்..

என்ன அப்பா சொல்லுங்க

எங்கடா இருக்க . இப்ப தான் பழனில இறங்கினேன். மாமா கெளம்பீட்டான்களா ??.


சரி சரி வீட்டுக்கு சீக்கிரம் வா. 


என்ன பா? சொல்லுங்க. மாமா ரெட்டியார் சத்திரத்துகிட்ட ஆக்சிடண்டுல இறந்துட்டார்.

விபத்துகளோ ; என்கவுன்டர்களோ நமக்கு சாதரணம் தான் . நம்மில் யாருக்கும் நடக்காத வரை 

Wednesday, 22 February 2012

LIFE IS BEAUTIFUL

                                                              நம் வாழ்வில் என்று நாம் மகிழ்வுற்று இருக்கிறோம் என்று சிந்தித்தால் அது நம் வாழ்வின் முன்னேற்றத்தின் போதே அன்றி வேறெதுமாக இருக்காது. வாழ்வில் நாம் என்றாவது வேதனையின்    போது சிரித்து இருக்கிறோமா ??. அல்லது அதனை வெளிக்காட்டாமல் இருந்து இருக்கிறோமா??




LIFE IS BEAUTIFUL (1997 ) வெளியான இப்படம் அதுவரை ஹிட்லர் பற்றி வந்த படங்களில் முற்றிலும் வேறுபட்டு இன்றுவரை தனித்து நிற்கிறது . முகாம்களில் கொடுக்கப்படும் தண்டனையை ஒரு தந்தை  தன மகனிடம் இதை விளையாட்டு என சொல்லி , இறுதிவரை அதை வெளிக்காட்டாமல் இறந்தும் விடுகிறார்.


 குய்டோ என்ற இளைஞர் ஒரு புத்தக கடை வைக்க ஆசைப்பட்டு போதிய பொருளாதார வசதி இல்லாததால்  ; அங்கு இருக்கும் தன் மாமாவின் உணவகத்தில் வேலைக்கு சேருகிறார். படம் முழுவதிலும் நகைச்சுவையை தெளித்து வாழ்க்கை மிக சுகம் என காட்டுகிறார் . படம் முழுவதும் இரண்டாம் உலக போரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லி இருப்பார்கள்.

                                                                       
மேல் உள்ள காட்சியில் ; மேற்பார்வையாளர் அனைத்து கைதிகளிடமும் தங்கள் வேலை பற்றியும்,கொடுக்கபோகும் உணவை பற்றியும் கடுமையாக பேசிக்கொண்டு இருக்க , குய்டோவின் பையன் மட்டும் சிரித்துகொண்டு இருக்கிறான். அவனை பொறுத்தவரையில் இது ஒரு விளையாட்டு.இந்த விளையாட்டில் வெற்றி பெற்றால் ஒரு பீரங்கி கிடைக்கும் என தன் தந்தை சொன்னது மட்டுமே அவன் நினைவில் இருக்கிறது.



தங்கள் அனைவரையும் யூதர்கள் என கூறி கொலைசெய்யபோகிறார்கள் என தெரிந்தும் தன் மகனிடம் அவன் போலியாய் சொன்ன விளையாட்டை உண்மையாக்கிகொண்டு இருக்கிறான்.The game starts now. You have to score one thousand points. If you do that, you take home a tank with a big gun. Each day we will announce the scores from that loudspeaker. The one who has the fewest points will have to wear a sign that says "Jackass" on his back. There are three ways to lose points. One, if you cry. Two, if you ask to see your mother. Three, if you're hungry and ask for a snack. Forget it! 
ஒரு காட்சியில் கூட குய்டோ தன் நிலையை பற்றி கவலைபடாமல் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.



குய்டோவின்  மனைவி யூதர் இல்லை என தெரிந்ததும் அவளை விடுவிக்கின்றனர் . ஆனால் அவளோ "My husband and son are on that train. I want to get on that train. Did you hear me? I want to get on that train."


   
இரண்டாம் உலக போரில் ஹிட்லர் தோற்றவுடன், முகாம்களில் இருக்கும் கைதிகளை கொல்ல உத்தரவிடுகிறார் ; ஆதாரங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக. தன் மனைவியை காப்பாற்ற பெண் வேடம் இட்டு சென்று மாட்டிக்கொள்கிறார்.


இறுதிக்காட்சியில் தன் மகனை ஒரு கூண்டில் நிற்க வைத்துவிட்டு ; நாளை காலை வரை இதிலுருந்து வெளியே வரவில்லை எனில் பரிசு நமக்கு தான் என சொல்லிவிட்டு சாவை நோக்கி செல்கிறான்; எப்போதும் போல் சிரித்துக்கொண்டே.


குண்டுகள் வெடிக்கும் சத்தம் மட்டுமே

மறுநாள்

சிறுவன் தன் தாயை பார்க்கிறான். பீரங்கிகள் அணிவகுத்து வருகின்றன . அவன் வார்த்தைகளோடு படம் முடிகிறது

Mom, we won, we won!


இந்த வாழ்க்கை மிகவும் அழகானது ஏனெனில் இது அவன் தந்தை அவனுக்காக கொடுத்தது 

Saturday, 18 February 2012

அம்புலி 3D

hii da

still in theatre only

ok ok

y didnt come to exam ??

ok ok film started. will call later

என்னடா படம் முடிஞ்சுச்சா

முடிஞ்சுச்சு டா

எப்படிடா இருக்கு MUK கு

டேய் நான் அம்புலி போனேன்

அம்புலியா ??

ஆமாண்டா தமிழோட முதல் 3D FILM

அப்ப நான் மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்தது

அதெல்லாம் 2D ல எடுத்து அப்புறம் மாத்தினது. இது தான் 3D காமரால எடுத்த முதல் படம்

கதை??



பழசு தாண்டா . ஊருக்குள அந்த பக்கமா போன பேய் அடிச்சு சாப்பிடுடும்னு பழைய பிட்டு .

ஓ. ஹீரோ ??

  ஓர் இரவு படத்துல வந்த அதே டீம். அந்த படத்துல PRODUCER ; director ; music கேமரா எல்லாம் இவுங்க தான். இதுலயும் அத  தான் பண்ணி இருக்காய்ங்க

ஏதோ படத்துல யாருமே தெரிய மாட்டாங்கன்னு சொன்னியே அதுவா ??

  ஆமாண்டா. அந்த படம் தான்

ஏன்டா அப்ப இந்த பட போஸ்டர்ல பார்த்திபன்; உமா ரியாஸ்கான் ; தம்பி ராமையா ; ஜெகன் போடோவெல்லாம் இருக்கு

  இவங்கெல்லாம் எக்ஸ்ட்ரா.அம்புளியோட அண்ண பார்த்திபன். அம்மா உமா .ரெண்டு பிரெண்ட்ஸ் லீவுக்கு வீட்டுக்கு போகாம இருப்பாங்க. அதுல ஒருத்தனோட அப்பா தம்பி ராமையா . ஜெகன் வந்து நாத்திகன் ரோல் டா.

அம்புலி யாரு ?

                               

உனக்கு தெரிஞ்ச மூஞ்சி தான் . இந்த மானாட மயிலாடல வந்தான் டா . மூஞ்சிகூட பருவா இருக்குமே. கருப்பா இருப்பான்.

கோகுலா ??

  அவந்தாண்ட. பாவண்டா அவன காட்டவே இல்ல . புல் மேக் அப். அவன்கரதே எழுத்து போடுற அப்ப தான் தெரியும்.

சரி சரி கடைசியா சாவான மாட்டானா??

எப்பயும் போல ENGLISH படத்துல எல்லாம் வருமே . அதே மாதிரி தான் . PART 2 ஆரம்பிக்கற மாதிரி தப்பிக்கிற மாதிரி முடிச்சுடுவாங்க.ஆனா நெறையா லாஜிக் மிஷ்டேக்கு டா .

  ஆரம்பிச்சுட்டியா ..சரி சரி என்னதான் புதுசா இருந்துச்சு.

  ஆர்ட் நல்ல இருந்துச்சு. அப்புறம் சில  சீன்ல   3D  சூப்பர இருந்துச்சு. வேறொன்னும் பெருசா இல்ல .

அவ்ளோதானா ??

 எப்பயும் போல ஒரே கதைய எடுக்காம புதுசா டிரை பண்ணுறாங்க . அதுக்கே  பாக்கலாம்டா. கம்மியான டிக்கட் எடுத்து; கிட்ட உக்காந்து பாரு. படம் பாக்க நல்லா இருக்கும்.

பாட்டு இருக்கா டா??

ஆமாண்டா   ஒரு 3 பாட்டு . ஆனா ஒன்னும் ஞாபகம் இல்ல . நெஞ்சுக்குள்ள யாருன்னு ஒன்னும் மட்டும் கேட்கலாம். bUT RR சூப்பர்ர்ரா

 சரி எத்தன நாள் ஓடும் ??

ஓடும் டா . ஒரு பத்து நாலு.

சரி விடு டவுன்லோடு பண்ணி பாத்துக்குறேன்.

டேய் இது 3D படம் டா.

ஓ சரி சரி ..

சரி சரி எங்க வேகமா போற

பிளாக்ல எழுத தான். இதையாவது படி டா

சரி சரி பார்போம் ..



  

Wednesday, 15 February 2012

ஹிட்லரும் சினிமாவும் - 2

        ஹிட்லர் பற்றிய படங்களை விட அவர் யூதர்களுக்கு செய்தவற்றை பற்றி சொல்லும் உண்மை கதைகளும் புனையப்பட்ட கதைகளும் அதிகம். அவற்றுள் சிலவற்றை காண்போம்.

4. SCHINDLER'S LIST (1993).

                                           

                  ஆஸ்கர்  ஷிண்ட்லர் என்பவர் ஆயிரகணக்கான யூதர்களை ஹிட்லரின் கொடிய சிறையில் இருந்து காப்பாற்றுவது தான் கதை. தன் தொழிற்சாலையில் ஆட்களை வேலைக்கு அமர்த்துவதாக கூறி பல யூதர்களை காப்பாற்றிய  ஒருவரின் கதை. ஏழு ஆஸ்கர்களையும் ; பல அவார்டுகளையும் வாங்கி குவித்த படம் . ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் மிகச்சிறந்த  படங்களில் ஒன்று.சிறந்த நூறு அமெரிக்க படங்களில் 8 ஆம் இடம் பெற்ற படம்


5.LIFE IS BEAUTIFUL (1998)

               

             இரண்டாம் உலக போருக்கு முன்னர் திருமணம் ஆகி மகிழ்வாக இருக்கும் ஒரு குடும்பம். போர் ஆரம்பிக்கப்பட்டதற்கு பின் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யபடுகின்றனர். இத்தாலி நாட்டின் இந்த படம் ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக மூன்று விருதுகளை வாங்கியது.ஒரு வேற்று மொழி படம் இவ்வாறு வாங்குவது இதுவே முதல் முறை. கதையின் நாயகன் ஒவ்வொரு FRAME யிலும் வாழ்க்கை மிகவும் அழகானது என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். தம் மகனிடம் முகாமில் அடைபட்டு இருப்பது ஒரு விளையாட்டு என அவர் சொல்லுவதும் ; இறுதியில் தன்னை கொலை செய்ய போகிறார்கள் என தெரிந்தும் மகனிடம் காட்டிக்கொள்ளதவாறு விளையாட்டாய் நடந்து செல்வதும் சிரிப்பை மறைத்து அழ தூண்டும் காட்சி..
இப்படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள
http://get2kg.blogspot.in/2012/02/life-is-beautiful.html

6.PIANIST (2002)

                       
             Władysław Szpilman என்பவரின் சுயசரிதை படமாக்கப்பட்டு இருக்கிறது. LIFE IS BEAUTIFUL படத்தில் தன் குடும்பத்திற்காக தன் உயிரை தியாகம் செய்கிறார் நாயகன். இந்த படத்தில் தன் உயிரை பெரிதாக நினைக்கிறார் ஹீரோ. தன் குடும்பம் முழுதும் இரயிலில் ஏறி யூதர்களை கொடுமை படுத்தும் கேம்பிற்கு தள்ளப்பட இவர் மட்டும் தப்பித்துகொள்கிறார் . அவர் தன் வாழ்கையை எப்படி யாருக்கும் தெரியாமல் வாழ்கிறார் என நீள்கிறது படம் . இந்த  போலந்து திரைப்படம் 3 ஆஸ்கர்களை பெற்றது.. LIFE IS BEAUTIFUL மிக சிறந்த படம் எனினும் நான் PIANIST தான்.

மேலும் சில படங்கள் உள்ளன.


முதல் பாகம்


http://get2kg.blogspot.in/2012/02/blog-post_14.html

SPEECHES BY HITLER

DECLARATIONS OF WAR
AGAINST THE SOVIET UNION

http://www.ihr.org/jhr/v19/v19n6p50_Hitler.html

AGAINST THE UNITED STATES OF AMERICA

http://www.ihr.org/jhr/v08/v08p389_Hitler.html

நன்றி எழுத உதவிய தளங்கள்

http://en.wikipedia.org/wiki/Main_Page

http://www.worldfuturefund.org

https://twitter.com/#!/mankuthirai

https://twitter.com/#!/kabulwala

                                                                    

Tuesday, 14 February 2012

ஹிட்லரும் சினிமாவும்

                   ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி. யூதர்களுக்கு எதிராக கொடூரமாக செயல்பட்டவர் என அவரை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கி பேசலாம் . அவர் மறுப்பு கூற இங்கு இல்லை. ஹிட்லர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹிடலர் என்றால் தெரியாதவர்கள் கூட அவரின் மீசை வைத்திருப்பார்கள். ஹிட்லர் மீசை இல்லாமல் அவரா என அவருக்கே ஐயுறும்   நிலையில் இருப்பார்.



ஆனால் இன்றும் அவரை வைத்து பணம் சம்பாதித்துகொண்டுத்தான் இருக்கிறது சினிமா.ஹிட்லர் பற்றியும் ; அவர் யூதர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றியும் இன்று வரை வெளிவந்த சினிமாக்களின் தொகுப்பு 

                                            

1. THE DOWNFALL (2004  )

                       ஹிட்லர் போன்ற முகம் கொண்ட ஒரு படம் வருவதற்கு 2004 வரை திரையுலகம் காத்து இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஹிட்லர்  தன் வாழ்நாளின் கடைசி 12 நாட்கள் பற்றிய படம். ஹிட்லர் பற்றி தெரிந்துகொள்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று . இப்படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 

2. THE GREAT DICTATOR (1940)

                  ஹிட்லர் பற்றி முதல் முறையாக வந்த படம். அந்த துணிவு நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினால் தான் முடிந்து இருக்கிறது. ஹிட்லர் பற்றியும் அவர் யூதர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றியும் ஹிட்லர் வாழும் போது வந்து சர்ச்சை ஏற்படுத்திய படம். இப்படத்தை பார்த்த ஹிட்லர் ஒரு காட்சியை  மட்டும் வேறு மாதிரி நடித்து காட்டினாராம். இது சார்லி அவர்களின் முதல் பேசும் படம். ஒருவர் செய்யும் தவறுகளை நகைச்சுவையாய் சொல்லிய படம். முதல் ஆள்மாறாட்டக்கதை. இப்படத்தின் இறுதியில் சாப்ளின் பேசிய வசனம் மிகவும் பிரபலம் . http://www.oldmagazinearticles.com/Charlie_Chaplins_Final_Speech_from_THE_GREAT_DICTATOR_pdf  

3. HITLER THE RISE OF EVIL (2003) (TV SERIES)

                                                                                 
ஹிட்லர் தன் பிறப்பு முதல் முதல் உலக போர் முடிவு வரை சித்தரிக்கும் ஒரு தொலைக்காட்சி தொடர். இந்த தொடர் பின்பு 2003 இல் திரைப்படமாக வெளிவந்து இரண்டு எம்மி விருதுகளை பெற்றது. ஹிட்லர் தான் அடைந்த நிலைமையை இப்படத்தில் தெளிவாக சித்தரித்து இருப்பார்கள்.  முதல் உலக போர் முடிவில் ஒரு நாய் அடிபட்டு இருக்க அதை ஹிட்லர் தூக்கிச் செல்லுமாறு திரை முடிவடையும்..

தொடர்ச்சி நாளை .....

Wednesday, 8 February 2012

கைதி


                                                    சிக்கனம் , கஞ்சம் , சுயநலம் , இந்த வார்த்தைகளுக்கு தமிழின் ஆழம் நோக்கி வேறு ஒரு வார்த்தை தேடினால் அது தான் அருண் என்ற இந்த கதையின் குறுகிய மனம் உள்ள பாத்திரத்தின் படைப்பு.. 

                                பேச்சில் ஒரு தெளிவு. சீரிய சிந்தனைகளை  வலைதளங்களில் தெளிப்பவன்  , எளிதில் பழகும் பண்பு என ஒரு முகம் . வாழ்விலோ ஒரு கஞ்சம் , இலவசத்தை நம்பி ஓடும் ஒரு ஜீவன்; என ஒரு முகம் . நம்மை போல வலை தளங்களில் மட்டும் வல்லவன். 

                                 தான் செல்லவிருக்கும் ஊருக்கு வீட்டில் இருந்தே உணவு பொட்டலம் கொண்டு வந்திருந்தான்.. நடந்து  வருகிற வழியில் ஒரு கடையில் சிம் கார்டுகள் விற்பனை செய்யபட்டுகொண்டு இருந்தன.. 

                       TALKTIME 999 
                      
                       SIM CARD 99


ஆக்டிவேடட் பண்ணின சிம் சார். 

 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். திடீரென் ஒரு சிம் கார்டு கீழே விழ அதை எடுத்து வைத்து கொண்டான்...

நூறு ருபாய் மிச்சம்..

எப்போதும் போல் அன்ரிசர்வ்வேசனில்  சென்று டிக்கெட் எடுக்காமல் நின்று கொண்டான். வேலூரில் இருந்து ஈரோடிற்கு சென்று கொண்டிருக்கிறான் . 

இரயில் கிளம்பிகிறது. 

அங்கு அவன் சந்திக்கும் நபர்கள் பற்றிய உரையாடல் தான் கதை. 

NOTE ! : மூவரின் பேச்சுகளும் நேர் கூற்றில் தான் வரும்..

NOTE 2 : பெயர் குறிக்கபடாமல்   காட்சிகள் நகரும். இரயில் பயணங்களில் பலர் பெயர் கேட்பதில்லை.

"யோவ் ஜன்னல மூடுயா " உள்ளிருந்து ஒரு குரல்.

ஜன்னல மூடு . உனக்கு குளுருலேன்னா மத்தவங்கள் பத்தியும் யோசி.. 

நீங்க எங்கிருந்து வர்றீங்க 

சென்னைல இருந்து ஜோலார்பேட்டை போகனும் 

இந்த இரயில் அங்க நிக்காதே 

தெரியும் சார் . டிரைன் ஸ்லோவா போகும் . அங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க . சோ எப்பயும் போல் ரன்னிங் தான் 

தம்பி நீ எந்த ஊரு 

திண்டுக்கல் ணா . VIT காலேஜுக்கு வந்தேன் ..

அங்க என்ன பா ?

CULTURALS ணா .. நாளைக்கு தான் முடியுது. ஆனா இன்னிக்கே கெளம்புறேன் ..

என்ன ஊர்ரா இது . சுத்தி பார்க்க ஒரு இடம் கூட இல்ல . ஏதோ கற்கோவில்னு சொன்னாங்க. போய் பார்த்தா வெறும் கல்லு தான் இருக்கு ...

உங்களையெல்லாம் ஊட்டில போய் விட்டாலும் என்னபா இது வெறும் பனியா  இருக்குன்னு வந்துடுவீங்க 

அப்புறம் ஊட்டில என்னதாங்க இருக்கு.போன தடவ ஊட்டி போனப்ப அரை மணி நேரத்துல எல்லாத்தையும் பார்த்துட்டேன். ஏதோ போட் ஹௌசுன்னு சொன்னாங்க. படகுல பெடல் போட்டு வச்சுருந்தாங்க..

அண்ணா ஒரு இடத்துக்கு போனா . அதா மெய்மறந்து பாக்கணும். நீர் வீழ்ச்சின்னா வைரமுத்து சொன்ன மாதிரி அது நீர் எழுச்சிங்ற அளவுக்கு அத  ரசிச்சு பார்க்கணும். இல்லாட்டி வாழுறதே வேஸ்ட்டு.. 

அட ஆம்பூர் வந்துருச்சு போல 

எப்டினா இவ்ளோ இருட்டுலயும் கரெக்டா சொல்றீங்க 

எல்லாம் பிரியாணி வாசத்த வச்சு தான்.

ஏன் யா நீ வேற .. இங்க தோல் பேக்டரி இருக்கு..

ஆமா அண்ணா அதையெல்லாம் மூடியாச்சு. ஆனா இன்னும் வாட மட்டும் போகல 

சரி எங்க வேலை பாக்குறீங்க..

சென்னைலங்க 

சென்னைல எங்க ??

தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க 

இல்ல நந்தனத்துக்கு   வருவேன்.

அங்க தாங்க வேலை பாக்குறேன்

ஆமா அங்க அந்த பெரியார் மாளிகை இருக்கே; அதுக்கும் பெரியாருக்கும் என்னங்க சம்பந்தம்.

அண்ணா உங்களுக்கு உண்மையாவே தெரியாதா இல்ல ச்சும்மா கேக்குறீங்களா

தெரிஞ்சுக்க தான்பா கேக்குறேன். ஒரு லாரி டிரைவருக்கு என்ன தெரியும் சொல்லு 

சரி வேல்லூர்ல அமிர்தியாவது  பாத்துருக்கியா?

ஆமா அந்த காடுதான.

எப்படியா எத சொன்னாலும் வெறுத்து சொல்ற..

அண்ணா நானும் பாத்துருக்கேன் அதுல நீரோடை ஒன்னு இருக்கும் .

ஆமா தம்பி டியுப்ல தண்ணி லீக் ஆனா மாதிரி வருமே அது தான

ஐயோ கஷ்டம் உங்களோட . எதையுமே ரசிக்க மாட்டீங்களா

இவனேலாம் தாஜ் மஹால் கூட்டிட்டு போய் விட்டாலும் , என்னபா வெறும் சுண்ணாம்புல பெயிண்ட் அடிச்சுருக்காங்கன்னு  சொல்லுவான்

சரி அத விடுங்க எங்க வேலை பாக்குறீங்க

அது தான் நந்தனம்னு சொன்னேன்ல

ஆமா ஆமா சொன்னீங்க .

பெரியார் மாளிகைக்கு பக்கத்து பில்டிங்..

அப்ப அங்க வந்தா உங்கள பார்க்கலாம்

என்ன பார்த்து  என்னங்க பண்ண போறீங்க . இரயில் பயணங்கள் நீடிக்காது..

ஏன் இப்படி சொல்றீங்க.. சரி உங்கள வந்து பாக்குறேன்.

ஏன்பா தம்பி பழனில சுத்தி பாக்குற மாதிரி ஏதுனாச்சும் இருக்கா ?

ஒன்னும் இல்லணா . பழனி மலைய சொன்னா . மலைக்கு மேல ஒரு கோவில கட்டி வச்சுருக்காங்கன்னு சொல்ல போறீங்க..

வாணியம்பாடி வந்துருச்சு போல 

ஆமா ஜோலார்பேட்டைல வண்டி நிக்காதுல்ல என்ன பண்ண போறீங்க 

உங்களுக்கு என்ன அம்னீசியாவா 

அப்டீன்னா 

அங்க வேலை நடக்குது. அதுனால மெதுவா தான் போகும். எப்பயும் போல ரன்னிங் தான்..

சரிங்க உங்க நம்பர் கொடுத்தீங்கன்னா ....... 

பேரே தெரியாது. நம்பர் வச்சு என்ன பண்ண போறீங்க 

சரி பேர சொல்லுங்க..

மறுபடியும் சொல்றேன். இரயில் பயணம் நீடிக்காது..

உள்ளிருந்து ஒருவன் வருகிறான் 

தம்பி தம்பி என்ன பண்ற 

ஜோலார்பெட்ல வண்டி நிக்காது எப்படி எறங்குவ?

ரன்னிங்க்ள இறங்கீடுவியா??.

சரி நான் இறங்குற மாதிரி இறங்கு..

பாத்தியா இவ்ளோ நேரம் நம்பர் கேட்டுட்டு இப்ப ஆள காணோம். எங்கயா அந்த மனுஷன்??..

அண்ணா நீங்க நம்பர் கொடுங்க. நான் அவர்ட்ட கொடுத்துடறேன் 

தம்பி நீ இறங்குவியா  ?

சரி உன் பேக்க தூக்கி போடு.

இப்படி இறங்கு 

டே  இறங்கு டா

மறுபடியும் இரயிலில் ஏறி

நீ மொதல்ல இறங்கு பா 

அண்ண உங்க நம்பர் . 

உன் நம்பர் சொல்லு MISSED CALL கொடுக்கறேன் 

9629151439 

பேச்சுக்கள் முடிந்தது 

இரயிலில் இரங்கியவாறு அவர் அலைபேசி எடுத்து என் நம்பரை அழுத்தி 'ஹலோ' என்றார்   ; விரைவாக சென்ற வண்டியின் வேகத்தில் முன்னர் இருந்த ப்ளேட்பாரம் கம்பியில் இடித்து ரத்தம் வழிய அவர் இறப்பதை அவன் பார்த்தான்..

மண்டயில் ஏதேதோ சொல்ல 

இரயில் கம்பிய புடிச்சு இழு 

கத்து 

ஏதாவது பண்ணு 

திடீரென அவ்வாறு தோன்றியது

ஏன் கத்தனும். நமக்கெதுக்கு இந்த வேலை.

சிம்மை கழற்றி தூக்கி எறிந்தான்..

100 ரூபாய் சிம் உதவியது..



Wednesday, 1 February 2012

DIAL M FOR MURDER

                                       நான் மிகவும் பார்த்து அதிசயித்த படம் . இந்த படத்தை உலக சினிமா என்று சொன்னதிற்காக ஆறு மாதத்திற்கு முன்   பதிவிறக்கம் செய்தேன். முதலில் பார்க்க ஆரம்பித்த போது . சுத்தமாக பிடிக்கவில்லை.  விரைவாக முன்னோக்கினேன். ஏன் பதிவிறக்கம் செய்தோம் என்று யோசிக்க வைத்துவிட்டது. அப்படி ஒரு நீ....ளம். ஐவர்  மட்டுமே கதையில் வருகிறார்கள்.

                    சென்ற மாதம் வேலை ஏதும் இல்லாததால் மீண்டும் பார்த்தேன். 

 ஒரு படத்திற்கு BUDGET , CASTING என்று எதுவும் முக்கியம் இல்லை என்று சட்டென உணர்த்தும் ஒரு படம்.. 
                                       

                              

                                    கதை  கண்டிப்பாக ஒரு வரி தான்.மனைவியின் தவறான உறவிற்காக கணவன் (RAY MILLAND )தன பால்ய நண்பனை (DAWSON) வைத்து அவளை கொலை செய்ய திட்டமிடுகிறான்.கொலை செய்துவிட்டு அவளின் பணத்தை பெற முயல்கிறான்.

                        கொலை செய்யும்  திட்டத்தின் ஒவ்வொரு FRAME இலும் ALFRED HITCHCOCK இன் நேர்த்தி பளிச்சிடிகிறது. கொலை செய்யும் திட்டத்தை சொல்லி முடித்தவுடன் MILLAND தன நண்பன் DAWSON பயன்படுத்திய பொருட்களில் அவன் ரேகையை துடைக்கும் SHOT அருமை... 

                          DAWSON கொள்ளபடுவதும், அதை தன் மனைவியின் மீது குற்றம் சுமத்தாமலே அவளை மாறிவிடும் இடத்திலும் MILLAND இன் நடிப்பு ஈர்க்கிறது..  

                          படத்தின் இறுதியில் உண்மையை கண்டுபிடித்து அந்த போலீஸ்காரர் தன் மீசையை முறுக்கும் போது ஏனோ நம் சினிமா பார்த்து எழுத்து போன்றதொரு உணர்வு ..
  
படத்தில் பார்க்க வேண்டிய காட்சிகள் 

1 ) கொலை செய்வதற்கு நேரம் குறித்து , MILLAND பார் ஒன்றில் நேரத்தை சரி பார்க்க தன் கடிகாரம் ஓடாமல் இருக்கும் காட்சி.முதல் திருப்பம் ...

2 ) கொலை செய்ய அனுப்பிய ஆள் தவறி தானாக இறப்பதும் அதற்கு ஏற்றார் போல் MILLAND கதை சொல்வதும்...

3 )மனைவியின் கள்ள காதலன் கற்பனையாக ஒரு கதை சொல்ல அதுதான் உண்மை என்று ஊர்ஜீனம் செய்வது..

4 ) MILLAND சாவியை ஒலித்து வைக்க சொல்லும் இடத்தை போலீஸ் இறுதியில் கண்டுபிடிப்பது  
STORY , SCREENPLAY : FREDRICK 
DIRECTION : ALFRED HITCHCOCK 

Monday, 30 January 2012

வாலு

                                     
                                                                
                                                                வாலு
     
               எப்பயும் போல ஜெயா வீட்டு சந்துல கத்திக்கிட்டு இருந்துச்சு.

        கிர்ர்ர்ர்

        கிரர்ர்ர்ரர்ர்ர்ர்

         கிர்ர்

        "ஜெயா என்ன கத்துற "  சந்தோரமாய் எட்டி பார்த்தேன் ...

        நான் தான் சிங்கம் கிர்ர்ர்ரர்ர்ர்ர் கிர்ர்ரர்ர்ர்ர்

        சிங்கமா??  சரி சிங்கம்னா வாலு இருக்கணும் தெரியுமா. உனக்கு தான் வால் இல்லையே 

         தன்னை தான் பின்புறமாய் திரும்பி பார்க்க நினைத்து சுற்றி விழுந்தாள்..

        தனக்கு இல்லை என்பது போல் நினைத்து நமட்டு சிரிப்பு சிரித்தாள்..

        எனக்கும் சங்கடமாய் பட்டது ,ஒரு குழந்தையை ஏமாற்றியது..

      சட்டென பதில் வந்தது அவளிடம் . நிசப்தம் மட்டுமே என்னிடம்

                 

       ஆமா எனக்கு இல்லை அண்ணாக்கு இத்துகூண்டா  முன்னாடி நீட்டீட்டு இருந்துச்சு..